/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
குறைந்த தாங்கும் திறன் கொண்ட களிமண்ணா... வலிமை ஏற்படுத்துகிறது 'பிரீலோடிங்' நுட்பம்!
/
குறைந்த தாங்கும் திறன் கொண்ட களிமண்ணா... வலிமை ஏற்படுத்துகிறது 'பிரீலோடிங்' நுட்பம்!
குறைந்த தாங்கும் திறன் கொண்ட களிமண்ணா... வலிமை ஏற்படுத்துகிறது 'பிரீலோடிங்' நுட்பம்!
குறைந்த தாங்கும் திறன் கொண்ட களிமண்ணா... வலிமை ஏற்படுத்துகிறது 'பிரீலோடிங்' நுட்பம்!
ADDED : பிப் 07, 2025 10:17 PM

எ ந்தவொரு கட்டடத்தின் செயல்பாடும், ஆயுளும், அதன் அடித்தளத்தின் தன்மையை பொறுத்து அமைகிறது. அடித்தளத்தின் கீழ் உள்ள மண், களி மண்ணாக இருக்கும் பட்சத்தில், அதன் தனித்துவமான தன்மைகளால் அடித்தளத்தை வடிவமைப்பதிலும், அடித்தளத்தின் வகையை முடிவு செய்வதிலும், பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரி மண் தொழில்நுட்ப துறை முன்னாள் பேராசிரியர் அருமைராஜ் கூறியதாவது:
களி மண்ணில் கட்டடம் கட்டிய உடன், அமிழ்வு(செட்டில்மென்ட்) ஏற்படுவதோடு அல்லாமல், இந்த அமிழ்வு பல வருடங்கள் தொடரும் நிலை உண்டு. மற்ற வகை மண்ணில் கட்டடம் கட்டியவுடன் ஏற்படும் அமிழ்வோடு நின்றுவிடும். களிமண் அதன் ஈரப்பதத்தின் நிமித்தமாக சுருக்கம் மற்றும் விரிவாக்கம் தன்மைகளை கொண்டதாக இருக்கிறது.
இதனால் கட்டடங்கள், மேடைகள் உள்ளிட்டவற்றில், வெடிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
களிமண் குறைவான நீர், ஊடுறுவக்கூடிய தன்மை கொண்டது. மிக கடினமான, மிக மென்மையான நிலையிலும் இது காணப்படும். மிக மென்மையான நிலையில் களிமண் இருக்கும்போது, அதன் தாங்கும் திறன் மிகவும் குறைவாக இருக்கும்.
இதை பிரத்யேக, பரிசோதனைகளை செய்வதன் மூலமே அறிந்துகொள்ள முடியும். களி மண்ணின் தாங்கும் திறனை மேம்படுத்தும் நுட்பத்தில் ஒன்றாக, முன் ஏற்றுதல்(பிரீலோடிங் டெக்னிக்) உள்ளது.
முன் ஏற்றுதலில் மணல் கிராவல், கம்பி, கான்கிரீட் பிளாக் என ஏனைய பொருட்கள் மூலமாக நிலைப்பளுவாக பயன்படுத்தலாம்.
இது சுருக்கக்கூடிய மண்ணின் கூடுதல் செங்குத்து, அழுத்தத்தை பயன்படுத்தி துளைநீரை நீக்குவதன் வாயிலாக, மண்ணின் தடிமத்தை குறைத்து, துளைநீர் மீண்டும் குடியேறுவதை தடுக்கிறது. இத்துடன், மணல் வடிகால்களை இணைத்து, குறுகிய காலத்தில் தாங்கும் திறனை மேம்படுத்தலாம். நம் முன்னோர்கள் களி மண் கட்டடம் கட்டும்போது, தளமட்டத்திற்கு கட்டடத்தை எழுப்பி ஆறு மாதத்திற்கு அப்படியே விட்டு விடுவார்கள். இதனால் அழுத்தம் ஏற்பட்டு, களிமண்ணின் தடிமன் குறைக்கப்பட்டு, துளைநீர் வெளியேற்றப்படும். அதுவே பிற்காலத்தில் முன் ஏற்றுதல் நுட்பமாக மாறியுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.