/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
வீட்டுக்கான டி.எஸ்.எல்.ஆர்., நிலத்தின் வகைப்பாட்டில் திருத்தம் செய்வது எப்படி?
/
வீட்டுக்கான டி.எஸ்.எல்.ஆர்., நிலத்தின் வகைப்பாட்டில் திருத்தம் செய்வது எப்படி?
வீட்டுக்கான டி.எஸ்.எல்.ஆர்., நிலத்தின் வகைப்பாட்டில் திருத்தம் செய்வது எப்படி?
வீட்டுக்கான டி.எஸ்.எல்.ஆர்., நிலத்தின் வகைப்பாட்டில் திருத்தம் செய்வது எப்படி?
ADDED : ஏப் 04, 2025 11:56 PM
கோவை - திருச்சி ரோடு, சுங்கத்தில் இருந்து தென்புறம் கருணாநிதி நகர், வடக்கு பார்த்த, 30 அடி தார் சாலையில் அமைந்துள்ள பழைய டீ.டி.சி.பி., லே-அவுட்டில், 5.5 சென்ட் இடம் மற்றும் கீழும், மேலுமாக, 3,500 சதுரடியில், நான்கு போர்ஷன்கள், 2பி.எச்.கே., விற்பனைக்கு வருகிறது. என்ன விலைக்கு வாங்கலாம்.
-கணேஷ், ராமநாதபுரம்.
இங்கு, 30 அடி ரோடு என்பது ஒரு நல்ல அமைப்புதான். தாங்கள் சொல்லும் இடம் திருச்சி ரோடு பஸ் ஸ்டாப்பில் இருந்து, 1 கி.மீ., துாரத்தில், அதாவது, 15 நிமிட நடையில் அடைந்துவிடக்கூடியது என்பது நல்ல விஷயம். சுங்கம் ரவுண்டானா என்பது, இன்று மிகப்பெரிய நகர மைல்கல். மாதம் ரூ.50 ஆயிரம் வருமானம் வரும் ஒரு சொத்தை, சட்ட பூர்வமான அனைத்தும் சரியாக இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு, ரூ.2.25 முதல், 2.50 கோடிக்கு வாங்கலாம்.
கோவை, டவுன்ஹால் பெரியகடை வீதியின் பின்புறம் எங்கள் வீட்டிற்கான டி.எஸ்.எல்.ஆர்., நிலத்தின் வகைப்பாட்டில், சர்க்கார்-புஞ்சை என்று வந்துள்ளது. அருகே, மற்றவர்களது டி.எஸ்.எல்.ஆர்.,ல் ரயத்துவாரி-புஞ்சை என்று வந்துள்ளது. இதை எவ்வாறு சரி செய்வது?
-முரளி, கோவை.
சம்பந்தப்பட்ட நகராட்சி மண்டல அலுவலகங்களில் உள்ள சர்வேயரை அணுகி, அவர் சொல்லும் வகையில் விண்ணப்பம், மனு கொடுக்கவும். அவர் பரிந்துரைத்து மாவட்ட கலெக்டருக்கு அனுப்புவார். இதுபோன்ற குழப்பங்கள் நிறைய நடந்துள்ளன. சரி செய்யப்படுகிறது; அதேசமயம் மாதங்கள் ஆகலாம்.
உடனே விடிவு வேண்டுமென்றால், டி.எஸ்.எல்.ஆர்., ஐ இணைத்து, அதில் காணப்படும் 'முரண்பாடுகளின் விபரம்' என விளக்கம் கேட்காமல் 'விபரம்' என்று கேட்டால், ஒருக்கால் 'திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; விரைவில் சரியான தகவல்களுடன் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்' என பதில் கிடைக்கலாம். அதுவே உங்களுக்கான ஒரு தீர்வாக அமையலாம்.
கோவை வடவள்ளி பஸ் ஸ்டாண்டில் இருந்து, சோமையம்பாளையம் செல்லும் வழியில் வடவள்ளியில் இருந்து, 1.5 கி.மீ., தொலைவில் ரோட்டின் மேற்புறத்தில் அமைந்துள்ள, ஜி.எஸ்.வி., லே-அவுட்டில், டீ.டி.சி.பி., 'ரெரா' அனுமதியுடன், 30 அடி தார் சாலையில் ஆறு சென்ட் காலியிடம் விலைக்கு வருகிறது. என்ன விலைக்கு வாங்கலாம்.
-ரவி, வடவள்ளி.
டீ.டி.சி.பி., ரெரா அனுமதி, 30 அடி ரோடு என்ற அம்சங்கள் சிறப்பானவை. வடவள்ளி பஸ் ஸ்டாண்டில் இருந்து, 1.5 கி.மீ., என்பது, 20 நிமிட நடைபயணம். 6 சென்ட் இருக்கும் நிலையில் இடத்தின் அகலம், 40 அடியாக இருந்தால், இரண்டு சைட்களாக பிரிக்கலாம். சென்ட் ரூ.12.5 லட்சம் என்பது தவறில்லாத மதிப்பு. சட்ட கருத்து பெற்று முடிக்கவும்.
இடிகரை கிராமத்தில் உள்ள டீ.டி.சி.பி., லே-அவுட்டில், 16 சென்டில் தெற்கு மற்றும் மேற்கு பார்த்த சைட் உள்ளது. ரோட்டின் அகலம், 40 அடி மற்றும், 30 அடி, சுற்றிலும் கல்லுாரி மற்றும் ஐ.டி., பார்க் உள்ளது. சில கட்டுனர்கள் 'ஜாயின்ட் வென்சுர்'க்கு கேட்கிறார்கள். தக்க அறிவுரை வழங்கவும்.
-நரசிம்மநாயுடு, இடிகரை.
16 சென்ட் என்பதும், 40 அடி, 30 அடி கொண்ட கார்னர் சைட் என்பதும் சிறப்பானது. 16 பிளாட்கள் கட்டலாம். ஒரு பிளாட்டில், 1பி.எச்.கே., ஆக, 850 சதுரடியில் நான்கு விசாலமாக கட்டலாம். ஒரு பிளாட் ரூ.40 லட்சத்துக்கு விற்க முடியுமானால், புரமோட்டர் தங்களுக்கு சென்ட் ரூ.10 லட்சம் தர தயாராக இருப்பார். பிளாட் ரூ.35 லட்சத்துக்கு மேல் தர இயலாது. இடிகரை காந்திபுரத்தில் இருந்து, 15 கி.மீ., தொலைவில் உள்ளது. அங்கு நிறைய தேவைகள் உருவாகும்.
தகவல்: ஆர்.எம். மயிலேறு,
கன்சல்டிங் இன்ஜினியர்.