/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
சரியான முறையில் பில்லர் அமைத்து வீடு கட்டுகிறீர்களா?
/
சரியான முறையில் பில்லர் அமைத்து வீடு கட்டுகிறீர்களா?
சரியான முறையில் பில்லர் அமைத்து வீடு கட்டுகிறீர்களா?
சரியான முறையில் பில்லர் அமைத்து வீடு கட்டுகிறீர்களா?
ADDED : ஜூன் 29, 2024 07:32 AM

கட்டடம் பில்லர் போட்டு கட்டினால், ரூப் கான்கிரீட் வேலை செய்யும் போது, ரூப் பீம் எனப்படும் பீம் அமைத்து கான்கிரீட் போடுவது, மிகவும் அவசியமான ஒன்று.
இதுகுறித்து, கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்க (காட்சியா) செயற்குழு உறுப்பினர் சந்தோஷ்குமார் கூறியதாவது: பில்லரில் போடப்படும் முதன்மை கம்பி, குறைந்தபட்சம் 12 எம்.எம்., ஆக இருக்க வேண்டும். 8 எம்.எம்., 10 எம்.எம்., கம்பிகளை பில்லரின் ரிங்குகளுக்கு உபயோகிக்கலாம்; முதன்மை கம்பியாக பயன்படுத்தக் கூடாது.
பில்லரில் போடப்படும் கான்கிரீட், சிறிய வீடுகளாக இருந்தால் 1:1.5:3 என்ற விகிதத்தில் பயன்படுத்தலாம். பெரிய கட்டடங்களுக்கு பொறியாளரின் ஆலோசனை பெற்று பயன்படுத்துவது நல்லது. பில்லர் போட்டு கட்டினால், ரூப் கான்கிரீட் வேலை செய்யும் போது, ரூப் பீம் எனப்படும் பீம் அமைத்து கான்கிரீட் போடுவது அவசியம்.
அப்படி ரூப் பீம் இல்லாமல், வெறும் ரூப் ஸ்லாப் கான்கிரீட் மட்டும் அமைத்தால், நாம் போட்ட பில்லர்களால் எந்த பயனும் இல்லை. சிலர் சொல்வார்கள்... 'தரைமட்டத்தில் நாங்கள் பிளின்த் பீம் (பெல்ட் பீம்) அமைத்தோம்; அதனால் ரூப்பில் பீம் போடவில்லை' என்று. அது தவறான முறை.
அப்படி செய்தால், கட்டடத்தின் மொத்த பாரமும் பிளின்த் பீமுக்கே வருவதால், அது தாங்குமா என்பது சந்தேகம்தான். பில்லருக்கு எந்த பாரமும் வராததால், பிளின்த் பீமுக்கு மேல் ரூப் வரை போடப்படும் பில்லர், பயனற்று போகிறது.
எனவே, நாம் ஒவ்வொரு தளத்திற்கும் ரூப் கான்கிரீட் போடும் போதும், ரூம் பீம் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. வீடு கட்டுவதற்கு முன், பொறியாளரின் ஆலோசனை பெற்று அல்லது வரைபடம் பெற்று கட்ட வேண்டும். தவறான முறைகளில் கட்டி பணத்தை வீணடிக்க வேண்டாம். இவ்வாறு, அவர் கூறினார்.