/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
வீடுகளுக்கு தேர்வு செய்வதில் கவனம் தேவை எண்ணங்களை மாற்றும் வல்லமை வண்ணங்களுக்கு உண்டு
/
வீடுகளுக்கு தேர்வு செய்வதில் கவனம் தேவை எண்ணங்களை மாற்றும் வல்லமை வண்ணங்களுக்கு உண்டு
வீடுகளுக்கு தேர்வு செய்வதில் கவனம் தேவை எண்ணங்களை மாற்றும் வல்லமை வண்ணங்களுக்கு உண்டு
வீடுகளுக்கு தேர்வு செய்வதில் கவனம் தேவை எண்ணங்களை மாற்றும் வல்லமை வண்ணங்களுக்கு உண்டு
ADDED : டிச 14, 2024 03:03 PM

எங்கள் வீடு கட்டி சுமார், 30 ஆண்டுகள் ஆகிறது. அப்போது வீட்டின் தரைக்கு மொசைக்கு போட்டு இருந்தோம். இப்பொழுது கால மாற்றத்திற்கு ஏற்ப டைல்ஸ் பதிக்க முடிவு செய்துள்ளோம். மொசைக் மீது டைல்ஸ் போடுவதற்கான வாய்ப்பு உள்ளதா?
-குமரன், சிங்காநல்லுார்.
முதலில் உங்கள் வீட்டில் இருக்கும் மொசைக் தரையானது சமமாக உள்ளதா அல்லது சற்று கீழே இறங்கி உள்ளதா என்பதை, உறுதிப்படுத்திக் கொள்ளவும். சமமாக இருந்தால் அதன் மேலே நாம் 'டைல் அதெசிவ்' பயன்படுத்தி டைல்ஸ் போடலாம். அப்படி அமைக்கும்போது கதவுகள் அருகே மிக கவனமாக கையாள வேண்டும். ஏனென்றால் அரை 'இன்ச்' முதல் 'முக்கால் இன்ச்' வரை தளமானது உயரம் பெறக்கூடும்.
அதனால் வீட்டின் முன் கதவு மற்றும் வீட்டு அறைகளில் உண்டான கதவுகளுக்கும், தளத்திற்கும் உண்டான உயரத்தின் அளவுகள் வேறுபடும்.
அப்பொழுது கதவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அங்கே சிறிது வேலைப்பாடுகள் செய்ய வேண்டும். கதவுகளின் உயரம் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நிலவுகளை சிறிதளவு அறுக்கக்கூட நேரிடலாம்.
சமமாக இல்லை என்றால் அல்லது தரை சற்று கீழே இறங்கி இருந்தாலும்கூட நாம் அதன் மேலே டைல்ஸ் இட வேண்டாம். சில காலம் கழித்து, தரையில் விரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஆகவே இந்த நிலையில், நாம் தரையில் உள்ள மொசைக் எடுத்துவிட்டு எப்பொழுதும் போல் கலவை வைத்து, புதிதாக டைல்ஸ் இடுவது நல்லது.
வீட்டு வேலை முடியும் தருவாயில் இருக்கிறது. செங்கல் சுவர்களுக்கு நீண்ட உழைப்புக்கும் மிகச்சிறந்த 'பினிஷிங்' கிடைக்கவும், பார்க்க ரம்மியமாக இருக்கவும், பூச்சு முதல் கொண்டு முறையாக செய்ய வேண்டிய வேலைகள் என்னென்ன?
-சண்முகம், பள்ளபாளையம்.
பூச்சு கனம், 15 முதல் 20 மி.மீ., இருக்கவேண்டும். பூச்சின் போது மட்டகோல் வைத்து சமமான அளவை பக்குவமாக முடித்தல் வேண்டும். பூச்சு பணிக்கு பிறகு, 24 மணி நேரத்திற்குப்பின் நீரூற்றுதல் தொடங்க வேண்டும்.
ஈரப்பதம் இழப்பது சிறிய வெடிப்புகளை ஏற்படுத்தும். இதைத் தடுப்பதற்காக தேவையான நீரூற்றுதல் செய்ய வேண்டும்.
வீட்டிற்கு அழகு சேர்ப்பது பெயின்ட்தான். வீட்டிற்கான பெயின்ட் தேர்வு செய்வது மிக முக்கியம். ஏனெனில் அது உங்கள் வீட்டின் அழகை அதிகரிக்கிறது.
பொதுவாக வெளிப்புற சுவர்கள் லேசான அல்லது மிதமான நிறங்களை தேர்வு செய்வார்கள். ஏனெனில், அது உங்கள் வீட்டின் வெப்பத்தை எதிர்க்கும். வண்ணம் வீட்டின் நிலைப்பகுதியில் மிதமான ஒரு மையத்தை கொண்டிருக்க வேண்டும்.
நிறங்கள் நம் உணர்ச்சிகளை ஆழமாக பாதிக்கின்றன. இதனால் அவை வீட்டின் உள்வடிமைப்பில் சக்திவாய்ந்த கருவியாக அமைகின்றன.
சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் போன்ற வெப்பநிறங்கள் உற்சாகத்தையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தும். அதேசமயம் நீலம், பச்சை, ஊதா போன்ற குளிர்ந்த நிறங்கள் அமைதியான மற்றும் ஓய்வான உணர்வுகளை தரும்.
வண்ணத்துக்கு ஏற்ப,உங்கள் வீட்டின் தளத்திற்கு பயன்படுத்தப்படும் டைல்ஸ், மார்பிள்ஸ், கிரானைட்ஸ் நிறங்களையும் அதற்கேற்றார் போல் தேர்ந்தெடுக்க வேண்டும். வீட்டின் வெளிச் சுவர்களை அழகாக்க, எலிவேசன் டைல்ஸ் பயன்படுத்தலாம்.
எங்கள் காலிமனை இடத்தில் கரையான் புற்று இருந்தது. குழி தோண்டி மருந்து தெளித்து மூடினோம். சில நாட்களில் வேறு இடத்தில் வருகிறது. இதை எப்படி சரி செய்வது. வீடு கட்ட முடியுமா?
-முத்து, கணபதி.
பூச்சியியல் வல்லுனரை அணுகி, கரையான்களை அழிக்க உங்கள் இடத்தில் கிருமி நாசினி தெளிக்க சொல்லவும். மண்ணின் அடி நிலத்துக்கு சிரமம் இல்லாமல் ஊடுருவும் வகையில் இந்த மருந்து தெளிக்கப்பட வேண்டும்.
மண்ணின் கீழே உள்ள அழுகிய மரங்கள், இலைகள் போன்ற கரையான்களுக்கு உணவாக அமையக்கூடிய பொருட்களை அகற்ற வேண்டும்.
உலர்ந்த சுண்ணாம்பு சற்று மண்ணில் சேர்க்கலாம். வீட்டின் அடித்தள கட்டுமானத்திற்கு முன்பாக மண்ணின் முழு பரப்பிலும், கரையான் எதிர்ப்பு மருந்து தெளிக்க வேண்டும். இதுபோன்ற வேலைப்பாடுகளை செய்துவிட்டு தைரியமாக வீடு கட்டலாம்.
லட்சுமணன்
தலைவர்,
பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா,கோவை மையம்.

