/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
புதிய வீடு வாங்குவதற்கான இடத்தை தேர்வு செய்வது எப்படி?
/
புதிய வீடு வாங்குவதற்கான இடத்தை தேர்வு செய்வது எப்படி?
புதிய வீடு வாங்குவதற்கான இடத்தை தேர்வு செய்வது எப்படி?
புதிய வீடு வாங்குவதற்கான இடத்தை தேர்வு செய்வது எப்படி?
ADDED : அக் 25, 2025 01:37 AM

பு திதாக சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்னென்ன விஷயங்களை கவனமாக பார்க்க வேண்டும் என்பதில் பலருக்கும் போதிய தெளிவு இருப்பதில்லை. குறிப்பாக புதிதாக வாங்கும் வீடு நமக்கு போதுமான அளவிலும், அதே நேரம் பட்ஜெட்டுக்குள் அடங்கும் வகையிலும் இருக்க வேண்டும்.
இதில், பெரும்பாலான மக்கள் சரியான இடத்தை தேர்வு செய்வது என்ற விஷயத்தில் போதிய விழிப்புணர்வு இன்றி செயல்படுவதாக புகார் கூறப்படுகிறது. வீட்டின் அளவு, வசதிகள், விலை ஆகிய வற்றை பார்க்கும் நிலையில், அது அமைந்துள்ள பகுதி தொடர்பான விஷயங்களை ஆராய மறந்து விடுகின்றனர்.
சென்னை போன்ற நகரங்களில் விலைவாசி உயர்வு காரணமாக, நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர் புதிய வீடு வாங்குவது சவாலாக அமைந்துள்ளது. இதில், கூடுதல் ஆண்டுகள் தவணை செலுத்த வாய்ப் புள்ள நபர்களுக்கு மட்டுமே, கூடுதல் தொகை வீட்டுக்கடனாக கிடைக்கிறது.
இவ்வாறு, கூடுதல் தொகை வீட்டுக்கடனாக கிடைக்க வாய்ப்புள்ள நபர் கள் மட்டுமே, சென்னை போன்ற பகுதிகளில் வீடு வாங்க முடிகிறது. இதில், கூடுதல் தொகை கடன் பெற முடியாத நிலையில் இருப்போர், பழைய வீடுகள் கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளப் படுகின்றனர்.
நீங்கள் வாங்க நினைப்பது புதிய வீடு அல்லது பழைய வீடு என எதுவாக இருந்தாலும் அது எத்தகைய பகுதியில் அமைந்துள்ளது என்று பாருங்கள். இதில், குடும்பத்தில் உள்ள குழந்தைகள் படிப்புக்காக சென்று வரும் இடத்துக்கு அருகில் புதிய வீட்டை தேடுவது நல்லது.
குழந்தைகளுக்கான கல்வி நிறுவனங்கள், போக்குவரத்து வசதிகள் முறையாக அமைந்துள்ளதா என்று தான் பலரும் பார்க்கின்றனர்.
குறிப்பாக, புதிய வீடு வாங்கும் போது அது தேசிய, மாநில நெடுஞ் சாலையை ஒட்டி அமைந்து இருந்தால், அதை கூடுதல் மதிப்பாக மக்கள் இன்றும் பார்க்கின்றனர். உண்மையில் குடியிருப்பு நோக்கத்தில் நீங்கள் ஒரு வீட்டை வாங்க நினைக்கும் போது அது அமைதியான சூழலில் இருக்க வேண்டும்.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டிய மனையில் வீடு வாங்கினால், போக்கு வரத்து நெரிசல், மாசு ஏற்படுவது மட்டுமல்லாது எதிர்காலத்தில் விரிவாக்க திட்டங்கள் வரும் போது பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
புதிய வீடு வாங்கு வதற்கான இடத்தை தேர்வு செய்வதில் அடிப்படை வசதிகளுக்கு அப்பால் பாதுகாப்பு காரணங்களை கவனிக்க வேண்டும்.
இதில் மிக முக்கிய மாக, அதிக கூட்டம் சேரும் இடங்களை ஒட்டி புதிய வீடு வாங்குவது பயன்பாட்டு நிலையில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். மருத்துவ மனைகள், தொழிற் சாலைகளை ஒட்டிய மனைகளில் வீடு வாங்கும் ோது பயன்பாட்டு நிலையில் கூடுதல் பிரச்னைகள் ஏற்படுத்தும்.
எனவே, இது போன்ற விஷயங்கள் அடிப்படையில் புதிய வீடு வாங்கும் முடிவை எடுப்பது நல்லது என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

