/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
பழைய கட்டடம் மீது புதிய கட்டடம் அமைப்பதில் கவனம்
/
பழைய கட்டடம் மீது புதிய கட்டடம் அமைப்பதில் கவனம்
ADDED : ஜன 24, 2025 11:06 PM

கட்டடங்களில் பழைய கட்டடம், புதிய கட்டடம் என எதுவாயினும், முதல்மாடி கட்டும்போது விழிப்புணர்வு மிகவும் அவசியம். ஐந்து முதல் ஏழு வயதான கட்டடங்களில் மேற்கூரையில் 'எலக்ட்ரிக் பேன் பாக்ஸ்' மற்றும் 'ஜங்ஷன் பாக்ஸ்', ஊஞ்சல் ஊக்கு பாக்ஸ்கள் அமைத்த இடங்களில்தான், பெரும்பாலும் முதல்மாடி கட்டும் போது நீர்க்கசிவு உடனே ஏற்படும்.
காரணம், இந்த பாக்ஸ் உயரமும், கான்க்ரீட் கனமும் பெரிய வித்தியாசம் இல்லாமல் இருப்பதாகும். இதனால், பாக்ஸ் மேற்புறம் கான்க்ரீட் கனம் மிக மிக குறைவாக, அதாவது வெறுமனே ஜல்லி இல்லாத கலவை மேற்பகுதி தென்படும் சூழல் ஆகிறது.
இதனால் இந்த பகுதி வலுவிழந்து இருக்கும். இங்கு மேற்புறம் விரிசல் கண்ணுக்கு புலப்படாத வகையில் இருக்கும்; நீர்க்கசிவு உடனே ஏற்படும்.
'கொசினா' முன்னாள் தலைவர் பாலமுருகன் கூறியதாவது:
சுவர் அல்லது பில்லர் அமைத்தவுடன் இடைவெளி இருக்கும். இந்த இடைவெளியை உடனே தக்க வாட்டர் பூரூப் கலவை கொண்டு சமன் செய்ய வேண்டும். சுவருக்கு உண்டான முதல் வரிசை கற்கள் வைக்கும் போது, இந்த இடைவெளியை கையோடு சிமென்ட் கலவை கொண்டு பூசிவிட வேண்டும்.
மிகவும் வயதான கட்டடங்களில், மேற்கூரையில் மரத்தால் ஆன 'பாக்ஸ்'தான் வைத்திருப்பார்கள். அங்கு மிகவும் வலுவிழந்து தான் இருக்கும்.
பொதுவாக மேற்கூரை அடிபுறம் கான்கிரீட்டில், நீர் கசிவு ஓரிரு இடத்தில் தென்படும். ஆனால், நீர் அங்கு இருக்காது. நீர் கசிவானது, கான்கிரீட் எங்கு வலுவிழந்து இருக்கிறதோ அங்குதான் ஏற்படும்.
எனவே, நீர்க்கசிவை பொறுத்தவரை எந்தப்பகுதி என அடையாளம் காண இயலாது. அதற்கென்று ஸ்கேனர் உள்ளது. ஆனால், பயன்பாட்டில் பெரும்பாலும் இல்லை. முதல் மாடி கட்டும்போது இம்மாதிரி சிரமங்களில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
அறைகளில் ஈரத்தன்மையால் உடல் ஒவ்வாமை ஏற்படுகிறது. மொட்டை மாடி மழைநீர் வடிகால் அமைப்பு ஒவ்வொரு திசையில் இருக்கும் சூழலில், மேல்மாடி அறைகளின் சுவர் ஒவ்வொரு நேர்கோட்டில் மாறி மாறி வரும். இதனால் மழைநீர் வடிகால் அமைப்பு தடைபடும்.
மேற்கூரை அமைக்கும் வரை, இந்த சிரமங்கள் உண்டு. நீராற்றல் நீரும் வெளியேற முடியாமல் போகும். பழைய மழை நீர் குழாய் போக, மேலும் வடிகால் வசதிக்காக ஓரிரு இடத்தில் துளைகள் செய்து, நீர் தேக்கம் இல்லாமல் வெளியேறும்படி, அமைப்பு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

