/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
வங்கி மதிப்பீட்டாளர் ஆய்வும் மதிப்பீடும்
/
வங்கி மதிப்பீட்டாளர் ஆய்வும் மதிப்பீடும்
ADDED : பிப் 07, 2025 10:18 PM

மதிப்பீட்டாளர் அமைப்பின் கோவை கிளை(ஐ.ஓ.வி.,) தலைவர் அடைக்கலவன் கூறியதாவது: தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகளின்படி இருந்தால்தான், கட்டட அனுமதி பெற முடியும். தற்போது இந்த ஆன்லைன் பதிவு முறையில், கட்டட விதிமுறைகள்படி இல்லாத, நிறைய வரைபடங்களுக்கு, கட்டட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதில் மிக முக்கியமான சாராம்சம், கட்டட உரிமையாளர் விதிமுறைகளின்படி தான் கட்டடம் கட்டுவேன் என்று உறுதி ஆவணம் தருகின்றார்.
ஆனால், விதிமுறைகள் மீறி வரைபடம், கோப்புகள் ஆன்லைன் பதிவு எடுத்து கொள்கின்ற காரணத்தால், விதிமுறைகள் மீறி கட்டட அனுமதிக்கான கட்டணத்தையும் செலுத்த அனுமதி தந்து விடுவதால், கட்டட அனுமதியும் பெற்று வங்கிகளில் சமர்ப்பித்து, கடன் பெறும் விதமாக உள்ளது. இப்படி வந்த ஆவணத்தில், வங்கி சட்டப்படி கட்டட விதிமீறல் இருந்தால், அதற்கு வங்கிக் கடன் தர இயலாது. இதனை ஆய்வு செய்ய வரும் மதிப்பீட்டாளர், பொறுப்பு ஏற்கக்கூடிய சூழ்நிலை உள்ளது. வங்கி சட்டப்படி விதி மீறல்கள் இருந்தால், மதிப்பீட்டாளரின் வங்கி அங்கீகாரம் ரத்து செய்து, சட்ட நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு வந்து விடும்.
வங்கியானது, மதிப்பீட்டாளர் ஆய்வை நம்பித்தான், கடன் தொகையை தீர்மானிக்கிறது. வங்கி கடன் தந்த பிறகு, அரசு விதிமுறைகள் மீறி உள்ளது என்று காரணம் காட்டி, கட்டட அனுமதி ரத்து செய்தால் என்னாவது. பாதிக்கப்படுவது கட்டட உரிமையாளர் தான். விதிமுறைகள் சரியாக கடைபிடிக்காததால், அவருக்கு சிக்கல் உண்டாகிறது. அரசு தரப்பில் ஆவணங்கள் சரிபார்த்த பின் அனுமதி தந்தால், இந்த சிக்கல் வராது.
கட்டட அனுமதிக்காக, மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையை தவிர்க்கத்தான் இந்த திட்டம். கட்டட உரிமையாளர்களுக்கு, தக்க விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. எனவே, ஆன்லைன் முறையின் போதே, விதிமுறைகள் சரியாக உள்ளதா என்று பார்ப்பது நல்லது. இவ்வாறு, அவர் கூறினார்.