/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
கனவு இல்லங்களை குறைந்த செலவில் 'ஸ்மார்ட்' தொழில்நுட்பத்தில் கட்டலாம்
/
கனவு இல்லங்களை குறைந்த செலவில் 'ஸ்மார்ட்' தொழில்நுட்பத்தில் கட்டலாம்
கனவு இல்லங்களை குறைந்த செலவில் 'ஸ்மார்ட்' தொழில்நுட்பத்தில் கட்டலாம்
கனவு இல்லங்களை குறைந்த செலவில் 'ஸ்மார்ட்' தொழில்நுட்பத்தில் கட்டலாம்
ADDED : ஆக 01, 2025 07:56 PM

இ ன்றைய காலகட்டத்தில் வீடு கட்டும் போது, குறித்த காலத்திலோ அல்லது விரைந்து முடிக்கும்போது காலதாமத்தால் ஏற்படும் செலவுகளை தவிர்க்க முடியும். ஏனெனில், கட்டுமான பொருட்களும் திடீர் விலையேற்றத்தை சந்திக்கின்றன.
தவிர, ஆட்கள் கூலியும் வேறு. இப்படிப்பட்ட காலகட்டத்தில் குறைந்த செலவில் முடிக்க, நவீன தொழில்நுட்பங்களின் தேவை அவசியம். அதாவது, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிலைத்தன்மையும், தொழில்நுட்ப நவீனத்துவமும் உள்ள கட்டுமான முறைகள் அதிக பரிசீலனைகளை பெற்றுவருகின்றன.
என்னதான் நவீன தொழில்நுட்பங்கள் வந்தாலும், பாரம்பரிய முறைப்படி செங்கல், கான்கிரீட் கொண்டு ஆர்.சி.சி., கட்டுமானங்களை பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கு பயன்படுத்துகின்றனர்.
ஆனால், இக்கட்டுமானத்தைவிட வேகமாகவும், எளிதாகவும் கட்டும் பல புதிய 'ஸ்மார்ட்' தொழில்நுட்பங்கள் வந்துள்ளன.
பிரீகாஸ்ட் கான்கிரீட் தொழில்நுட்பத்தின்(முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட கான்கிரீட்) வாயிலாக கட்டுமான வேகத்தை அதிகரிக்க முடியும்.
அதாவது, சாதாரண கட்டுமானத்தைவிட, 50 முதல், 60 சதவீதம் வரை பணிகள் வேகமாக முடியும்; எதிர்பார்த்த தரமும் இதில் இருக்கும்.
குறைந்த தொழிலாளர்கள் போதுமானது; மழைக்காலத்தில் தடையின்றி பணிகளை தொடரலாம். அதேபோல், 'கிளாஸ் பைபர் ரீஇன்போர்ஸ்டு ஜிப்சம்' என்பது ஐ.ஐ.டி., மெட்ராஸில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம். 'ரேபிட் வால் டெக்னாலஜி' ஆடம்பர குடியிருப்புகளுக்கு, அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த வகையான தொழில்நுட்பங்கள், சாதாரண வீடுகளில் துவங்கி, ஆடம்பரமான குடியிருப்புகள் வரை புகுத்தப்படு கின்றன.
அதேசமயம், கட்டடக்கலை மற்றும் ஸ்டிரக்சுரல் இன்ஜினியரின் ஆலோசனையுடன் தான், புதிய தொழில்நுட்பத்தை தேர்வு செய்ய வேண்டும் என்கின்றனர் பொறியாளர்கள்.