/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
குறைந்த விலை விகிதத்தில் வீடு கட்டுவதற்கான ஒப்பந்தம் செய்வது சரியா?
/
குறைந்த விலை விகிதத்தில் வீடு கட்டுவதற்கான ஒப்பந்தம் செய்வது சரியா?
குறைந்த விலை விகிதத்தில் வீடு கட்டுவதற்கான ஒப்பந்தம் செய்வது சரியா?
குறைந்த விலை விகிதத்தில் வீடு கட்டுவதற்கான ஒப்பந்தம் செய்வது சரியா?
ADDED : ஏப் 26, 2025 07:27 AM

புதிதாக வீடு கட்ட வேண்டும் என்று திட்டமிடுவோர் குறிப்பிட்ட சில விஷயங்களில் தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டியதுஅவசியம். குறிப்பாக, வீடு கட்டும் பணியை யாரிடம் ஒப்படைப்பது என்பதில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டியது அவசியம்.
பொதுவாக வீடு கட்டும் பணிகளை ஒப்பந்த முறையில் தகுந்த நபரிடம் ஒப்படைப்பது தான் சரியான வழிமுறையாக பரிந்துரைக்கப்படுகிறது. இதன்படி, உங்கள் வீட்டை கட்டும் பணியை எந்த அடிப்படையில் ஒப்படைப்பது என்பதில் மிக கவனமாக செயல்பட வேண்டும்.
பெரும்பாலான மக்கள் வீடு கட்டுவதற்கான ஒப்பந்ததாரரை தேர்வு செய்யும் போது, ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களிடம் உத்தேச விலை பட்டியல் வாங்குகின்றனர். இதில் யார் மிக குறைவான தொகையை குறிப்பிடுகிறார் என்று பார்த்து, அவரிடம் பணிகளை ஒப்படைக்க தயாராகின்றனர்.
இதில், சில இடங்களில் மிக குறைவாக அதாவது, ஒரு சதுர அடிக்கு, 1,500 ரூபாய் என்று விலை விகிதங்களை குறிப்பிடும் நபரிடம் ஒப்பந்தம் செய்தால், குறைந்த செலவில் வீட்டை கட்டி முடித்துவிடலாம் என்று மக்கள் நினைக்கின்றனர். இது போல் மிக குறைந்த விலையை குறிப்பிடும் நபர்களிடம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
புதிதாக வீடு கட்ட வேண்டும் என்று திட்டமிடுவோர், அதற்கான விலை விகிதங்கள் குறித்து பொதுவான அடிப்படையில் முதலில் விசாரிக்க வேண்டும். நீங்கள் நிலம் வாங்கிய பகுதியில், அக்கம் பக்கத்தில் சதுர அடிக்கு என்ன விலை விகிதத்தில் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன என்பதை விசாரியுங்கள்.
இதில் தெரியவரும் சராசரி விலையைவிட மிக குறைவான தொகையை குறிப்பிடும் நபர்களை பயன்படுத்தினால், அதனால் ஏற்படும் பிரச்னைகளுக்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டிஇருக்கும். உதாரணமாக, ஒரு ஊரில், சதுர அடி, 2,000 ரூபாய் முதல், பல்வேறு தொகைகள் குறிப்பிடப்படும் போது, யாரோ ஒருவர், சதுர அடிக்கு, 1,500 ரூபாய் என்று கூறினால் அதை அப்படியே நம்பிவிடக் கூடாது.
சந்தை நிலவரப்படி, ஒரு சதுர அடிக்கான கட்டுமான பணிகளை, 1,500 ரூபாய்க்கு மேற்கொள்ள முடியுமா என்பதை சரி பார்க்காமல் ஒப்பந்தம் செய்யக்கூடாது. இதில், கட்டுமான பொருட்களின் விலை, பணியாளர் கூலி, இதர செலவுகளை கருத்தில் வைத்து தான் ஒரு முடிவை எடுக்க வேண்டும்.
எனவே, அசாதாரணமான முறையில் மிக மிக குறைவான தொகையில்ஒருவர் வீடு கட்டி கொடுக்க முன்வந்தால், அவசரப்பட்டு முடிவுகள்எடுக்கக் கூடாது. விலைவாசி நிலவரம் அறிந்து, எதார்த்த சூழலை உணர்ந்து ஒரு முடிவை எடுப்பது தான் சரியாக இருக்கும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.