sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கனவு இல்லம்

/

ஆலோசனை

/

இடிகரையில் டி.டி.சி.பி., சைட் என்ன விலைக்கு வாங்கலாம்?

/

இடிகரையில் டி.டி.சி.பி., சைட் என்ன விலைக்கு வாங்கலாம்?

இடிகரையில் டி.டி.சி.பி., சைட் என்ன விலைக்கு வாங்கலாம்?

இடிகரையில் டி.டி.சி.பி., சைட் என்ன விலைக்கு வாங்கலாம்?


ADDED : ஜூலை 25, 2025 09:02 PM

Google News

ADDED : ஜூலை 25, 2025 09:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை குனியமுத்துாரில் நிலவரையறை செய்யப்பட்டுள்ள டி.டி.சி.பி., அனுமதி பெறுவது எப்படி? அதற்கு தேவையான இணைப்பு ஆவணங்கள் என்னென்ன வேண்டும்?

-அல்தாப் உசேன், குனியமுத்துார்.

நிலம் வரன்முறைப்படுத்தப்பட்டுள்ளது என்பது, அடுத்தகட்ட நடவடிக்கையான கட்டட அனுமதிக்கு உண்டான நிலைதான். எனவே, உங்களுக்கு தெரிந்த எல்.பி.எஸ்.,ஐ அணுகி, அடுத்தகட்ட நடவடிக்கைக்கு ஆவண செய்யவும். அவரே, தேவையான ஆவணங்களை பற்றி விளக்குவார்.

கோவை மாவட்டம், குருடம்பாளையம் கிராமம், என்.ஜி.ஜி.ஓ., காலனியில் 2011ம் ஆண்டு (மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து ஒரு கி.மீ.,), அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு தளங்களுடன், 12 வீடுகள், 1,050 சதுரடியில், யு.டி.எஸ்., 450 சதுரடி விற்பனைக்கு வருகிறது. என்ன விலைக்கு வாங்கலாம்?

-வைரவன், கோவை.

தாங்கள் கூறும் என்.ஜி.ஜி.ஓ., காலனி என்பது, குருடம்பாளையம் கிராமத்தில் பிரபலமானது. கடந்த, 15 ஆண்டுகளில், 40க்கும் மேற்பட்ட அபார்ட்மென்ட்கள் கட்டி உள்ளார்கள். வாடகை சுமார் ரூ.10 ஆயிரம் முதல், 11 ஆயிரம் வரும் எனில், இதன் மதிப்பு ரூ.40 முதல், 45 லட்சம் பெறும்.

கோவை மாவட்டம், இடிகரை பஞ்சாயத்தை சேர்ந்த சந்திரா நகரில், 31.6*47 அடி கிழக்கு பார்த்த டி.டி.சி.பி., அப்ரூவல் சைட்டை என்ன விலைக்கு வாங்கலாம்?

- பிரதீப் பாபு, கோவை.

தாங்கள் கூறும் இடம், துடியலுாரில் இருந்து ஆறு கி.மீ., தொலைவில் இருப்பதாக தெரிகிறது. ஐ.டி., பார்க் பகுதியில் இருந்து, மூன்று கி.மீ., தொலைவில் உள்ளது. தற்போது, இடிகரை கிராமம் ரெசிடென்சியல் பகுதியாக உள்ளது. சென்ட் ஒன்றுக்கு ரூ.10 லட்சம் பெறும்.

கோவை, தண்ணீர் பந்தல் ரோட்டில், 2010ல் கட்டிய, 1,000 சதுரடி ஆர்.சி.சி., தாரஸ் கட்டடம், 2017ல் விலைக்கு வாங்கப்பட்டது. உரிய வரி கடந்த, 2025 வரை செலுத்தப்பட்டது. 640 அடிக்கு தாரஸ் கட்டடம் எழுப்பி உள்ளாட்சி நிர்வாகத்துக்கு உரிய கட்டணம் செலுத்தப்பட்டது. வாங்கும்பொழுது விளாங்குறிச்சி பஞ்சாயத்து, வரி விதிப்பாளர் பார்வையிட்டு தரைதளம், ஒன்றாம் தளம், இரண்டாம் தளம் வரி விதித்தும், வரைபடம் இல்லை என்று அபராதம் விதித்துள்ளார்.

தொழிலாளர் நல கட்டணம் என்ற பெயரில், 'லேபர் வெல்வேர் பண்டு' என்ற பெயரில், 2025ம் ஆண்டு மார்ச், 28ல் வசூலிக்கப்பட்டது. கட்டடத்தின் பரப்பளவு, 1,934 சதுரடி, வரி விதிப்புக்கு தரைதளம், 4,000 சதுரடி, முதல் தளம், 7,000 சதுரடி, இரண்டாம் தளம், 1,800 சதுரடி, சேவை கட்டணம், ரூ.9,000, நலத்திட்ட கட்டணம் ரூ.16 ஆயிரத்து, 870 வசூல் செய்துள்ளனர். இது, சரியா, தவறா?

-வரதராஜன், வெள்ளலுார்.

தங்களது கேள்விக்கான முழுமையான பதிலை சம்பந்தப்பட்ட ஆவணங்களை பார்க்காமல் சொல்ல இயலாது. எனினும், பொதுப்படையாக கடந்த ஒன்றரை ஆண்டுக்குள் மாநகராட்சி நடத்திய, டிரோன் சர்வேயில் நிறைய குளறுபடிகள் உள்ளதாக மக்கள் வருத்தமும், கொந்தளிப்பும் அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தங்களுக்கு தெரிய வேண்டிய தகவல்களை ஒருபுறம் தகவலாக கேட்பதுடன், மறுபுறம் கேள்விகளாக வரி விதிப்பவர், வரி மேல்முறையீட்டு கமிட்டிக்கு முறையீட்டு மனுவாக போட்டு பதிவு தபாலில் பதிந்து, அவரது நடவடிக்கைக்கு காத்திக்கலாம்.

-தகவல்:

ஆர்.எம்.மயிலேறு

கன்சல்டிங் இன்ஜினியர்.






      Dinamalar
      Follow us