/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
உறுதியான கட்டடத்துக்கு 'கான்கிரீட் மிக்சிங்' ரொம்ப முக்கியமுங்க!
/
உறுதியான கட்டடத்துக்கு 'கான்கிரீட் மிக்சிங்' ரொம்ப முக்கியமுங்க!
உறுதியான கட்டடத்துக்கு 'கான்கிரீட் மிக்சிங்' ரொம்ப முக்கியமுங்க!
உறுதியான கட்டடத்துக்கு 'கான்கிரீட் மிக்சிங்' ரொம்ப முக்கியமுங்க!
ADDED : அக் 18, 2024 10:50 PM

ஆர்.சி.சி., பணிகளுக்கு கான்கிரீட் கலவை குறைந்தபட்சம், 1:1.5:3 என்ற விகிதாசாரமாக இருக்க வேண்டும்.
1 பங்கு சிமென்ட், 1.5 பங்கு மணல், 3 பாகம் ஜல்லி கற்கள் என அளவு இருக்க வேண்டும். இந்த கலவையை தயாரிக்கும்போது, ஒரு பேக் சிமென்ட்க்கு, 25 லிட்டர் தண்ணீர் கலக்கப்பட வேண்டும்.
கற்கள்/ஜல்லி கற்கள் அல்லது மணலை அளந்திட மரம் அல்லது ஸ்டீலால் ஆன ஒரு டப்பாவை பயன்படுத்த வேண்டும்.
அதன் அளவு, 350 மி.மீ.,*250 மி.மீ.,*400 மி.மீ., ஆக இருந்தால் வசதியாக இருக்கும். இப்போது, 1.5 பங்கு மணல் மற்றும், 3 பங்கு சரளை கற்களை ஒரு 'பேக்' சிமென்ட் உடன் சேர்க்க வேண்டும்.
கலவையானது, இயந்திரத்தில் தயாரிக்கப்படுகிறது என்றால், அது குறைந்தபட்சம் இரண்டு நிமிடங்கள் கலக்கப்பட வேண்டும்.
அப்போதுதான், அது தண்ணீரில் நன்றாக கலக்கப்படும். கையால் கலவை தயாரிக்கப்படுகிறது என்றால், ஓர் சுத்தமான, உறுதியான உலர்ந்த தரையில், உலர்வான சிமென்ட் மற்றும் மணல் கலக்கப்பட வேண்டும்.
நிறமானது, சீராக தோன்றும் வரை கலக்க வேண்டும். அதன்பின் ஜல்லி கற்கள் கலந்து, மீண்டும் நன்கு கலக்க வேண்டும். பின்பு தண்ணீர் கலந்து, இறுதி கலவை ஆக்க வேண்டும். கான்கிரீட் கலவை 'செட்' ஆகத்துவங்கும் முன், அதை பயன்படுத்த வேண்டும்.
பொதுவான கான்கிரீட் கலவை தயாரிப்பு, 3 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரத்துக்குள் முடிக்கப்பட வேண்டும்.
அதில் ஏதாவது தாமதம் ஆனால், அதன் பாயும் தன்மையை சீர்செய்ய மேற்கொண்டு ஏதும் தண்ணீர் சேர்க்கக்கூடாது. கான்கிரீட் பணியை, தொடர்ந்து அடுக்கு மேல் அடுக்காக செய்யப்பட வேண்டும்.
கலவை அதிகபட்சம், 1.5 மீட்டர் உயரத்தில் இருந்து ஊற்றப்பட வேண்டும். இல்லையேல் பொருட்கள் பிரிந்துவிடும். அதன்பின்பு, கலவை சீராக இறுக்கத்துக்கு உட்படுத்தப்பட வேண்டும். 'மெஷின் வைப்ரேட்டர்' மூலம், இதை செய்வதே சிறந்தது. மெஷின் நீடில் வைப்ரேட்டர் கிடைக்காதபட்சத்தில், இரும்பு கம்பி கொண்டு இறுக்கம் செய்யும் பணியை செய்யலாம்.
கட்டுமானம் உறுதியாக, எதையும் தாங்கும் விதத்தில் இருக்க, அதில் எந்த காற்றுக்குமிழிகளும் இருக்கக்கூடாது. இவற்றை முறையாக பின்பற்றினால் கான்கிரீட் தரமாக இருப்பதுடன், ஆயுட்காலமும் நீடித்து இருக்கும் என்கின்றனர், கட்டுமான பொறியாளர்கள்.
பொதுவான கான்கிரீட் கலவை தயாரிப்பு, 3 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரத்துக்குள் முடிக்கப்பட வேண்டும். அதில் ஏதாவது தாமதம் ஆனால், அதன் பாயும் தன்மையை சீர்செய்ய மேற்கொண்டு ஏதும் தண்ணீர் சேர்க்கக்கூடாது.