/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
வீடுகளுக்கு 'காம்போசிட் கான்கிரீட் டெக் சிலாப்' ; எதிர்கால வளர்ச்சிக்கு ஏற்ப நவீன தொழில்நுட்பம்
/
வீடுகளுக்கு 'காம்போசிட் கான்கிரீட் டெக் சிலாப்' ; எதிர்கால வளர்ச்சிக்கு ஏற்ப நவீன தொழில்நுட்பம்
வீடுகளுக்கு 'காம்போசிட் கான்கிரீட் டெக் சிலாப்' ; எதிர்கால வளர்ச்சிக்கு ஏற்ப நவீன தொழில்நுட்பம்
வீடுகளுக்கு 'காம்போசிட் கான்கிரீட் டெக் சிலாப்' ; எதிர்கால வளர்ச்சிக்கு ஏற்ப நவீன தொழில்நுட்பம்
ADDED : மார் 21, 2025 11:04 PM

கட்டுமான தொழில்நுட்பங்கள் தினமும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. வீடுகள் வலுவாகவும், குறைந்த செலவில், அதிக நாட்கள் நீடிக்கவும் வேண்டும் என்ற நோக்கத்தில், 'காம்போசிட் கான்கிரீட்' ஒரு சிறந்த தீர்வாக வளர்ந்து வருகிறது.
சமீப காலங்களில், வீடுகளில் 'டெக் சிளாப்' அமைப்பதற்கு காம்போசிட் முறையில் இரும்பு மற்றும் கான்கிரீட் இணைந்து பயன்படும் தொழில்நுட்பம் அதிகமாகக் கவனம் பெற்று வருவதாக கூறுகிறார், 'காட்சியா' உறுப்பினர் சரவணக்குமார்.
அவர் கூறியதாவது:
வழக்கமான 'டெக் சிளாப்' கட்டுமானம் கான்கிரீட் மற்றும் இரும்புக் கம்பிகள் பயன்படுத்தி செய்யப்படுகிறது. ஆனால், காம்போசிட் டெக் சிளாப் என்பது ஸ்டீல் டெக் ஷீட் பயன்படுத்தப்படுவதால், கட்டுமானத்தின் வலிமை அதிகரிக்கும்.
பெரிய வீடுகள் மற்றும் மாடிக்கட்டடங்களில் கூட, பாதுகாப்பாக இதை பயன்படுத்தலாம். வழக்கமான கட்டுமான முறையைக் காட்டிலும், இம்முறை அதிகமான தரம் வழங்கும். கோணங்கள் மற்றும் இணைப்புகளில் வலிமை அதிகரிக்கும்.
மரச்சட்டங்கள் தேவையில்லை. எனவே, வீணாகும் பொருட்கள் குறைந்து, செலவும் மிச்சமாகும். பழைய முறையில் கட்டுமானம் செய்யும்போது, சில நாட்கள் படிக்கட்டுகளை அமைப்பதற்கே செல்கிறது. ஆனால், ஸ்டீல் டெக் ஷீட்டுகளை நேரடியாக பொருத்தி, அதன் மேல் கான்கிரீட் ஊற்றலாம்.
இதனால், கட்டுமானம் வேகமாக முடியும். வழக்கமான டெக் சிளாப்கள் சில ஆண்டுகளுக்குப் பிறகு சிறு, சிறு வெடிப்புகளை உருவாக்கலாம். ஆனால், காம்போசிட் டெக் சிளாப் முறையில் ஸ்டீல் மற்றும் கான்கிரீட் இணைந்து செயல்படும் என்பதால், 30-50 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கலாம்.
எடையை தாங்கும் திறன் அதிகம். எனவே, இதை மாடிக்கட்டடங்களிலும் சிறப்பாகப் பயன்படுத்தலாம். கான்கிரீட் இயற்கையாகவே தீ எதிர்ப்பு தன்மை கொண்டது. இந்த முறையில் ஒலியை குறைக்கும் தன்மை அதிகமாக இருக்கும்.
அதனால், வீடுகளில் அமைதியான சூழல் இருக்கும். மரம் வெட்டப்படுவதற்கான தேவையை குறைக்கும். இது சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமான முறையாகும். இந்தியாவில் பல பெரிய கட்டடங்கள், இந்த முறையை ஏற்கத் தொடங்கியுள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.