/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
சொத்தின் உரிமையாளர் மாறினால்... வரி விதிப்புக்கு என்ன செய்வது?
/
சொத்தின் உரிமையாளர் மாறினால்... வரி விதிப்புக்கு என்ன செய்வது?
சொத்தின் உரிமையாளர் மாறினால்... வரி விதிப்புக்கு என்ன செய்வது?
சொத்தின் உரிமையாளர் மாறினால்... வரி விதிப்புக்கு என்ன செய்வது?
ADDED : மார் 21, 2025 11:06 PM
சொத்து வரி என்பது, உள்ளாட்சியில் உள்ள காலியிடம், கட்டடம், சேமிப்பு கட்டமைப்புகள், தொலைத்தொடர்பு கோபுரங்கள் ஆகியவற்றின்மீது சுமத்தப்படும் வரி விதிப்பாகும்.
இந்த வரி சம்பந்தமாக, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி சட்டம், 2022(13/4/2022), அதன் விதிகள், 2023ல்(12/4/23) விதிக்கப்பட்டுள்ளன.
பதிவுபெற்ற பொறியாளர்கள் சங்க(கோவை) முன்னாள் தலைவர் கனகசுந்தரம் கூறியதாவது:
சொத்து வரி சம்பந்தப்பட்ட உரிமையாளர் மீது விதிக்கப்படுவதாகும். ஒரு சொத்துக்கு பல உரிமையாளர் இருப்பின், அறை, பிளாட் உட்பட, அவர்கள் அனைவரும் வரி விதிப்புக்கு பொறுப்பாளர்களாக கருதப்படுவார்கள்.
சொத்து வரி கட்ட பொறுப்பானவர் இல்லாத அல்லது கண்டுபிடிக்க முடியாத நிலை இருப்பின், சொத்தின் ஆக்கிரமிப்பாளரே பொறுப்பாவார்.
அவர் வரிகட்ட தவறும் பட்சத்தில், சட்ட நடவடிக்கைக்கு உட்படுவார். கட்டிய வரியை உரிமையாளரிடமிருந்து மீட்க அவருக்கு உரிமையுள்ளது; ஒப்பந்தத்தை பொறுத்து. ஒரு கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு அல்லது பயன்பாட்டுக்கு வந்து, 30 நாட்களுக்குள் கமிஷனரிடம் வரி விதிப்பு வேண்டி படிவம் தாக்கல் செய்யவேண்டும். சொத்தின் உரிமையாளர் மாறினால், மூன்று மாதத்திற்குள் கமிஷனருக்கு படிவம் அனுப்ப வேண்டும். இறப்பு நேரிடும் பட்சத்தில் ஒரு வருடத்திற்குள் அனுப்ப வேண்டும்.
வரி விதிக்கப்பட்ட கட்டடம் அகற்றப்பட்டாலோ, இடிந்து விட்டாலோ ஆணையருக்கு தெரிவிக்க வேண்டும். இல்லையேல் சொத்து வரி விதிப்பு தொடரும்.
வரி விதிப்புக்கு படிவம் தாக்கல் செய்யப்பட்டவுடன், 30 நாட்களுக்குள், கமிஷனர் ஆய்வு செய்து விசாரணை செய்து மாமன்ற தீர்மானத்திற்கு உட்பட்டு, சொத்து வரி கணக்கிட்டு, விண்ணப்பதாரருக்கு வழங்க வேண்டும்.
இதன் மீது எதிர்ப்பு, ஆட்சேபனை ஏதாவது இருப்பின், 15 நாட்களுக்கு குறையாமல் அவகாசம் விண்ணப்பதாரருக்கு அளிக்கப்படவேண்டும். ஆட்சேபனை பெறப்படின், 15 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வ உத்தரவு அதன்மீது ஆணையர் அளிக்க வேண்டும். எந்த அரைவருட காலத்தில் வரி விதிப்புக்குள்ளானதோ, அந்த அரை ஆண்டிலிருந்து வரி செலுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.