/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
வீடு கட்ட தரமான கம்பியை நம்பி தேர்வு செய்வது எப்படி?
/
வீடு கட்ட தரமான கம்பியை நம்பி தேர்வு செய்வது எப்படி?
வீடு கட்ட தரமான கம்பியை நம்பி தேர்வு செய்வது எப்படி?
வீடு கட்ட தரமான கம்பியை நம்பி தேர்வு செய்வது எப்படி?
ADDED : டிச 20, 2024 07:10 PM

கட்டுமான துறையில் அபரித வளர்ச்சி காரணமாக, நவீனங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில், மாற்றுப்பொருட்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. கட்டடத்தின் வலிமை கட்டுமான பொருட்களின் தரத்தை பொறுத்தது.
தரமான பொருட்களை பயன்படுத்தவில்லையேல், எதிர்காலத்தில் பராமரிப்பு செலவு கூடிக்கொண்டே செல்லும் என்பதில் சந்தேகமில்லை. கட்டுமானத்தில் முதுகெலும்பாக இருப்பது கம்பிகள். அதை சரியான முறையில் தேர்வு செய்வது அவசியம்.
புதிய வீடு கட்டும்போது, டி.எம்.டி., கம்பியின் தரம் மிகவும் முக்கியம். இன்றைய சந்தையில் பல வகையான டி.எம்.டி., கம்பிகள் கிடைப்பதால், சரியானதை தேர்வு செய்வதில் சற்று கடினமாக இருக்கலாம். அனைத்து டி.எம்.டி., கம்பிகளிலும் ஐ.எஸ்.ஐ., குறியீடு இருக்க வேண்டும்.
இது, கம்பி தரத்திற்கான அரசாங்க அங்கீகாரமாகும். Fe 500, Fe 550 போன்ற வலிமை குறியீடுகள் கம்பியின் வலிமையை குறிக்கும். உங்கள் வீட்டின் அமைப்புக்கு ஏற்ற, வலிமையைக் கொண்ட கம்பியை தேர்ந்தெடுக்க வேண்டும். D என்ற குறியீடு, இழுவைத் திறனைக் குறிக்கும். இது கம்பியின் நெகிழ்வுத்தன்மையை குறிக்கிறது.
நம்பகமான தயாரிப்பாளரின் கம்பிகளை தேர்ந்தெடுக்கவும். மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் கம்பிகள் தரமாக இருக்காது. சரியான விலையை ஒப்பிட்டுப் பார்த்து வாங்கவும். தரமான கம்பியின் மேற்பரப்பு மென்மையாகவும், குறைபாடுகள் இல்லாமல் இருக்கும்.
ஒரு சிறிய துண்டை எடுத்து வளைத்துப் பார்க்கவும். எளிதில் உடைந்தால், அது தரமான கம்பி அல்ல. தயாரிப்பாளரிடம் இருந்து சான்றிதழ்களை கேட்டுப் பாருங்கள் என, உஷார்ப்படுத்துகின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.

