/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
கட்டுமானம், பல்லுயிர் பாதுகாப்பு இடையே நல்லிணக்கம் மேம்பட்ட தொழில்நுட்பங்களை பின்பற்றினால் முன்னேற்றம்
/
கட்டுமானம், பல்லுயிர் பாதுகாப்பு இடையே நல்லிணக்கம் மேம்பட்ட தொழில்நுட்பங்களை பின்பற்றினால் முன்னேற்றம்
கட்டுமானம், பல்லுயிர் பாதுகாப்பு இடையே நல்லிணக்கம் மேம்பட்ட தொழில்நுட்பங்களை பின்பற்றினால் முன்னேற்றம்
கட்டுமானம், பல்லுயிர் பாதுகாப்பு இடையே நல்லிணக்கம் மேம்பட்ட தொழில்நுட்பங்களை பின்பற்றினால் முன்னேற்றம்
ADDED : டிச 20, 2024 06:52 PM

கோவையில் இயற்கை செல்வத்தின் அடையாளமாக, மேற்குத்தொடர்ச்சி மலைகள் திகழ்கின்றன. கம்பீரமான இந்த மலைகள் நகரின் பசுமையின் முதுகெலும்பாக செயல்பட்டு, நம் கோவையின் பருவமழை போக்குகள், நீர் வளங்கள் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் காற்று சுழற்சி போன்றவற்றுக்கு கணிசமான பங்களிக்கின்றன.
இத்தகைய சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க பகுதியில், கட்டுமான துறையின் பொருளாதார வளர்ச்சிக்கும், பல்லுயிர் பாதுகாப்புக்கும் இடையே சமநிலை பேணுவது மிகவும் அவசியம் என்கிறார், பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா கோவை மைய செயற்குழு உறுப்பினர் மனோஜ் கிருஷ்ணகுமார்.
அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டதாவது:
ஒவ்வொரு கட்டுமான திட்டமும், அதனை சுற்றியுள்ள பகுதியில் சுற்றுச்சூழல் தாக்கத்தின் முழுமையான மதிப்பீட்டை உள்ளடக்கியிருக்க வேண்டும். மணல் மற்றும் கல் போன்ற இயற்கை வளங்களுக்கு மாற்றாக, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சுற்றுலா பகுதிகளில், சுற்று சூழல் மற்றும் வனவிலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காத வகையில், கட்டமைப்புகளை வடிவமைக்க வேண்டும். மரம் மற்றும் இயற்கை கற்கள் போன்ற நிலையான பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.
நீர் வளங்களை திறம்பட பாதுகாக்க, அனைத்து கட்டுமான திட்டங்களிலும் கட்டாய மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை இணைக்க வேண்டும். விலங்குகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக, வனவிலங்கு வழித்தடங்கள் மற்றும் சூழல் பாலங்களை நிறுவ வேண்டும்.
மரங்களை வெட்டுவதற்கு பதிலாக, அவற்றை இடமாற்றம் செய்ய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். கட்டுமான நடவடிக்கைகளின் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து, பொதுமக்களுக்கு கற்பித்தல் வேண்டும்.
நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில், பசுமை நடைமுறைகளை ஊக்குவிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கட்டுமானத் துறைக்கும், பல்லுயிர் பாதுகாப்புக்கும் இடையிலான நல்லிணக்கத்தை பேண வேண்டும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறைகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை பின்பற்றுதல், எதிர்கால சந்ததியினருக்கான பசுமை வளர்ச்சியின் மரபை உறுதி செய்தல் மூலம், நிலையான முன்னேற்றத்திற்கு வழி வகுக்கலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

