/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
ஒரு மனையில் ஒன்றுக்கும் மேற்பட்ட புல எண்கள்; ஏதேனும் பாதிப்புகள் வர வாய்ப்புள்ளதா?
/
ஒரு மனையில் ஒன்றுக்கும் மேற்பட்ட புல எண்கள்; ஏதேனும் பாதிப்புகள் வர வாய்ப்புள்ளதா?
ஒரு மனையில் ஒன்றுக்கும் மேற்பட்ட புல எண்கள்; ஏதேனும் பாதிப்புகள் வர வாய்ப்புள்ளதா?
ஒரு மனையில் ஒன்றுக்கும் மேற்பட்ட புல எண்கள்; ஏதேனும் பாதிப்புகள் வர வாய்ப்புள்ளதா?
ADDED : ஜூலை 12, 2025 01:04 AM
கோவை காந்திபுரம், வி.கே.கே. மேனன் ரோடு, சித்தாபுதுாரில் நான்கு சென்ட் இடம், குடிநீர் இணைப்பு, போர்வெல், யு.ஜி.டி., இணைப்பு, மின்சாரம், மாத வாடகை ரூ.85 ஆயிரம், மூன்று தளம் கொண்ட வீடு(இரு பகுதி) உள்ளது. முதல் பகுதியில், 35 ஆண்டுகள் வயதுடைய, , 352 சதுரடியுடன் ஆர்.சி.சி., வீடு, சிமென்ட் தளம், இரண்டாம் பகுதி, 800 சதுரடியில் தரைதளம் ஆர்.சி.சி., வீடு, 45 ஆண்டுகள் வயதை கொண்டுள்ளது. இந்த வீடுகள் அனைத்துக்கும் 'அட்டாச்டு பாத்ரூம்', தனித்தனி மின் இணைப்பு வசதிகள் உள்ள நிலையில், என்ன விலைக்கு வாங்கலாம்?
-குமரேசன், வி.கே.கே.மேனன் ரோடு.
ரூ.2 கோடி என்பது தப்பில்லாத மதிப்பு. வாடகைக்கு விடப்பட்டிருந்து ரூ.50 ஆயிரம் மாதம் வருகிறதா என பார்க்கவும். இல்லை இடிக்க வேண்டிய நிலையாக இருந்தால் இடித்து ஆறு போர்ஷன், 600 சதுரடி என கட்டினால் ஆறும் சேர்த்து, ரூ.75 ஆயிரம் வந்தால் இந்த மதிப்பு தவறில்லை எனக் கொள்ளவும். அந்த பகுதியில் வாடகை நிலவரத்தை விசாரித்து ரூ.12 ஆயிரத்து, 500 குறையாமல் அல்லது அதற்கு மேலேதான் என்றால் துணிந்து வாங்கலாம்.
பீளமேடு பயனிர் மில் ரோட்டில் ஆர்.கே., மில்ஸ் 'சி' காலனியில் உள்ள ஐந்து சென்ட், 10*15 அடிக்கு ஆர்.சி.சி., கட்டடம், 10*10 அடிக்கு ஆறு சிமென்ட் சீட் உள்ள வீடு விற்பனைக்கு வருகிறது. என்ன விலைக்கு வாங்கலாம்?
-ரங்கம்மாள், நரசிம்மநாயக்கன்பாளையம்.
ரோட்டின் அகலம், மனையின் அகலம் ஆகியவை குறிப்பிடப்படவில்லை. எனவே, குறைவாக மதிப்பிட்டு பார்த்தால் இடம் மட்டும் ரூ.80 லட்சம் பெறும். 20 அடிக்கு மேல் ரோட்டின் அகலம் இருந்து, மனையின் அகலம், 35 அடிக்கு மேல் இருந்தால் நிச்சயமாக ரூ.1 கோடி பெறும். கட்டடங்களை ரூ.5 லட்சத்துக்கு மேல் மதிப்பிட முடியாது. தண்ணீர், மின்சார இணைப்பு ஆகியவற்றிற்கு கட்டடத்துடன் சேர்த்து, ரூ.1.5 லட்சம் என கூடுதலாக மதிப்பிடலாம்.
டி.டி.சி.பி., மற்றும் 'ரெரா' அனுமதி மற்றும் பதிவு பெற்ற, 500க்கும் மேல் வீட்டு மனைகள் கொண்ட பெரிய லே-அவுட்டில், ஒன்று அல்லது இரண்டு மனைகள் வாங்கும்போது, தனியாக வழக்கறிஞரிடம் சட்ட ஆலோசனை பெற வேண்டுமா?
-ரங்கசாமி, அப்பநாயக்கன்பாளையம்.
ஆம். கண்டிப்பாக வாங்க வேண்டும். பெரிய லே-அவுட் என்பதாலும், பெரிய விலாசம் என்பதாலும் நாம் நமது கடின உழைப்பால் வந்த பணத்தை தக்க விசாரணை, ஆவணங்கள் பார்வை ஆகியவை இல்லாது ஒருபோதும் பணத்தை இழக்க முடியாது. குடும்ப வக்கீலை கலந்துகொள்ளவும். இந்த ரூ.6,000, 7,500 என்பது, உங்கள் கிரயத்தொகையில் புள்ளி விகிதாசாரம்கூட வராது. அந்த அபிப்ராயத்தை எழுத்தாக பெற்று, உங்கள் விற்பனை பத்திரத்துடன் வைத்துக்கொள்ளுங்கள்.
* ஒரு மனையில் இரண்டு அல்லது மூன்று புல எண்(எஸ்.எப்.,) இருந்தால் ஏதேனும் பாதிப்புகள் வருமா?
-கதிரவன், கோவை.
நீங்கள் சொல்வதுபோல் இருக்க வாய்ப்பு இல்லை. ஒரு பிளாட் என்பது, 5-7 சென்ட். ஆனால், எஸ்.எப்., எண் என்பது ஏக்கர் கணக்கில் இருக்கும். அநேகமாக, நீங்கள் சொல்வது அந்த லே-அவுட் உத்தரவில், 2-3 எஸ்.எப்., எண்களில் உள்ள லே-அவுட் என குறிப்பிடப்பட்டதாக இருக்கும். இந்த பிரச்னையை தவிர்க்க, உங்கள் பிளாட்டுக்கென பட்டா கேளுங்கள்; நாட்கள் ஆகலாம். ஆனால், தரப்பட வேண்டும். இந்நாளில் பிளாட்களுக்கென தனி பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
-தகவல்: ஆர்.எம். மயிலேறு,
கன்சல்டிங் இன்ஜினியர்.