/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
கட்டடங்களில் 'கன்சீல்டு' குழாய்களில் உடைப்புகளை சரி செய்யும் வழிமுறைகள்!
/
கட்டடங்களில் 'கன்சீல்டு' குழாய்களில் உடைப்புகளை சரி செய்யும் வழிமுறைகள்!
கட்டடங்களில் 'கன்சீல்டு' குழாய்களில் உடைப்புகளை சரி செய்யும் வழிமுறைகள்!
கட்டடங்களில் 'கன்சீல்டு' குழாய்களில் உடைப்புகளை சரி செய்யும் வழிமுறைகள்!
ADDED : பிப் 03, 2024 09:13 AM

நாம் கட்டடங்களின் உறுதியில், கட்டட அமைப்பில், பயன் படுத்தும் மூலப் பொருட்களின் தரத்தில் செலுத்தும் கவனத்தை வீட்டின் உள்புற பணிகளான மின்சார ஒயர் பதிக்கும் வேலை, பிளம்பிங் போன்றவற்றில் கவனம் செலுத்துவதில்லை. முக்கியமாய் நம் வீட்டு தண்ணீர் குழாய்களின் கட்டமைப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பிளம்பிங் என்பது போதுமான அளவு தண்ணீரைப் பெறுவதையும், எதிர்காலத்தில் கூடுதல் பயன்பாட்டுக்காக அதை முறையாகச் சேமித்து வைப்பதையும், நீரிலிருந்து பரவும் கழிவுகளை முழுமையாக அகற்றுவதையும் உறுதி செய்யும் வழிமுறையாகும்.
ஒரு ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான சூழலுக்கு, நம் வீடுகளில் பிளம்பிங் செய்வதில் கவனம் செலுத்துவது அவசியம், மேலும் அது நமக்குத் தேவையான மன அமைதியை அளிக்கிறது. ஆனால் அதைச் செய்ய, சரியான பிளம்பிங் அமைப்பைப் பராமரிக்க நமக்கு உதவ ஒரு தொழில்முறை பிளம்பரை நியமிக்க வேண்டும்.
கட்டடங்களில் பிளம்பிங் பணிகளை மேற்கொள்வோர் பொதுவாக வெளிப்புற அழகை பாதுகாக்க கவனம் செலுத்துகின்றனர். குழாய்கள் வெளியில் அப்படியே தெரிவதை யாரும் விரும்புவதில்லை. இதற்காக, தண்ணீர் குழாய்களை கன்சீல்டு முறையில் அமைக்கவே பலரும் விரும்புகின்றனர்.
ஆனால் முந்தைய காலங்களில், சுவர்களில் வெளிப்புறத்திலேயே தண்ணீர் குழாய்கள் அமைக்கப்பட்டன. இதனால், குழாய்களில் ஏதாவது கசிவு ஏற்பட்டால் அது கட்டடத்தை பாதிக்காத அளவில் உடனடியாக, அதை சரி செய்ய முடிந்தது. தவறான குழாய்கள் அல்லது கசிவுகள் அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சி, பூஞ்சைக்கு வழிவகுத்துவிடும். எனவே, சீரான இடைவெளியில் பிளம்பிங் அமைப்பைச் சரிபார்க்க வேண்டியது அவசியம்.
ஆனால், தற்போது கன்சீல்டு முறையில் குழாய்கள் பதிக்கப்படுவதால் பல்வேறு புதிய பிரச்னைகள் ஏற்படுகின்றன. குழாய்களில் கசிவு ஏற்பட்டால் அது உடனடியாக வெளியில் தெரியாது. வெளியில் தெரியாமல் இருக்கும் கசிவு மெல்ல கட்டடத்தின் உறுதியை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. இதில் பல்வேறு கட்டடங்களில் குழாய்களில் ஏற்பட்ட கசிவு கட்டடத்தில் சேதம் ஏற்பட்ட பின் தான் கண்டுபிடிக்கப்படுகிறது. இது போன்ற பிரச்னைகளால் கட்டடத்தின் உறுதி பாதிக்கப்படுவதற்கு எந்த நிலையிலும் அனுமதிக்காதீர்.
சில ஆண்டுகள் முன்பு வரை கன்சீல்டு குழாயில் கசிவு, உடைப்பு ஏற்பட்டால் அது வெளியில் தெரியாமல் இருந்து இருக்கலாம். ஆனால், தற்போது இதை கண்டுபிடிக்கவும் பல்வேறு கருவிகள் வந்துவிட்டன. கன்சீல்டு குழாய் செல்லும் பகுதியில் சுவரின் வெளிப்புறத்தில் இருந்தபடியே கசிவுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
இதில் கசிவு இருக்கும் பகுதி கண்டுபிடிக்கப்பட்டவுடன், அங்கு சுவரை உடைக்காமல் சரி செய்வதற்கான வழிமுறைகளும் வந்துள்ளன. எந்த இடத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது என்பது உறுதியான நிலையில் அந்த பகுதியில் மட்டும் சுவரில் சிறிய துளை ஏற்படுத்தப்பட்டு, உடைப்பு சரி செய்யப்படும். இதனால் சுவர்களை உடைப்பது முற்றிலுமாக தவிர்க்கப்படுகிறது.
மேலும், நீர்க்கசிவு முற்றிலுமாக அடைக்கப்படுகிறது. இது போன்ற நவீன கருவிகள் பெரிய கட்டுமான நிறுவனங்கள் பயன்பாட்டில் வந்துவிட்டன. அடுத்த சில ஆண்டுகளில் உள்ளூர் பிளம்பர்கள் அளவிலும் இக்கருவிகள் வந்துவிடும் என்கின்றனர் கட்டுமானத்துறை வல்லுனர்கள்.

