/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
சொத்தின் மதிப்பை கணக்கிடும் பல காரணிகள் எளிதானது அல்ல என்கின்றனர் பொறியாளர்கள்
/
சொத்தின் மதிப்பை கணக்கிடும் பல காரணிகள் எளிதானது அல்ல என்கின்றனர் பொறியாளர்கள்
சொத்தின் மதிப்பை கணக்கிடும் பல காரணிகள் எளிதானது அல்ல என்கின்றனர் பொறியாளர்கள்
சொத்தின் மதிப்பை கணக்கிடும் பல காரணிகள் எளிதானது அல்ல என்கின்றனர் பொறியாளர்கள்
ADDED : ஜன 03, 2025 11:38 PM
கனவு இல்லங்களை கடன் வாங்கியும், ஆவணங்கள் அடமானம் வைத்தும் கட்டும் நபர்கள்தான் இன்றைய காலகட்டத்தில் அதிகம். அதுவும் தரமான பொருட்கள், அழகிய கட்டமைப்பு என பார்த்து, பார்த்து கட்டும் வீடுகளை, சில தருணங்களில் வேறுவழியின்றி விற்கவும் வேண்டியுள்ளது.
இப்படி விற்பவர்கள், அதை வாங்குபவர்களுக்கு அந்த கட்டடத்தின் மதிப்பீட்டை அறிந்துகொள்வது நல்லது. வர்த்தக ரீதியான ஒரு பொருளை வாங்கவும், விற்கவும் அப்பொருளின் மீதான விலையை அல்லது மதிப்பை கண்டறிதல் என்பது, மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஒரு பொருளுக்கு தேய்மானம், வாங்கிய ஆண்டு, கண்டிஷன் போன்றவற்றை வைத்து விலை மதிப்பிடுகிறோம். அதேபோல், கட்டடங்களுக்கு பல காரணிகளை வைத்து, அசல் மதிப்பை கணக்கிடலாம். சொத்துக்களை மதிப்பிடும் முறை முற்றிலும் வேறானது.
பொதுவாக ஒரு பண்ணை அல்லது தோட்டத்தை, காலி இடத்தை கணக்கிடுவது போல ஒரு கட்டடத்தினை, தொழிலகம் அல்லது அலுவலகத்தை மதிப்பிடல் என்பது எளிதானது அல்ல. கட்டுமானத் துறையில் கட்டட மதிப்பீடு என்பது, மிக முக்கியமான பிரிவாகும்.
இளம் பொறியாளர்கள் கட்டடம் கட்டுவதற்கான, எஸ்டிமேஷனை கணக்கிடுவதில் ஆர்வமாக இருப்பர். அதேபோன்று, கட்டிய கட்டடத்தின் மதிப்பினை அறியும் வேல்யூஷனை அறிவதிலும் ஆர்வமாக இருக்க வேண்டும்.
கட்டட மதிப்பீடு என்பது, கட்டடத்தின் அல்லது அந்த நிலத்தின் தன்மை, வடிவமைப்பு, அமைவிடம், கட்டடத்தின் உட்புற, வெளிப்புற பாகங்களின் மதிப்பு மற்றும் தரத்தின் அடிப்படையில் உத்தேசமாக இன்றைய மதிப்பீடு செய்யும் ஒரு முறை.
இதில், கட்டடத்தின் வீட்டு மனைகள், தொழிற்சாலைகள், மற்ற பொறியியல் சார்ந்த கட்டட அமைப்புகளும் அடங்கும். சொத்துக்களை வாங்க, விற்க, வரி செலுத்த, வாடகை நிர்ணயிக்க, அடமானம், வங்கிக்கடன் வாங்க, நிலம் கையகப்படுத்த காப்பீடு மற்றும் இன்னும் பல தேவைகளுக்காக, சொத்தினை மதிப்பீடு செய்கிறோம்.
சொத்தின் 'ஸ்டிரக்சுரல் லைப்', சொத்தின் பராமரிப்பு, வங்கியின் வட்டி வீதம், சட்ட வரம்பு, சொத்தின் அமைப்பு, தற்கால சந்தை மதிப்பு, வடிவம், அளவு, கட்டடத்தின் முகப்பு பாகங்களின் மதிப்பு, கொள்முதல் மதிப்பு ஆகியவற்றை பொறுத்து, சொத்தின் மதிப்பீடு அமைகிறது என்கின்றனர் பொறியாளர்கள்.