/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
புதிய தர நிலையை அறிவித்தது 'காசா கிராண்ட்' வீடு வாங்குவோருக்கு உயர்தர அனுபவம்
/
புதிய தர நிலையை அறிவித்தது 'காசா கிராண்ட்' வீடு வாங்குவோருக்கு உயர்தர அனுபவம்
புதிய தர நிலையை அறிவித்தது 'காசா கிராண்ட்' வீடு வாங்குவோருக்கு உயர்தர அனுபவம்
புதிய தர நிலையை அறிவித்தது 'காசா கிராண்ட்' வீடு வாங்குவோருக்கு உயர்தர அனுபவம்
ADDED : செப் 27, 2025 01:39 AM

வீ டு வாங்குவோருக்கு உயர்தர அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில், 'காசா கிராண்ட் ஸ்டாண்டர்டு' என்ற புதிய தர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காசா கிராண்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
சென்னையை தலைமையிடமாக கொண்டு, 2003ல் துவங்கப்பட்ட காசா கிராண்ட் நிறுவனம், அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லா வகை வீடுகள் கட்டித்தருவதில் முன்னணியில் உள்ளது. தற்போது வரை இந்நிறுவனம், 160க்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.
இந்நிறுவனத்தின் குடியிருப்பு திட்டங்களில், தற்போது வரை, 55,000க்கும் மேற்பட்டோர் வீடுகள் வாங்கியுள்ளனர். இதுமட்டுமல்லாது, தொழில் வணிக கட்டுமான திட்டங் களையும் இந்நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
அனைத்து தரப்பு மக்களின் வீடு வாங்கும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் காசா கிராண்ட் நிறுவனம் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால், மக்களின் நம்பிக்கையை இந்நிறுவ னம் பெற்றுள்ளது.
இந்நிலையில், எங்கள் திட்டங்களில் வீடு வாங்குவோருக்கு உயர்தர அனுபவத்தை அளிக்கும் வகையில் 'காசா கிராண்ட் ஸ்டாண்டர்டு' என்ற புதிய தர முத்திரையை அறிமுகப்படுத்துகிறோம்.
எங்கள் திட்டங்களில் கட்டப்படும் வீடுகளின் உயர் தரத்தை குறிப்பிடும் வகையில் இந்த புதிய தரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தரம், சிறப்பு அம்சங்கள், வசதிகள், அளவு, அனுபவம் ஆகிய ஐந்து துாண்களின் அடிப்படையில், 231 சிறப்பு தர வசதிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
'இந்த, 231 தர சான்றுகள் அடிப்படையில் 'காசா கிராண்ட் ஸ்டாண்டர்டு' வீடு வாங்குவோருக்கு உயர்தர அனுபவத்தை உறுதி செய்யும் மைல் கல்லாக அமைந்து இருக்கும்' என, அந்த நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, காசா கிராண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் கவுதம் கூறுகையில், ' ' எங்களிடம் வீடு வாங்குவோரின் வாழ்க்கை தரத்தை மேம் படுத்தும் வகையில் இந்த தரச்சான்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.