/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
கட்டுமானத்துக்கு கம்பி தேர்ந்தெடுப்பது எப்படி?
/
கட்டுமானத்துக்கு கம்பி தேர்ந்தெடுப்பது எப்படி?
ADDED : செப் 12, 2025 10:17 PM

க ட்டடத்தின் ஆயுளை நிர்ணயிப்பதில் கட்டுமான பொருட்களின் தரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, கட்டடத்தின் முதுகெலும்பாக இருக்கும் கம்பிகளை இன்றைய சந்தையில் வாங்கும்போது கவனம் அவசியம்.
டி.எம்.டி., கம்பியின் தரத்தை அறிந்துகொண்டு வாங்குவது எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கும், பொருளாதார இழப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும். புதிய வீடு கட்டும்பொழுது டி.எம்.டி., கம்பிகளின் தரம் மிக முக்கியம்.
இன்றைய சந்தையில் பலவகையான டி.எம்.டி., கம்பிகள் கிடைப்பதால், சரியானதை தேர்ந்தெடுப்பது சற்று கடினமாக இருக்கலாம். தரமான டி.எம்.டி., கம்பியை அடையாளம் காண ஐ.எஸ்.ஐ., குறியீடு, அனைத்து டி.எம்.டி., கம்பிகளிலும் அச்சடிக்கப்பட்டு இருக்கும்.
இது, கம்பியின் தரத்துக்கு அரசு தரும் அங்கீகாரம். Fe 500, Fe 550D போன்ற வலிமை குறியீடுகள் கம்பியின் வலிமையை குறிக்கும். உங்கள் வீட்டின் அமைப்புக்கு ஏற்ப வலிமை கொண்ட கம்பியை தேர்ந்தெடுக்கவும். 'D' என்ற குறியீடு இழுவை திறனை குறைக்கும். இது, கம்பியின் நெகிழ்வு தன்மையை குறைக்கிறது.
நம்பகமான தயாரிப்பாளர்களின் கம்பியை தேர்ந்தெடுக்கவும். குறைந்த விலையில் கிடைக்கும் கம்பிகள் தரம் சற்று குறைவாக இருக்கும். தரமான கம்பியின் மேற்பரப்பு மென்மையாகவும், எவ்வித குறைபாடும் இல்லாமலும் இருக்கும்.
சிறிய துண்டை எடுத்து வளைக்கும்போது, எளிதில் உடைந்தால், அது தரமான கம்பி அல்ல. ஒரு நல்ல பொறியாளரை அணுகி, அவருடைய ஆலோசனையை பெற்று, கம்பிகள் வாங்கி பயன்படுத்துவது நல்லது, என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.