/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
ஈச்சனாரி கோவில் பின்புறம் நிலத்துடன் வீடு வாங்கலாமா?
/
ஈச்சனாரி கோவில் பின்புறம் நிலத்துடன் வீடு வாங்கலாமா?
ஈச்சனாரி கோவில் பின்புறம் நிலத்துடன் வீடு வாங்கலாமா?
ஈச்சனாரி கோவில் பின்புறம் நிலத்துடன் வீடு வாங்கலாமா?
ADDED : ஜூன் 27, 2025 10:10 PM
எனக்கு கணியூரில், 1.30 ஏக்கர் இடம் மற்றும் அதில், 5,000 சதுரடியில் அமைக்கப்பட்ட குடோன் காலியாக உள்ளது. மேலும், 5,000 சதுரடிகள் கொண்ட கட்டடம் கட்ட உள்ளேன். இதை திருமண மண்டபமாக மாற்ற உள்ளேன். இதற்கு எப்படி அனுமதி பெற வேண்டும். என்னென்ன சான்றிதழ்கள் பெற வேண்டும் என தெளிவுபடுத்தவும்.
-சுப்பிரமணியன், கணியூர்.
முதலில் உங்கள் இடத்தின் எஸ்.எப்., எண் கடந்த, 1995ம் ஆண்டு தயார் செய்து நிலுவையில் உள்ள மாஸ்டர் பிளான்படி, எந்த உபயோகத்திற்கு வருகிறது என்று பார்க்க வேண்டும். விவசாயம் என்று வந்தால் கடந்த ஐந்து ஆண்டுகளாக விவசாயம், விளைச்சல் ஏதுமில்லை என, கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெற்று, திருமண மண்டபத்திற்கு என்.ஓ.சி., வாங்க வேண்டும்.
அதன்பின், டீ.டி.சி.பி.,க்கு திருமண மண்டபம் என படம் வரைந்து, அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவர்களும் தங்கள் இடத்திற்கு அணுகுபாதையாக, 30 அடி சாலை உள்ளதா என்பதை பார்ப்பதுடன், போதுமான கழிப்பிடங்கள் மற்றும் கார் நிறுத்தங்கள் என விவரிக்கப்பட்ட தேவைகள் பூர்த்தி ஆகிறதா என, பார்த்து அனுமதி வழங்குவார்கள்.
* ஈச்சனாரி விநாயகர் கோவில் பின்புறம், டீ.டி.சி.பி., சைட்டில், 30 அடி தடத்தில் நான்கு சென்ட் இடம் மற்றும் அதில் கட்டியுள்ள, 1,000 சதுரடிகள் கொண்ட தரைதளம், 10 ஆண்டுகள் பழமையான வீடு விற்பனைக்கு வருகிறது; என்ன விலை கொடுத்து வாங்கலாம்?
-சந்திரசேகரன், கோவை.
ஈச்சனாரி கோவில் பின்புறம் என்பது, இன்று வளர்ந்து 'டிமாண்ட்' ஆக உள்ள குடியிருப்பு பகுதியாகும். இடத்தின் விலை என்று பார்க்கும்பொழுது சென்ட் ரூ.12.5 லட்சம் என்பது பழுதில்லாத விலையாகும். கட்டடத்தின் தன்மை, தரம் இவற்றை பொறுத்து சதுரடிக்கு ரூ.600 என, கணக்கு செய்துகொண்டால், இதன் மதிப்பு ரூ.46 லட்சமாகும்.
நான் கடந்த, 20 ஆண்டு களாக அமெரிக்காவில் வசிக்கிறேன். தாய், தந்தை கோவையில் உள்ளனர். நானும் கோவையிலேயே தங்கி, தொழில் துவங்க எண்ணி உள்ளேன். சுமார், 10 ஆயிரம் சதுரடிகள் கொண்ட கட்டடம் கட்ட வேண்டும். அதற்கு எந்த பகுதியில் இடம் வாங்கலாம் என்று ஆலோசனை கூறவும்.
- கார்த்திக், சரவணம்பட்டி.
பத்தாயிரம் சதுரடி என்பது, அலுவலகமாகவா அல்லது தொழிற்சாலையாகவா அல்லது வணிக கட்டடமாகவா என கூறவில்லை. முதலீட்டுக்கு தடை இல்லை என்றால், மெயின் ரோடுகளில் நிறைய இடங்கள் விற்பனைக்கு வருகின்றன. அவற்றை வாங்கி கீழே ஷோரூம், மேலே அலுவலகங்கள் என கட்டினால், 5-6 சதவீதம் என, தங்கள் முதலீட்டுக்கு வருவாய் கிடைக்கும். தாங்களும் அதில் ஒரு பகுதியை, உபயோகப்படுத்தி ஒரு தொழில் தொடரலாம்.
-தகவல்: ஆர்.எம். மயிலேறு,
கன்சல்டிங் இன்ஜினியர்.