சிறிய வீடு கட்ட பிரீகாஸ்ட் கட்டுமான முறை உகந்ததா?
சிறிய வீடு கட்ட பிரீகாஸ்ட் கட்டுமான முறை உகந்ததா?
ADDED : ஜூலை 18, 2026 06:57 AM

கட்டுமான பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட சூழலில் வீடு கட்டும்போது சதுரடி விலையில் ஒப்பந்தம் செய்வது நல்லதா? அல்லது 'பில் ஆப் குவான்டிடீஸ்'(பி.ஓ.கியூ.: -அருண் பிரசாத்: கட்டுமான துறையில் பொருட்களின் விலை, தொழிலாளர்களின் கூலி மற்றும் சந்தை நிலவரம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதால், சதுரடி விலை ஒப்பந்தத்தை விட பி.ஓ.கியூ., அடிப்படையிலான ஒப்பந்தமே சிறந்தது.
இந்த முறைப்படி ஒவ்வொரு பொருளின் அளவு, தரம், விலை மற்றும் செய்யப்படும் பணிகளின் விவரம் தெளிவாக குறிப்பிடப்படும். இதனால் தரமான பொருட்கள் பயன்படுத்துவதை உறுதி செய்ய முடியும்; தேவையற்ற செலவுகளையும் தவிர்க்கலாம்.
கட்டடத்தின் வலிமை, நீடித்த ஆயுள் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவும் உறுதி செய்யப்படும். இது பாதுகாப்பானதும், தரமானதும், நீண்ட காலத்திற்கு பயனளிப்பதும்கூட.
நாங்கள் தோட்டத்தில் இயற்கை சார்ந்த தற்சார்பு வீட்டை அமைக்க திட்டமிட்டுள்ளோம்; சாத்தியமா?: -சிவா: சாத்தியமானது. தமிழர்கள் பண்டைய காலம் முதலே உள்ளூரில் கிடைக்கும் மண், கல், மரம், மூங்கில், பனை போன்ற இயற்கை பொருட்களை கொண்டு தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற தற்சார்பு வீடுகளை அமைத்து வாழ்ந்துள்ளனர். இடம், காலநிலை, கலாசாரம் மற்றும் உள்ளூர் வளங்களை அடிப்படையாக கொண்ட அந்த கட்டுமான முறைகள் அறிவியல் ரீதியாகவும் சிறந்தவை.
இன்று கான்கிரீட் கட்டடங்கள் வலிமையாக இருந்தாலும், அவற்றின் உற்பத்தி மற்றும் கட்டுமானத்தில் அதிக கார்பன் வெளியேற்றம் ஏற்படுவதுடன் இயற்கை வளங்களின் பயன்பாடும் அதிகரிக்கிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கும் பொருளாதாரத்திற்கும் கூடுதல் சுமை ஏற்படுகிறது.
அதே நேரத்தில், இயற்கை சார்ந்த தற்சார்பு கட்டுமானங்களில் ஆரம்ப கட்டத்தில் சில திட்டமிடல் மற்றும் தொழில்நுட்ப சவால்கள் இருந்தாலும், கட்டடம் முழுமை பெற்ற பிறகு குறைந்த பராமரிப்பு, குறைந்த மின் தேவை, ஆரோக்கியமான வாழ்விடம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீண்டகால பொருளாதார சேமிப்பு போன்ற பல நன்மைகள் கிடைக்கின்றன. இது எதிர்கால தலைமுறைக்கு நிலையான கட்டுமான முறையாகவும் திகழ்கிறது.
தற்போது நவீன கட்டுமான முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில்: -மாணிக்கம்: ஆம். பிரீகாஸ்ட் கட்டுமான முறை சிறிய வீடுகளுக்கும் உகந்ததே. குறிப்பாக, ஒரே மாதிரியான பல வீடுகளை ஒரே திட்டத்தில் கட்டும்போது, இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட தரமான கான்கிரீட் உறுப்புகள் தளத்தில் பொருத்தப்படுவதால் கட்டுமான காலம் குறைகிறது; தரம் சீராக இருக்கும்.
பொருள் விரயம் குறையும். கட்டடத்தின் வலிமை, நீடித்த ஆயுள் ஆகியவை மேம்படும். தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் காலநிலை பாதிப்புகளையும் குறைக்க முடியும். எனவே, திட்டமிடப்பட்ட முறையில் செயல்படுத்தப்படும் பிரீகாஸ்ட் கட்டுமானம், இன்றைய காலகட்டத்தில் வேகமான, தரமான மற்றும் நவீன கட்டுமான முறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
நாங்கள் கட்டி வரும் வீட்டில் சிமென்ட் கலவைக்கு பதிலாக 'டைல் அட்ஹீசிவ்' பயன்படுத்த வேண்டும் என்கிறார். இது சரியானதா?: -சீனிவாசன்: தற்போது சந்தையில் பல வகையான தரமான தரை மற்றும் சுவர் டைல்ஸ் கிடைக்கின்றன. அவற்றிற்கு ஏற்றவாறு பிரத்யேகமாக தயாரிக்கப்படும் டைல் அட்ஹீசிவ்கள் நியாயமான விலையில் கிடைக்கின்றன. சிமென்ட் கலவையைவிட டைல் அட்ஹீசிவ் பயன்படுத்துவதால் டைல்கள் உறுதியாக ஒட்டும். வெற்றிடங்கள் உருவாகும் வாய்ப்பு குறையும். நீண்ட காலம் நிலைத்திருக்கும். டைல்களை டைல் ஸ்பேசர்கள் பயன்படுத்தி சரியான இடைவெளியுடன் அமைத்தால் இணைப்புகள் சீராக இருக்கும்.
-விஜயகுமார்: முன்னாள் தலைவர்: கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கம் (காட்சியா).:
