/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
ஆடம்பர தோற்றம் தரும் 'படிக்கட்டு' ; ஆனாலும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும்
/
ஆடம்பர தோற்றம் தரும் 'படிக்கட்டு' ; ஆனாலும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும்
ஆடம்பர தோற்றம் தரும் 'படிக்கட்டு' ; ஆனாலும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும்
ஆடம்பர தோற்றம் தரும் 'படிக்கட்டு' ; ஆனாலும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும்
ADDED : ஜூலை 12, 2025 01:01 AM

வீட்டை பார்த்து, ரசித்து கட்டுபவர்கள் சில சமயங்களில், படிக்கட்டுகள் மீது கவனம் செலுத்த தவறி விடுகின்றனர். சரியாக திட்டமிடாமல் கட்டும்போது இடவசதி இல்லாது, குறுகலான படிக்கட்டுகள் கட்டும் நிலையும் ஏற்படுகிறது.
ஒவ்வொரு படிக்கட்டுக்கும் இடையேயான இடைவெளி, சமமாக இருக்க வேண்டும். ஒரு படிக்கட்டு பெரியதாகவும், மற்றொன்று சிறியதாகவும் அமைந்துவிடக் கூடாது. அப்படி அமைவது படியில் நடப்பவர்களுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தும். கால் இடறி கீழே விழும் நிலையும் உருவாகும். எனவே, படிக்கட்டு அமைக்கும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். படிக்கட்டில் ஏறுபவர்களுக்கு வசதியாக, கைப்பிடிகள் அமைக்க வேண்டும். அவை வழுக்கும் தன்மை கொண்டதாக அமைந்துவிடக் கூடாது. கைக்கு பிடிமானம் கொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
வீட்டின் உள் அறையில், படிக்கட்டுகள் அமைப்பதாக இருந்தால் அறைகளுக்கு அழகு சேர்க்கும் வண்ணம், ஆடம்பர தோற்றத்தை வெளிப்படுத்தக்கூடியதாக அமைய வேண்டும். படிக்கட்டுகளின் பக்கவாட்டு பகுதிகள், கம்பீரமான தோற்றத்துடன் மிளிர வேண்டும்.
படிக்கட்டுகளின் முகப்பு பகுதிகள், கலை நயத்துடன் மிளிரக்கூடியதாகவும், புதுப்புது வடிவமைப்புடன் சந்தைகளில் அவை கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தி படிக்கட்டுக்கு அழகு சேர்க்கலாம்.
வீட்டின் மாடி உயரமாக இருந்தால், அதற்கு ஏற்ப நீள்வாக்கில் செங்குத்தாக படிக்கட்டுகளை அமைத்துவிடக் கூடாது. ஏறுபவர்களுக்கு சிரமம் இல்லாதவாறு இருக்க வேண்டும். பொதுவாக படிக்கட்டுகள் சாய்தளமாக இருக்குமாறு, பார்த்துக்கொள்வது அவசியம்.