/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
வீட்டில் மின்சாதனங்கள் பழுதடைகின்றனவா? இதோ தீர்வு சொல்கிறார் பொறியாளர்
/
வீட்டில் மின்சாதனங்கள் பழுதடைகின்றனவா? இதோ தீர்வு சொல்கிறார் பொறியாளர்
வீட்டில் மின்சாதனங்கள் பழுதடைகின்றனவா? இதோ தீர்வு சொல்கிறார் பொறியாளர்
வீட்டில் மின்சாதனங்கள் பழுதடைகின்றனவா? இதோ தீர்வு சொல்கிறார் பொறியாளர்
ADDED : பிப் 07, 2025 10:21 PM

ஜி.எப்.ஆர்.ஜி., பில்டிங்ஸ் என்றால் என்ன?
-சிவபாலன், சரவணம்பட்டி.
ஜி.எப்.ஆர்.ஜி.,(கிளாஸ் பைபர் ரீஇன்போர்சுடு ஜிப்சம்) பில்டிங்ஸ் என்பது கண்ணியமான, அதாவது 'லைட் வெயிட்' மற்றும் செயற்கை சூழ்நிலைகளுக்கு எதிராக திடமான கடினத்தன்மையை உடைய ஒரு பிளாஸ்டிக் அடிப்படையிலான பொருளாகும். இது ஜிப்சம் கலவையைப் பயன்படுத்தி, கட்டுமானம் செய்யும் முறை. இதில், கண்ணாடி நார்களுடன் கூடிய, ஜிப்சம் பிளாஸ்டர் கொண்டு கட்டுமான உறுதியை உருவாக்கப்படுகிறது.
இந்த முறை குறைந்த எடை, அதிக உறுதி மற்றும் எதிர்ப்பு திறன் போன்ற பல சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது. இது குறுகிய நேரத்தில், கட்டுமானங்களைத் துவங்க மற்றும் முடிக்க உதவுகிறது.
நீண்ட காலத்திற்கு சிதைவுகளை எதிர்க்கும் திறன் கொண்டது. தற்போது இது கட்டுமான பயன்பாடுகளுக்கான சிறந்த தேர்வாக இருக்கிறது.
நாங்கள் புதிதாக வீடு கட்டி குடி புகுந்து, ஆறு மாதங்களே ஆகிய நிலையில் வீட்டில் எல்.இ.டி., பல்புகள் ஒன்று, ஒன்றாக பழுதடைந்து கொண்டிருக்கிறது; இதற்கு தீர்வு தான் என்ன?
-ராஜீவ்சங்கர், கணபதி.
இதற்கு முக்கிய காரணம், மின் வாரியத்தில் இருந்து வரும் மின்சாரம் சரியான 'இன்கம்மிங் வோல்டேஜ்' இல்லாததுதான். அது குறைவாக வந்தாலும், அதிகமாக வந்தாலும் நமது வீட்டில் உள்ள மின் சாதனங்கள் அனைத்தையும் பழுதடையச் செய்யும்.
இன்கம்மிங் வோல்டேஜுக்கு, அதன் லோடுக்கு தகுந்தாற்போல், ஒரு ஸ்டெபிலைசர் போடுவதன் மூலம் சரி செய்ய முடியும். லோ வோல்டேஜ் மற்றும் ஹை வோல்டேஜ் என்ற பிரச்னை இருக்காது.
எங்களது புதிதாக கட்டியுள்ள வீட்டில், கிச்சன் வால் டைல்ஸ் மற்றும் போர்டிகோ வால் டைல்ஸ் ஆங்காங்கே கீழே விழுகிறது. இதற்கு என்ன காரணம்?
-மணிமேகலை. மதுக்கரை.
டைல்ஸ் ஒட்டும்சுவர் களில் இருக்கும், பிடிப்புத் தன்மை மற்றும் டைல்ஸ் ஒட்டுவதற்கு பயன்படுத்தும் டைல்ஸ் பேஸ்ட் சரியான கிரேடாக இருக்க வேண்டும். டைல்ஸின் அளவு மற்றும் உயரத்திற்கு ஏற்றவாறு, டைல்ஸ் பேஸ்ட் கிரேட் கண்டிப்பாக இருக்க வேண்டும். இதில், எவையேனும் ஒன்று சரியாக இல்லை எனில், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது.
வீட்டில் அமைக்கப்படும் கிட்சன் சின்க் எவ்வளவு ஆழம் இருப்பது நல்லது?
-சந்தோஷ், வடவள்ளி.
கிச்சனில் சின்க் அமைக் கும் பொழுது, கண்டிப்பாக அதனுடைய அகலம், நீளம் சரியாக அமைக்க வேண்டும்.
இல்லையேல் பயன்படுத்துவோருக்கு நிறைய உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.
கிச்சனில் அமைக்கப்படும் கிரானைட் சின்க் நீளம், 24 இன்ச் குறையாமலும், அகலம், 18 இன்ச் குறையாமலும், ஆழம், 10 இன்ச்க்கு மிகாமலும் இருப்பது சிறந்தது.
வீடு கட்டி இரண்டு வருடங்கள் ஆகிய நிலையில், எங்கள் பாத்ரூம் டைல்ஸிலிருந்து வாட்டர் லீக்கேஜ் வருகிறது. இதற்கு காரணம் என்ன?
-விக்னேஷ். காளம்பாளையம்.
இதுபோன்று டைல்ஸ் இடைவெளியிலிருந்து நீர் கசிவுக்கு, சுவர்களில் இருக்கும் 'கன்சீல்டு பைப்' மற்றும் குழாய்களை சரியாக பொருத்தாததே காரணம். சுவர்களில் அமைக்கும் கன்சீல்டு பைப்களை அமைத்த பின், சரியான முறையில் பிரஷர் டெஸ்ட் செய்ய வேண்டும்.
இன்றைய சூழலுக்கு நிறைய வீடுகளில், பிரஷர் பம்ப் பயன்படுத்துகிறார்கள். ஆகவே சரியான முறையில் பிரஷர் டெஸ்ட் செய்த பின்னரே, நம் சுவர்களில் உள்ள பைப்களை பிளாஸ்டிரிங் செய்து, அதன் மேலே டைல்ஸ் ஒட்ட வேண்டும். அப்படி செய்வதால் நீர் கசிவை உறுதியாக தடுக்க முடியும்.
கவிராஜ்
பொறியார்
மக்கள் தொடர்பு அலுவலர்,
கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம்.