/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
கட்டுமானம் நடக்கும் குடியிருப்புக்கு கட்டணம்: விதிமீறினால் மின் வாரியம் வசூலிக்கும் 'தண்டம்'
/
கட்டுமானம் நடக்கும் குடியிருப்புக்கு கட்டணம்: விதிமீறினால் மின் வாரியம் வசூலிக்கும் 'தண்டம்'
கட்டுமானம் நடக்கும் குடியிருப்புக்கு கட்டணம்: விதிமீறினால் மின் வாரியம் வசூலிக்கும் 'தண்டம்'
கட்டுமானம் நடக்கும் குடியிருப்புக்கு கட்டணம்: விதிமீறினால் மின் வாரியம் வசூலிக்கும் 'தண்டம்'
ADDED : அக் 25, 2024 10:05 PM

கட்டுமானத்திற்கான மின் தேவைக்காக, தற்காலிக மின் இணைப்பு பெற வேண்டும். இதற்கான கட்டண வீதம் VI பொருந்தும். இதற்கு நிலையான கட்டணம் மற்றும் பயன்படுத்திய மின் கட்டணம் வசூலிக்கப்படும். கட்டுமானம் முடிந்தபின் குடியிருப்புகளுக்கு கட்டண வீதம் I-Aக்கு மாற்றக்கோரி பெற்றுக்கொள்ளலாம்.
கட்டட முடிவு சான்று, சில கட்டடங்களுக்கு தேவை. இந்த சான்று திட்ட அனுமதி வழங்கிய உள்ளூர் திட்ட குழுமம் அல்லது மாநகராட்சி/உள்ளாட்சி வழங்கும். குடியிருப்பு கட்டடம், 750 சதுர மீட்டர் பரப்புக்கு கூடுதலாகவும், குடியிருப்பு எண்ணிக்கை எட்டுக்கு கூடுதலாகவும், வணிக கட்டடம், 300 சதுர மீட்டர் பரப்புக்கு கூடுதலாகவும், கட்டட உயரம், 12 மீட்டருக்கு கூடுதலாகவும் இருப்பின் சான்று அவசியம்.
பதிவுபெற்ற பொறியாளர்கள் சங்க(கோவை) முன்னாள் தலைவர் கனகசுந்தரம் கூறியதாவது:
கட்டடமும் அனுமதிக்கப்பட்ட வரைபடத்தின்படி கட்டியிருக்கப்பட வேண்டும். மின் கட்டண வீதங்களிலேயே, குடியிருப்புக்கான I-Aவீதம்தான் குறைவானது. வணிக பயன்பாட்டுக்கானது, V ஆகும். இவற்றுக்கு இடைப்பட்டதுதான், I-Dவீதம் எனும் இதர பயன்பாட்டுக்கானது.
இவற்றில் I-D, Vக்கு ஒவ்வொரு ரசீதிலும், நிரந்தர கட்டாய கட்டணம் இருக்கும்; மின் கட்டணம் தவிர, விதிக்கப்பட்ட கட்டணத்திற்கு மாறாக, மின்சாரம் பயன்படுத்தப்படுவதாக கண்டறியப்படின் வாரியம் தண்டம் மற்றும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும்.
ஒரு பகுதியை உடனடியாக, பணமாக செலுத்த கேட்கப்படலாம். மீதம் காசோலையாக அளிக்கலாம். இணைப்பு பெற்றவருக்கு இதில் ஒப்பம் இல்லையெனில், பணம் செலுத்திவிட்டு மேல்முறையீடு செய்யலாம் அல்லது நீதிமன்றம் செல்லலாம்.
பிற குறைகளுக்கு பிரதி மாதம், இரண்டாம் புதன் நடைபெறும் செயற்பொறியாளர் குறைதீர்ப்பு முகாமில் முறையிடலாம். அல்லது நுகர்வோர் குறைதீர்ப்பு மன்றத்தையும் அணுகலாம். தேவையெனில், நீதிமன்றத்தை அணுக உரிமை உள்ளது.
பாதுகாப்பான மின்சாரம் பயன்பாட்டுக்கு வாரிய விதிகளை பின்பற்றுவது மிகவும் அவசியம். ஒவ்வொரு குடியிருப்பிலும், 'எர்த் லீக்கேஜ் சர்க்கியூட் பிரேக்கர்'(இ.எல்.சி.பி.,), 'ரிசைடூயல் கரன்ட் சர்க்கியூட் பிரேக்கர்'(ஆர்.ஆர்.சி.பி.,) ஆகியவற்றை, கண்டிப்பாக பொருத்தி பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.
மின் வினியோகத்தில் தடையெனில், இணையம் மூலமும் தெரிவிக்கலாம். அருகில் உள்ள உதவி பொறியாளரிடமும், தொலைபேசியில் முறையிடலாம். சோலார் பலகைகளை, வீட்டு கூரையின்மீது நிறுவி மின்சாரம் உருவாக்கியும் பயன்பெறலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.