sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கனவு இல்லம்

/

ஆலோசனை

/

கட்டட வலிமையை அதிகரிக்கும் 'பிளை ஆஷ் பிரிக்ஸ்' விலையோ குறைவு; சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது

/

கட்டட வலிமையை அதிகரிக்கும் 'பிளை ஆஷ் பிரிக்ஸ்' விலையோ குறைவு; சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது

கட்டட வலிமையை அதிகரிக்கும் 'பிளை ஆஷ் பிரிக்ஸ்' விலையோ குறைவு; சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது

கட்டட வலிமையை அதிகரிக்கும் 'பிளை ஆஷ் பிரிக்ஸ்' விலையோ குறைவு; சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது


ADDED : டிச 28, 2024 12:28 AM

Google News

ADDED : டிச 28, 2024 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல் அல்லது 'பிளை ஆஷ் பிரிக்ஸ்' இவற்றில் எதைக்கொண்டு வீடு கட்டுவது நல்லது?

-கவுதம், சுந்தராபுரம்.

இரண்டுமே சிறந்தது. ஆனால், செங்கல்லை விட பிளை ஆஷ் பிரிக்ஸ் கட்டுவது கட்டடத்தின் வலிமையை அதிகரிக்கும். தண்ணீரால் வரும் அரிப்புத் தன்மை போன்ற பிரச்னைகளை, பிளை ஆஷ் பிரிக்ஸ் கொண்டு கட்டுவதன் மூலம் தடுக்கலாம். இது செங்கலை விட விலையும் குறைவு. சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பானது.

வீட்டின் மொட்டை மாடியில் உபயோகப்படுத்தும், கூலிங் டைல்சை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிவிக்கவும்.

-கீதா, பேரூர்.

'கூலிங் டைல்ஸ்' வீட்டின் மாடியில் பயன்படுத்துவது, வெப்பத்தை வீட்டின் உட்புறம் வராமல் தடுக்கும். இது, டெரசில் ஒட்டும்பொழுது டைல்ஸின் இடைவெளியை மூன்று மி.மீ., விட்டு ஒட்டி, அந்த இடைவெளியை 'எபாக்ஸி' எனும் பவுடரை கொண்டு நிரப்ப வேண்டும். இது நீர் உட்புகாமல் இருக்கவும், டைல்ஸ் பெயர்ந்து வராமல் இருக்கவும் உதவும்.

எங்கள் வீட்டில் மர ஜன்னல்கள் பழுதாகி விட்டது. அதை அகற்றிவிட்டு யு.பி.வி.சி., ஜன்னல் பொருத்த முடியுமா?

-அருண்பிரகாஷ், கணபதி.

தாராளமாக பொருத்தலாம். பழைய ஜன்னல் கிளாம்பு உள்ள இடத்தை உடைத்து எடுத்து, பழைய ஜன்னலை அகற்றிவிட்டு, யு.பி.வி.சி., ஜன்னல் அளவுக்கு ஏற்றாற்போல் பூச்சு பூசி, 'பினிஷிங்' செய்து யு.பி.வி.சி., ஜன்னலை பொருத்திக் கொள்ளலாம். அதன்பின் கிரில்களை பொருத்திக்கொள்ளலாம்.

நாங்கள் வீடு கட்டி, 20 வருடம் ஆகிவிட்டது. அந்த வீட்டில், மொசைக் புளோரிங் போட்டு உள்ளோம். அதை உடைத்து மேல் புளோரிங் போடலாமா?

-வசந்தகுமார், ஈச்சனாரி.

மொசைக் புளோரிங்கை உடைத்து விட்டு போடலாம் அல்லது உடைக்காமல் அப்படியே அதன் மேல் பேஸ்ட் உபயோகித்து, டைல்ஸ் ஒட்டலாம். அப்படி ஒட்டும் பொழுது வீட்டில் உள்ள அனைத்து கதவுகளையும், அந்த கணத்திற்கு ஏற்றவாறு மாற்றம் செய்து, மீண்டும் கதவுகளை பொருத்தலாம். பழைய மொசைக் புளோரிங் லெவல், மட்டமாக இருக்கும் பட்சத்தில் இந்த முறையை பயன்படுத்தலாம். இவ்வாறு பயன்படுத்துவதற்கு, மார்க்கெட்டில் பிரத்யேகமாக டைல்ஸ் பேஸ்டுகள் உள்ளது. அதை பயன்படுத்திக் டைல்ஸ் ஒட்டலாம்.

எங்கள் வீட்டிற்கு கார் பார்க்கிங்குக்கு, கான்கிரீட் ரூப் தவிர வேறு எந்த முறையை உபயோகப்படுத்தலாம்.

-வினோத், சின்னியம்பாளையம்.

மெட்டல் ரூபிங் முறையை பயன்படுத்தலாம் அல்லது டென்சைல் ரூப் முறையை பயன்படுத்தலாம். மெட்டல் போஸ்ட் உபயோகித்து, பாலிகார்பனேட் ஷீட் கொண்டும் மேற்கூரை அமைக்கலாம். சந்தையில் அதிநவீன பொருட்கள் வந்துள்ளன. அதை பயன்படுத்தி கார் பார்க்கிங் கான்கிரீட் ரூப் அமைக்கலாம்.

நாங்கள் வீட்டிற்கு மாடுலர் கிச்சன் செய்துள்ளோம். இரண்டு வருடம் ஆகிறது. சின்கில் கசிவு ஏற்பட்டு, பிளைவுட் பழுதாகிவிட்டது. அதை எவ்வாறு சரி செய்வது.

-சதீஷ், அன்னுார்.

'சின்க்' ஏரியாவில் நீர்க்கசிவு இருப்பின், முதலில் அதை எபாக்ஸி கொண்டு சரி செய்ய வேண்டும். பிறகு அந்த இடத்தில் உள்ள பிளைவுட்டை அகற்றிவிட்டு, புதிய பிளைவுட் பொருத்தி சரி செய்யலாம். பிளைவுட் தேர்வு செய்யும் பொழுது, வாட்டர் புரூப் பிளைவுட் கொண்டு செய்தால் இப்பிரச்னை வராது.

-பிரேம் குமார்பாபு

இணை செயலாளர்,

கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம்.






      Dinamalar
      Follow us