sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கனவு இல்லம்

/

ஆலோசனை

/

 படிக்கட்டு அமைப்பு எப்படி இருக்க வேண்டும்? வழிமுறைகளை விளக்குகிறார் 'கொசினா' உறுப்பினர்

/

 படிக்கட்டு அமைப்பு எப்படி இருக்க வேண்டும்? வழிமுறைகளை விளக்குகிறார் 'கொசினா' உறுப்பினர்

 படிக்கட்டு அமைப்பு எப்படி இருக்க வேண்டும்? வழிமுறைகளை விளக்குகிறார் 'கொசினா' உறுப்பினர்

 படிக்கட்டு அமைப்பு எப்படி இருக்க வேண்டும்? வழிமுறைகளை விளக்குகிறார் 'கொசினா' உறுப்பினர்


ADDED : நவ 29, 2025 12:12 AM

Google News

ADDED : நவ 29, 2025 12:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'பிரெஸ்ட் வால்' மற்றும் 'ரீட் டெயினிங் வால்' இடையே உள்ள வேறுபாடு என்ன?: -குணசுந்தரி: 'பிரெஸ்ட் வால்' எனும் மார்பக சுவர் என்பது, மலைப்பாதைகளில் சாலை மட்டத்திற்கு மேலே ஒரு பக்கமுள்ள மண்ணை தடுத்து நிறுத்தும் ஒரு தடுப்பு சுவர். பள்ளத்தாக்கு பகுதிகளில் சரியாமல் இருக்க கட்டப்படும் சுவர்.

சாலை மட்டத்திற்கு கீழே, 'ரீட்டெயினிங் வால்' எனும் தடுப்பு சுவர் என்பது மேலும் உயரமான கரைகள் அமைக்கும் இரு பக்கவாட்டிலும், உயரமாக உள்ள மண்ணை அணைத்து கீழே சரியாமலும், அதன் மேலே வாகனங்கள் செல்வதற்கு அமைக்கப்படும் ஒரு தொடரமைப்பு.

தற்போது, பெரிய மேம்பாலங்களின் இரு பக்கங்களும் சரியாமல் இருக்க 'ரீஇன்போர்ஸ்டு எர்த் ரீட்டெயினிங் வால்' எனும் புதிய தொழில்நுட்பக் கட்டுமான பொருளை பயன்படுத்துகிறார்கள். தடுப்பு சுவர் ஒரு சாலை உருவாக்கத்தின் மேல்நோக்கி கட்டப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மார்பக சுவர், அதன் கீழ்நோக்கி கட்டப்பட்டுள்ளது. மார்பக சுவர்களுக்கு மறுசீரமைப்பு சுவர்களுக்கான வேறுபாட்டை புரிந்துகொள்ள முடியும். மார்பக சுவர்கள் மலைப்பகுதிகளிலும், தடுப்பு சுவர்கள் சாலையின் பள்ளத்தாக்கு பகுதிகளிலும் கட்டப்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதைகள் பெரும்பாலானவற்றில்: - சுந்தர்: மழைக்காலங்களில் ரயில்வே சுரங்கப்பாலங்களில், மழைநீர் தேங்காமல் இருக்க அந்த வடிகால் அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை. அதுவும் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சுரங்கப்பாதைகளில் இப்பிரச்னை அதிகம் உள்ளது.

ஆங்கிலப் பொறியாளர்கள் இதுபற்றி ஏன் கருதவில்லை என்று தெரியவில்லை.ரயில்வே பாதையின் இரு பக்கங்களிலும் உயரம் தாழ்ந்தும், அதில் சேரும் மழைநீரை எக்கு குழாய்களின் வழி அடிமண்ணில் ஊறச்செய்வதும் நல்ல வழி. செலவும், பராமரிப்பும் குறைவானது. இதனால், தண்ணீர் தேங்குவதை தவிர்க்க முடியும்.

தமிழகத்தில் 'பில்டிங் இன்பர்மேஷன் மாடலிங்' (பி.ஐ.எம்.: -கதிரவன்: பி.ஐ.எம்., உத்தியை, பெரும் கட்டுமான மேலாண்மை நிறுவனங்கள் மற்றும் பெரிய கட்டடக் கலை நிபுணர்கள் பயன்படுத்துகின்றனர். ஒரு கட்டடத்தின் எல்லா வகையான வேலைகள், தேவைகள், சேவைகள் முப்பரிமாண(3டி) வடிவில், பி.ஐ.எம்., முறை தெளிவாக தருகிறது.

நான் வீடு கட்டி வரும் வீட்டில் டைல்ஸ்கள் பதிக்கும் பணியை துவங்க உள்ளேன். அதனை பதிப்பதற்கான வழிமுறைகள் என்ன?: - முனுசாமி: டைல்ஸ் பதிக்கும் முன் மூன்று முதல் நான்கு மணி நேரம், அவற்றை தண்ணீரில் மூழ்க வைக்க வேண்டும். தரைப்பகுதி போதுமான விதத்தில் சமப்படுத்தப்பட்ட பின் மற்றும் லேசாக இறுக்கப்பட்ட பின், டைல்ஸ் பதிக்க ஆரம்பிக்கலாம். அடுத்து சுத்தமான சிமென்ட் கலவை வேண்டும். சரியானபடி பதிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

அடுத்த டைல்ஸ் உடன் நேரடியாக சேரும் வரை, மர சட்டத்தால் தட்டிக்கொடுக்க வேண்டும். இணைப்புகள் நேர்கோடுகளில் இருக்க வேண்டும். 1 முதல், 1.5 மி.மீ., அகலத்துக்கு மேல் இருக்கக்கூடாது.

டைல்ஸ் பதிக்கப்பட்ட பின், குறைந்தபட்சம் ஏழு நாட்கள் வரை கியூரிங் அவசியம். கியூரிங் போதுமானதாக இல்லையேல், டைல் கலவை விட்டு பிரிந்துவிடும்.

படிக்கட்டுகள் அமைக்கும் முறை குறித்து: - ராஜேஷ்வரி: வீட்டில் மாடிப்படி அமைக்கும்பொழுது, பல்வேறு விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். 'த்ரெட்' என்பது படியில் கால் வைத்து மிதித்து ஏறும் உன்னத பகுதி. இதன் அளவு, 250 முதல் 300 மி.மீ., வரை இருக்க வேண்டும்.

'நோசிங் த்ரெட்' படியில் கால் வைத்து மிதித்து ஏறும் கூடுதலான அளவு பகுதி. இதன் அளவு, 1.5 அங்குலம். 'ரைசர்' என்பது இரண்டு த்ரெட்களுக்கு இடையிலுள்ள செங்குத்து உயர பாகம். இதன் அளவு, 150 முதல், 175 மி.மீ., ஆகும். 'நோசிங்' படியில் கால் வைத்து மிதித்து ஏறும் த்ரெட்டை ஒரு அங்குலம் முன் நீட்டி விடுவது.

த்ரெட்டின் கூடுதலாக நீட்டப்பட்ட பகுதியை தாங்கி நிற்பது 'நோசிங் சப்போர்ட்'. 'பாலுஸ்டர்' கைப்பிடி சட்டத்தை தாங்கி நிற்கும் செங்குத்து மரம் அல்லது இரும்பு. இதன் உயர அளவு, 75 செ.மீ., மேல், 85 செ.மீ.,க்குள் அமையலாம். 'பிளைட்' படிகளை தாங்கி செல்லும் பகுதி.

இதுவும் மரம், இரும்பு, கான்கிரீட்டால் ஆனது. கைப்பிடி சட்டம் என்பது படிகளின் மேல் ஏறும்பொழுது ஏறுபவர்கள் கீழே விழாமல் இருக்க, இருபக்கமும் முனைப்பகுதியில் அமைக்கப்படுகிறது.

குறிப்பிட்ட படி ஏறியவுடன் இளைப்பாற வேண்டி அமைக்கப்படும் இடம் 'லேண்டிங்'. இந்த அம்சங்களுடன் படிக்கட்டு அமைத்தால், பாதுகாப்பாக இருக்கும்.

-மாரிமுத்துராஜ்: உறுப்பினர்: கோயம்புத்துார் சிவில் இன்ஜினியர்கள் சங்கம்(கொசினா):






      Dinamalar
      Follow us