ADDED : ஜன 18, 2025 07:37 AM
வீடுகளுக்கு உள்ளே எந்தெந்த திசைகளிலிருந்து, படிக்கட்டுக்களை அமைக்கலாம் என்பது குறித்து, விளக்குகின்றனர் வாஸ்து நிபுணர்கள்.
வீட்டின் உள்ளே அமைக்கப்படும் படிக்கட்டுகளுக்கு, வீட்டின் தென்மேற்கு பகுதி சிறந்த தேர்வாக இருக்கும். தெற்கு மற்றும் மேற்கு பகுதிகள், அடுத்த இரண்டாவது சிறந்த தேர்வுகளாக இருக்கும். இந்த விஷயத்தில், படிக்கட்டு வடக்கிலிருந்து துவங்கி, தெற்கு நோக்கிச் செல்ல வேண்டும்.
இதற்கு மாற்றாக, கிழக்கிலிருந்து துவங்கி மேற்கு நோக்கிச் செல்லலாம். உள்ளே அமைக்கப்படும் படிக்கட்டுகள், வீட்டின் மையத்தில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
வெளிப்புற படிக்கட்டுகள் தென்கிழக்கிலிருந்து, கிழக்கு நோக்கியும், தென்மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும், தெற்கு நோக்கியும், வடமேற்கிலிருந்து, வடக்கு நோக்கியும் அமைக்கலாம்.
வெளிப்புறமாகவோ அல்லது உட்புறமாகவோ எதுவானாலும், வடகிழக்கு மூலையில் படிக்கட்டு அமைக்கக் கூடாது. நுழைவாயிலுக்கு முன்போ அதன் அருகிலோ, ஒட்டியோ அமைக்கப்படும் படிக்கட்டுகள், ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும்; அதனால் அவற்றை தவிர்க்கலாம் என்று கூறுகின்றனர் வாஸ்து நிபுணர்கள்.