/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
அரைக்கல் செங்கல் கட்டடம் அருகே இன்னொரு சுவர்: சரியான முறையா என பொறியாளர்கள் விளக்கம்
/
அரைக்கல் செங்கல் கட்டடம் அருகே இன்னொரு சுவர்: சரியான முறையா என பொறியாளர்கள் விளக்கம்
அரைக்கல் செங்கல் கட்டடம் அருகே இன்னொரு சுவர்: சரியான முறையா என பொறியாளர்கள் விளக்கம்
அரைக்கல் செங்கல் கட்டடம் அருகே இன்னொரு சுவர்: சரியான முறையா என பொறியாளர்கள் விளக்கம்
ADDED : நவ 07, 2025 09:14 PM

நாங்கள் புதிய வீடு கட்டுவதற்கு நிலத்தடி தண்ணீர் தொட்டி கட்ட குழி தோண்டி இருக்கிறோம். குழியின் உட்புறம் அடிப்பகுதியில் ஒரு பக்கம் மேடாகவும், இன்னொரு பக்கம் தாழ்வாகவும் உள்ளது. அப்படியே மெட்டல் கான்கிரீட் அமைத்து மேலே கட்டலாமா? செங்கல் கட்டடமாக கட்டலாமா அல்லது கான்கிரீட் வாயிலாகத்தான் கட்ட வேண்டுமா?
-குமார், சுகுணாபுரம்.
தண்ணீர் தொட்டியின் குழியின் உட்புறம், சரிசமமாக தரைத்தளம் இருக்க வேண்டும். அதில் எட்டு இன்ச் அளவிற்கு மெட்டல் கான்கிரீட் போடலாம். அதன் மேல் கம்பி கட்டி, ஒரு 'மேட் கான்கிரீட்'டும் போட்டால் இன்னும் சிறந்தது. களிமண் பூமியாக இருக்கும் பட்சத்தில் ஆர்.சி.சி., தொட்டி அமைப்பது சிறந்தது.
எங்களது வீடு கட்டி, 20 வருடங்கள் ஆகிறது. இப்பொழுது எங்கள் தேவைக்காக மேலே முதல் தளம் எடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம். ஆனால், கைப்பிடி சுவரானது அரைக்கல் செங்கல் கட்டடமாக உள்ளது. கொத்தனார் அதன் அருகே இன்னொரு அரைக்கல் சுவர் எழுப்பி, அதன்மேலே முதல் தளம் எடுக்கலாம் என்று சொல்கிறார்; இது சரியான முறையா?
-வெங்கடேசன், தடாகம்.
இது முற்றிலும் தவறானதாகும். பழைய அரைக்கல் சுவரை இடித்து விட்டு முழுமையாக, 9 இன்ச் சுவர் எழுப்பி கட்டுவது சிறந்த முறையாகும்.
புதிதாக கட்டடம் கட்டுவதற்கு முன், மண் பரிசோதனை செய்ய வேண்டுமா?
-சுகுமார், பீளமேடு.
புதிதாக கட்டப்படும் கட்டடங்களுக்கு மண் பரிசோதனை மிகவும் அவசியம். மண் பரிசோதனை செய்து கட்டப்படும் கட்டடங்கள் மிக உறுதியாகவும், அடித்தளத்தின் கட்டுமான செலவை குறைக்கவும் உதவும்.
இன்றைய நவீன கட்டுமானங்களில் கூட, 'பெஸ்ட் கன்ட்ரோல்' செய்வது அவசி யமா? தேவை இல்லை என்கிறார் மேஸ்திரி. என்ன செய்வது; ஆலோசனை கூறவும்.
-பூங்கொடி, சிங்காநல்லுார்.
புதிதாக கட்டப்படும் கட்டடங்களுக்கு கரையான் மருந்து அடிக்க வேண்டியது அவசியம். மூன்று நிலைகளில் கரையான் மருந்தை அடிக்க வேண்டியது நல்லது. ஒன்று பவுண்டேஷன், இரண்டாவது பி.சி.சி., எனும் புளோரின் கான்கிரீட்டுக்கு முன், மூன்றாவது டைல்ஸ் கிரானைட் புளோர் பினிஷிங் முன்.
நான் கட்டிக்கொண்டிருக்கும் புதிய வீட்டில், 'பால் சீலிங்' செய்யலாம் என்று உள்ளேன். அதற்கு கட்டடத்தின் உயரம் எவ்வளவு வைக்க வேண்டும்.
-வசந்தகுமார், முல்லை நகர்.
பால்ஸ் சீலிங் செய்யும் பொழுது, நமது கட்டடத்தின் தரைத்தளம் முதல் சீலிங் உயரம், 11 அடியாக இருக்க வேண்டும்.
'ஐட்டம் வைஸ் ரேட்', சதுர அடி ரேட் ஆகிய இரண்டில் எது சிறந்தது?
-அறிவழகன், சரவணம்பட்டி.
புதிதாக கட்டப்படும் கட்டடங்களுக்கு, சரியான பொருட்களை தேர்வு செய்து துல்லியமாக மதிப்பீடு செய்து, 'ஐட்டம் வைஸ்' விலையில் செய்வது மிக சிறந்தது. கட்டடம் கட்டும்போது இடையில் செய்யும் மாற்றங்களுக்கு, சரியான மதிப்பீட்டை செய்ய முடியும். நிர்ணயிக்கப்பட்ட பட்ஜெட்டில் கட்டடத்தை முடிக்க இது உதவும்.
-பொறியாளர் பிரேம்குமார் பாபு
செயலாளர்,
கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம்.

