sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கனவு இல்லம்

/

ஆலோசனை

/

கிச்சனில் கரப்பான் பெருகி விட்டதே?

/

கிச்சனில் கரப்பான் பெருகி விட்டதே?

கிச்சனில் கரப்பான் பெருகி விட்டதே?

கிச்சனில் கரப்பான் பெருகி விட்டதே?

1


ADDED : பிப் 15, 2025 08:17 AM

Google News

ADDED : பிப் 15, 2025 08:17 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எனது வீட்டில் ஹோம் தியேட்டர் அமைக்கலாம் என்று இருக்கிறேன். உங்கள் ஆலோசனைகள் என்ன?


-கிரிஸ்டீனா, மீனா எஸ்டேட்.

ஒரு முழுமையான ஹோம் தியேட்டர் அறை என்பது, ஒரு டிவி மற்றும் ஸ்பீக்கர் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. புராஜெக்டர் திரை, புராஜெக்டர், சீலிங் கிட், எச்.டி.எம்.ஐ., கேபிள்கள், ஸ்பீக்கர் கேபிள்கள், சரவுண்ட் சவுண்ட் ஸ்பீக்கர்கள், அதன் கனெக்டர்கள், எதிரொலியை முற்றிலும் கட்டுப்படுத்தும், ஒலி உறிஞ்சும் தன்மையுள்ள சுவர் பேனல்கள் மற்றும் கார்பெட் புளோரிங் போன்றவை உள்ளடக்கியவை.

மூன்று மணி நேரம் களைப்பின்றி, உட்கார்ந்து குடும்பத்துடன் படம் பார்க்க தகுந்த, தியேட்டர் ஸ்டைல் அடுக்கு சீட்டிங் போன்றவை இருந்தால்தான், ஹோம் தியேட்டர் அறை முழுமை பெறும். இவை அனைத்தையும், ஒரு சவுண்ட் இன்ஜினியர் மேற்பார்வையில் மேற்கொள்ள வேண்டும்.

எங்கள் ஹாஸ்டலில் சமையல் எரிவாயு செலவைக் குறைக்க, உணவுக் கழிவிலிருந்து 'பயோ காஸ்' தயாரிக்கும் பிளான்ட் நிறுவலாமா?


-கிருஷ்ணகுமார், பீளமேடு.

தாராளமாக நிறுவலாம். தினசரி உங்களது சமையல் அறையில் மீதமாகும் சாப்பாடு, காய்கறி, பழங்கள், மாமிசங்கள் போன்ற அனைத்தையும், 'பயோ மீத்தனைசேஷன்' முறையில் செயல்படும், பயோ காஸ் திட்டத்தில் நிறுவலாம். இதை எல்.பி.ஜி., போன்று சமையல் எரிவாயுவாக உபயோகிக்க முடியும். பணமும் மீதமாகும். சுற்றுப்புறத்தையும் துாய்மையாக வைக்க முடியும். உங்கள் கட்டடத்தின் மாடி அல்லது பக்கவாட்டில், இந்த பயோ காஸ் பிளான்ட் வைத்துக் கொள்ளலாம். எந்தவித துர்நாற்றமும் இருக்காது. நாள் ஒன்றுக்கு மூன்று முதல், நான்கு மணி நேரம் பயன்படுத்தலாம்.

மாடுலர் கிச்சன் அமைத்தால், கரப்பான் பூச்சி தொல்லை வருகிறது. என்ன தீர்வு?


-கண்மணி, தாராபுரம்.

மாடுலர் கிச்சன் இல்லாவிட்டாலும், ஈரம் மற்றும் உணவு பொருட்கள் இருக்கும் இடத்தில் கரப்பான் வரும். இன்றைய அவசர உலகில், சமையல் அறையை அழகாக வைத்துக்கொள்ள 'மாடுலர் கிச்சன்' அவசியம் தேவை. கரப்பான் மட்டுமல்லாமல், உங்கள் வீட்டினைத் தாக்கும் மூட்டைப்பூச்சி, கரையான், பல்லி, கொசு, எலி, மரவண்டு, ஈ மற்றும் எறும்பையும்கூட கட்டுப்படுத்தும் வண்ணம் 'பெஸ்ட் கன்ட்ரோல்' நிறுவனங்கள் உள்ளன. அவற்றை தொடர்பு கொண்டால், இதற்கான தீர்வு கிடைக்கும்.

பாத்ரூம்களில் இறக்கி போடப்படும் சங்கன் சிலாப்களை, எதைக் கொண்டு நிறைப்பது சிறந்தது?


-லோகநாதன், மலுமிச்சம்பட்டி.

பொதுவாக, இப்போது 'வெஸ்டர்ன் டைப் டாய்லெட்' அமைப்பதால் சிலாப்பினை ஏறத்தாழ, 9 இன்ச் இறக்கி போடவேண்டியது இருக்கும். அந்த பகுதியில் எடை மிகவும் குறைவான 'வெர்மிகுலைட்' என்ற வேதியியல் பொருள் மற்றும் சிமென்ட் கலவை கொண்டு நிறைத்தால், உங்கள் கட்டடத்தில் தேவையற்ற பளு ஏறாது. இந்த வெர்மிகுலைட், சந்தையில் பல்வேறு பெயர்களில் கிடைக்கின்றது.

ஏற்கனவே கட்டியுள்ள எங்கள் வீட்டின், தரை தளத்திலிருந்து முதல் தளம் செல்ல ஹோம் எலிவேட்டர் அமைக்க முடியுமா?


-சுமதி, சரவணம்பட்டி.

நிச்சயமாக முடியும். உங்கள் தரைதள சிலாப்பில் கட்டிங் செய்து, ஹோம் எலிவேட்டரை எளிதில் அமைக்கலாம். தகுந்த பொறியாளர் மேற்பார்வையுடன் செய்வது நல்லது. இந்த வகை லிப்ட்க்கு ஆழமான அஸ்திவாரம் அவசியமில்லை.



- செவ்வேள்

துணைத் தலைவர்,

கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியளர் சங்கம் (காட்சியா).






      Dinamalar
      Follow us