/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
வீடுகளில் மின்சார தாக்குதலில் இருந்து பாதுகாக்க உதவும் தரமான கட்டமைப்பு
/
வீடுகளில் மின்சார தாக்குதலில் இருந்து பாதுகாக்க உதவும் தரமான கட்டமைப்பு
வீடுகளில் மின்சார தாக்குதலில் இருந்து பாதுகாக்க உதவும் தரமான கட்டமைப்பு
வீடுகளில் மின்சார தாக்குதலில் இருந்து பாதுகாக்க உதவும் தரமான கட்டமைப்பு
ADDED : ஜன 10, 2026 05:08 AM

வீ ட்டில் பயன்படுத்தப்படும் அனைத்து மின் ஒயர்களும் நல்ல தரமுடைய ஐ.எஸ்.ஐ., முத்திரை கொண்டவையாக இருக்க வேண்டும்; இல்லையேல் விபத்துகளுக்கு வழிவகுக்கும்.
சுவர் உள்ளே செலுத்தப்படும், 'கன்சீல்டு ஒயரிங்' என்றாலும், ஒயரின் அளவு, பதிக்கும் முறை, பாதுகாப்பு குழாய்கள் ஆகியவை சரியாக உள்ளனவா என உறுதி செய்வது நல்லது. கோவை மண்டல கட்டட பொறியாளர்கள் சங்க இணை பொருளாளர் மகுடேஸ்வரன் கூறியதாவது:
ஒவ்வொரு அறையிலும் பயன்பாடு அதிகம் இருக்கும் இடங்களில், போதுமான '3பின் பிளக் பாய்ன்ட்'கள் இருக்க வேண்டும். பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்களுக்கு தனித்தனி பிளக் வைத்தால், 'எக்ஸ்டென்ஷன் போர்டு' மற்றும் தற்காலிக இணைப்புகளின் தேவை குறையு ம்.
குழந்தைகள் உள்ள வீடுகளில், ஸ்விட்ச் மற்றும் பிளக் போர்டுகள் தரையிலிருந்து பாதுகாப்பான உயரத்தில் 'ஷட்டர்' கொண்ட 'சாக்கெட்'களாக அமைப்பது கூடுதல் பாதுகாப்பு தரும். மின் பாதுகாப்பின் அடித்தளம் சரியான 'எர்த்திங்' இல்லாமல், எந்த மின் அமைப்பும் முழுமையடையாது.
மின்னல், மின் கசிவு போன்ற சூழ்நிலைகளில் இது பாதுகாக்கும். வீடு கட்டும் போதே ஐ.எஸ்., நெறிமுறைகளுக்கு ஏற்ப, தனி 'எர்த் பிட்' அமைக்க வேண்டும்.
மின் சுமை அதிகமானால் தானாக மின்சாரத்தை துண்டிக்கும் மினியேச்சர் சர்க்கியூட் பிரேக்கர் (எம்.சி.பி.,) ஒவ்வொரு சர்க்கியூட்டுக்கும் கட்டாயம் இருக்க வேண்டும். தவறான அளவிலான 'பியூஸ்' அல்லது எம்.சி.பி., பயன்படுத்தினால் பாதுகாப்பு கிடைக்காது. மின்சார கசிவு ஏற்பட்டவுடன் உடனடியாக 'டிரிப்' ஆகும் ஆர்.சி.சி.பி.,/இ.எல்.சி.பி., பொருத்தினால் மின்சாரம் தாக்கும் அபாயம் குறையும். இது நேரடியாக நம் குடும்பத்தின் உயிர் பாதுகாப்புடன் தொடர்புடைய விஷயம். எனவே, அலட்சியம் வேண்டாம். இவ்வாறு, அவர் கூறினார்.
வீட்டில் பயன்படுத்தப்படும் அனைத்து மின் ஒயர்களும் நல்ல தரமுடைய ஐ.எஸ்.ஐ., முத்திரை கொண்டவையாக இருக்க வேண்டும்; இல்லையேல் விபத்துகளுக்கு வழிவகுக்கும். சுவர் உள்ளே செலுத்தப்படும், 'கன்சீல்டு ஒயரிங்' என்றாலும், ஒயரின் அளவு, பதிக்கும் முறை, பாதுகாப்பு குழாய்கள் ஆகியவை சரியாக உள்ளனவா என உறுதி செய்வது நல்லது

