/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
எங்கு வீடு கட்டினாலும் முதலில் நிபந்தனைகளை அறிவது நல்லது
/
எங்கு வீடு கட்டினாலும் முதலில் நிபந்தனைகளை அறிவது நல்லது
எங்கு வீடு கட்டினாலும் முதலில் நிபந்தனைகளை அறிவது நல்லது
எங்கு வீடு கட்டினாலும் முதலில் நிபந்தனைகளை அறிவது நல்லது
ADDED : ஜன 18, 2025 07:32 AM

கனவு இல்லம் அமைக்க முதலில் தேவை, ஒரு நல்ல மனையிடம். அந்த மனையிடம் அமைந்துள்ள பகுதி நகரமா அல்லது பஞ்சாயத்தா என முடிவெடுத்து, தேடுதல் ஆரம்பிக்க வேண்டும்.
ஒரு லே-அவுட் எங்கு அமைந்திருப்பினும், சாலை, நீர், தெருவிளக்கு, பூங்கா, மழைநீர், கழிவு வெளியேற்றம் போன்றவற்றில், பெரும் மாறுபாடு இருக்காது.
விதிகளில் நகர்ப்புறம் அல்லது பஞ்சாயத்து என வேறுபாடு இல்லை. நகர்ப்புறமெனில் லே-அவுட்டுக்கு வெளியில் சுற்றுப்புறத்தில் அகன்ற சாலை, பாதாள சாக்கடை வசதி, போக்குவரத்து வசதி, குப்பை சேகரிப்பு மற்றும் அகற்றம் போன்ற பொது அடிப்படை வசதிகள் சிறப்பாக இருக்கும். உள்ளாட்சி வரியும் அதற்கேற்ப கூடுதலாக இருக்கும்.
நவீன வாழ்க்கைக்கு தேவையான, பிற வசதிகளும் எளிதில் அமையும். விமான ஏறு, இறங்கு தடத்தில் பிளாட் அமைந்தால், ஒலி மாசு இருக்குமா என அறிந்து கொள்வது பயனுள்ளது. இதன் வாயிலாக, பிற்காலத்தில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கலாம்.
பதிவு பெற்ற பொறியாளர்கள் சங்க (கோவை) முன்னாள் தலைவர் கனகசுந்தரம் கூறியதாவது:
பஞ்சாயத்து பகுதிகளில் சாலைகள் அகலம் அளவாக இருந்தாலும், போக்குவரத்துக்கு ஏற்ப அமைந்திருக்கும்; நெரிசல் இருக்காது. பாதாள சாக்கடை வசதி எதிர்பார்க்கலாகாது. மாறாக, நவீன செப்டிக் டேங்க் கொண்டு, கழிவை திரவ வடிவில் மாற்றி வெளியேற்றலாம்.
பள்ளி, மருத்துவ வசதி அமைந்துள்ளதை பொறுத்து, இடத்தை தேர்வு செய்யலாம். காற்று மாசு சுற்றுப்புற தொழிற்ச்சாலையை பொறுத்து அமையும். பஞ்சாயத்து பகுதிகளில், பொதுவாக நகர்ப்புறங்களை விட, குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
மனை விலையும், நகர்புறத்திலிருந்து வெளியில் செல்ல செல்ல குறையும். சிறப்பான, வசதியான, சுகாதாரமான வாழ்க்கைக்கு டீ.டி.சி.பி.,ன் திட்ட அனுமதியும் உள்ளாட்சியின் அனுமதியும் கொண்ட லே-அவுட்டில் மட்டுமே, மனை வாங்குவது அவசியம்.
லே-அவுட்டின் அமைப்பு, சாலை, பூங்கா திறவிடம், கடை, பள்ளி போன்ற பொது வசதிக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை, அனுமதிக்கப்பட்ட வரைபடம் மூலம் தெரிந்து கொள்ளலாம். கூடவே லே-அவுட் நிபந்தனைகளும் இணைக்கப்பட்டிருக்கும்.
இவற்றை, tnrera.tn.gov.in இணையதளத் திலிருந்து பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம். விளக்கம் தேவைப்படின், டீ.டி.சி.பி., எல்.பி.ஏ., உள்ளாட்சி அலுவலகம் அல்லது பதிவுபெற்ற பொறியாளரிடம் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.