/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
கவுண்டம்பாளையத்தில் 10 ஆண்டு பழமையான கட்டடத்தை என்ன விலை கொடுத்து வாங்கலாம்?
/
கவுண்டம்பாளையத்தில் 10 ஆண்டு பழமையான கட்டடத்தை என்ன விலை கொடுத்து வாங்கலாம்?
கவுண்டம்பாளையத்தில் 10 ஆண்டு பழமையான கட்டடத்தை என்ன விலை கொடுத்து வாங்கலாம்?
கவுண்டம்பாளையத்தில் 10 ஆண்டு பழமையான கட்டடத்தை என்ன விலை கொடுத்து வாங்கலாம்?
ADDED : செப் 27, 2025 12:44 AM

* ஏரியா நிலவரம் எப்படி?
கோவை மாவட்டம், சத்தி மெயின் ரோடு, கோவை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, 15 கி.மீ., தொலைவில், இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. 200 அடி மெயின் ரோட்டை ஒட்டிய இந்த இடம் விற்பனைக்கு வருகிறது. என்ன விலை கொடுத்து வாங்கலாம்?
- பி.பெருமாள், கணபதி.
அவிநாசி, திருச்சி, பொள்ளாச்சி போன்ற ஊர்களுக்கு செல்லும் பகுதிகள் விரிவடைந்து கொண்டிருக்கிற நிலையில், விரிவாக வேண்டிய ஒரே இடம் சத்தி ரோடுதான். இனிமேல் வளர்ச்சிகள் வர வாய்ப்பு உண்டு. தற்போது, சாலை விரிவாக்க பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், ரோட்டில் மேல் இரண்டு ஏக்கருக்கு, 200 அடி என்பது சற்று குறைவாக இருந்தாலும் ரூ.5 கோடி என்று சாதாரணமாக கொடுப்பது தவறில்லை.
கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் கிராமம், அருண் நகரில் டி.டி.சி.பி., சைட், 40*60, 5.5 சென்ட் இடம் மற்றும், 10 வருடங்கள் பழமையான, 1,250 சதுரடி கீழ்தளமும், 1,250 சதுரடி மேல் தளமும் விற்பனைக்கு வருகிறது. என்ன விலை கொடுத்து வாங்கலாம்?
- எம்.சுப்ரமணியம், கவுண்டம்பாளையம்.
கோவையில் இருந்து கேரளா செல்ல, பாலக்காடு ரோட்டை தவிர, கணுவாய், தடாகம் வழியாக ஒரு ரோடு செல்கிறது. இந்த ரோடும் விரிவடைய வேண்டிய பக்குவத்தில்தான் உள்ளது. இந்த ரோட்டில் டி.வி.எஸ்., நகர் என்பது மிகவும் தொன்மை வாய்ந்த, 40 ஆண்டுகளான லே-அவுட் ஆகும்.
அதற்கு நேர் பின்புதான், தாங்கள் கூறும் அருண் நகர் அமைந்துள்ளது. இந்த இடத்தில் ரூ. 15 லட்சத்தில் இருந்து ரூ.17 லட்சம் வரை சென்ட்டுக்கு தரலாம். வீட்டுக்கு என ரூ.1,000 சதுரடிக்கு கணக்கு செய்து, தொகையை தெரிந்து கொள்ளவும். வாங்கி போடுவதில் எந்த விதமான நஷ்டமும் வந்துவிடாது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா, பொள்ளாச்சி நகராட்சியை ஒட்டி காந்தி நகரில், 6 சென்ட் இடம், 3,000 சதுர அடிகள் கொண்ட கீழும், மேலுமாக உள்ள ஆர்.சி.சி., 35 வருடங்கள் பழமையான வீடு விற்பனைக்கு வருகிறது. என்ன விலை கொடுத்து வாங்கலாம்.
-ஒய். பாலாஜி, சூலுார்.
தாங்கள் குறிப்பிடும் இடம், பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, 5 கி.மீ., மற்றும் பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் இருந்து, 5 கி.மீ., ஆக வால்பாறை செல்லும் வழியில் உள்ளது. இந்த பகுதி இன்னும் விரிவடைவதற்கு கொஞ்ச காலம் ஆகலாம்.
எனவே, சென்ட் ரூ.6 லட்சம் என்பது சரியாக இருக்கலாம். இருப்பினும் அக்கம், பக்கத்தில் விசாரித்து தெரிந்து கொண்டு வாங்க முயற்சிக்கவும்.
-தகவல்:
ஆர்.எம். மயிலேறு,
கன்சல்டிங் இன்ஜினியர்.