/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
கான்கிரீட் தண்ணீர் தொட்டியில் கசிவு; சரி செய்வது எப்படி என விளக்கம்
/
கான்கிரீட் தண்ணீர் தொட்டியில் கசிவு; சரி செய்வது எப்படி என விளக்கம்
கான்கிரீட் தண்ணீர் தொட்டியில் கசிவு; சரி செய்வது எப்படி என விளக்கம்
கான்கிரீட் தண்ணீர் தொட்டியில் கசிவு; சரி செய்வது எப்படி என விளக்கம்
ADDED : ஆக 08, 2025 08:40 PM

பொ துவாக கட்டடத்தின் உச்சியில்தான், நீர்த்தொட்டி கட்டப்படுகின்றன. அதில், எப்போதும் நீர் இருந்துகொண்டே இருக்கும். எனவே, நீர் தொட்டியினை பாதுகாப்பாக கட்டவில்லையேல் நீர்க்கசிவு கண்டிப்பாக ஏற்படும்.
ஈரக்கசிவை தடுக்க தற்போது சில வகை பவுடர்கள் பயன்படுத்தப்படுகின்றன. நீர் தொட்டியின் சுவர்களை எழுப்பி அவற்றின்மீது, சிமென்ட் கலவையை பூசும்போது, அக்கலவையின் ஈரத்தன்மையை தடுக்கும் பவுடரையும் போட்டு கலந்துவிட வேண்டும்.
அவ்வாறு செய்துவிட்டால் நீர்த்தொட்டியின் சுவர்களில் ஈரத்தன்மையே ஏற்படாது. அந்த இடங்களில் 'V' போன்ற பள்ளத்தை உண்டாக்க வேண்டும். அதன் ஆழம், 60 முதல், 75 மி.மீ., வரை இருக்கலாம். அந்த பள்ளத்தில் 'பிட்டுமென்' கலவையை போட்டு நிரப்பிட வேண்டும்.
பின்னர் அதன்மீது சிமென்ட் கலவையால் நன்கு பூசினால், அந்த இடத்தில் நீர்க்கசிவே ஏற்படாது. நீர்க்கசிவு ஏற்படும் இடம் சிறிதாகவும், மிகக்குறைவாகவும் இருந்தால் அந்த இடத்தில் 'பிட்டுமென் பெல்ட்'களை பயன்படுத்தலாம்.
தொட்டியில் நீர் நிறைந்து, பிறகு தளும்பி வழிந்து சுவர்களின் வழியாக இறங்குவதுண்டு. இதனால் சுவர்கள் ஈரத்தன்மை பெற்று நாளடைவில் உறுதித்தன்மையை இழந்துவிடும். இப்பிரச்னை ஏற்படாமல் இருக்க தொட்டியின் விளிம்பில் ஒரு குழாய் பொருத்த வேண்டும்.
இதனால், தொட்டி நிரம்பினாலும் தளும்ப வழியில்லை. குழாய் வழியாக தண்ணீர் வெளியேறுவதால் சுவர்கள் ஈரத்தன்மை பெற்று பாதிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது. சில சமயங்களில் தொட்டியின் பக்கவாட்டில் நீர்க்கசிவு ஏற்படுவதுண்டு.
அதற்கு பக்கவாட்டு சுவரில் ஏற்படும் விரிசலே காரணம். விரிசல் ஏற்பட்டிருக்கும் இடத்தில் சிமென்ட் கலவையை வைத்து நன்றாக பூச வேண்டும்.
அந்த சிமென்ட் கலவையில் ஈரக்கசிவை நிறுத்தும் பவுடரையும் கலந்துவிடலாம். அதன்பிறகு தொட்டியில் பக்கவாட்டில் கசிவு உண்டாகாது என்கிறார் 'கொசினா' உறுப்பினர் மாரிமுத்துராஜ்.