/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
எடையை குறைப்பதற்கு கை கொடுக்கும் 'ஏ.ஏ.சி., பிளாக்'
/
எடையை குறைப்பதற்கு கை கொடுக்கும் 'ஏ.ஏ.சி., பிளாக்'
எடையை குறைப்பதற்கு கை கொடுக்கும் 'ஏ.ஏ.சி., பிளாக்'
எடையை குறைப்பதற்கு கை கொடுக்கும் 'ஏ.ஏ.சி., பிளாக்'
ADDED : ஜூன் 13, 2025 10:11 PM

அடுக்குமாடி கட்டடங்கள் கட்டுவதற்கு, லைட் வெயிட் பிளாக் எனப்படும் கற்கள் பயன்படுத்தப்படுவதாக, 'காட்சியா' உறுப்பினர் சந்தோஷ் குமார் தெரிவித்தார்.
அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டதாவது...
உயரமான கட்டடங்கள் கட்டும் போது, லைட் வெயிட் பிளாக் கற்களை பயன்படுத்துவதால், கட்டடத்தின் எடை வெகுவாக குறைகிறது. கட்டடத்திற்கு பயன்படுத்தப்படும் கம்பிகளின் தேவையும் சற்றே குறைகிறது. அதனால் கட்டுமான செலவும் சற்றே குறைகிறது.
இந்த கற்களை உபயோகிப்பதால், வேலை வேகமாக நடைபெறுகிறது. பணியாளர் கூலி செலவும் சற்று குறைகிறது. இந்த கற்களுக்கென்று தனியாக 'பைண்டிங் பேஸ்ட்'கள் உள்ளன. அதை கொண்டு சுவர்களை கட்ட வேண்டும். சாதாரண வீடுகள் கட்ட இந்த கற்களை பயன்படுத்தலாமா என்று கேட்டால், நாம் எந்தவிதமான கட்டுமான முறையில் கட்டுகிறோம் என்பதை பார்க்க வேண்டும்.
இரண்டு விதமான கட்டுமான முறைகள் உள்ளன. ஒன்று 'லோடு பியரிங் ஸ்ட்ரக்சர்', மற்றொன்று 'பிரேம்டு ஸ்ட்ரக்சர்'. இதில், பிரேம்டு ஸ்ட்ரக்சர் என்பது பில்லர் மற்றும் பீம் கொண்டு கட்டும் கட்டுமான முறை. இந்த வகையான கட்டுமான முறைகளில், இந்த ஏ.ஏ.சி., பிளாக்குகளை தாராளமாக உபயோகிக்கலாம். லோடு பியரிங் ஸ்ட்ரக்சர் கட்டுமான முறைகளில், இந்த கற்களை உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது. இக்கற்கள், வெளிப்புற வெப்பத்தை குறைவாகவே உட்புறம் கடத்தக்கூடியது. உட்புற கலவைப் பூச்சுக்கு மாற்றாக 'ஜிப்சம் பிளாஸ்டர்' என்று சொல்லக்கூடிய புதிய வகை பூச்சினையும் அந்த கற்களின் மீது நேரடியாக பயன்படுத்தலாம். இதனால் உட்புற சுவர்களில் பட்டி பார்க்கவேண்டிய அவசியமும் இல்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.