/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
மின்னும் துகள்களில் மிகுந்த கவனம் தேவை: செலவை குறைக்க பொறியாளர் ஆலோசனை
/
மின்னும் துகள்களில் மிகுந்த கவனம் தேவை: செலவை குறைக்க பொறியாளர் ஆலோசனை
மின்னும் துகள்களில் மிகுந்த கவனம் தேவை: செலவை குறைக்க பொறியாளர் ஆலோசனை
மின்னும் துகள்களில் மிகுந்த கவனம் தேவை: செலவை குறைக்க பொறியாளர் ஆலோசனை
ADDED : நவ 01, 2025 12:31 AM
ஒ ரு வீடு திருப்திகரமாக அமைய, 'சைட்' வாங்குவதிலிருந்து கட்டுமானம் வரை கவனம் செலுத்துவது அவசியம். கட்டுமான செலவும் குறைவாக இருக்க வேண்டும்.
குடியேறிய பின் பராமரிப்பு செலவும் குறைவாக இருப்பது அவசியம். பாதுகாப்பு, வசதி, மன நிறைவு என்றென்றும் இருக்க வேண்டும்.
சைட்டின் அமைவிடம், வடிவம், அளவு, மண்ணின் தண்மை, சுற்றுப்புறம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளவேண்டும். மேற்கொண்டு குடிநீர், போர்வெல், கழிவு நீர் வெளியேற்றும் வசதி, மின் இணைப்பு, சாலை அகலம், மண் சாலையா அல்லது தார் சாலையா, சாலை விளக்கு ஆகிய வசதிகள் உள்ளனவா என, உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மின்சாரம் எனும்போது மும்முனை மின்சாரம் தேவையெனில் கிடைக்குமா, சீரான மின் அழுத்தம் இருக்குமா என கேட்டு தெரிந்துகொள்வது உதவியாக இருக்கும். மண்ணின் தன்மை, மென்மையான மண் முதல் இறுக்கமான மண் அல்லது பாறை வரை மாறுபடும்.
இளகிய களிமண் தவறில்லை; ஆனால் மின்னும் துகள்களைக்கொண்ட களிமண் இருந்தால், மிகுந்த கவனத்துடன் அஸ்திவாரம் அமைக்க வேண்டும்.
பாறை எனில், அப்படியே கட்டடம் எழுப்ப போதுமானது. மேற்புற மண் எப்பொழுதும் தளர்வானதாக இருக்கும்.
ஆகவே, இறுக்கமான மண் வரும் வரை தோண்டி, அஸ்திவாரம் அமைக்க வேண்டும். அருகில் கட்டுமான வேலை நடந்து கொண்டிருந்தால், மண்ணின் தன்மை கண்டறியலாம்.
எல்லா வகை மண்ணுக்கும், ஒரே மாதிரியாக ஐந்தடி கீழ் தோண்டவேண்டும் என்றில்லை. எந்த வகையான அஸ்திவாரம் என்பது, பொறியாளர் துணை கொண்டு முடிவு செய்யலாம். பில்லர், புட்டிங் ஒரு வகை.
கட்டடத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், அதன் பளு ஆகியவற்றை கணக்கிட்டு தேவையான அஸ்திவாரம் அமைக்கலாம்.
செங்கல்லுக்கு பதிலாக, பளு குறைவானவற்றை பயன்படுத்தும்போது அஸ்திவாரம், அதைத்தாங்கும் அளவுக்கு இருந்தால் போதும்; செலவும் குறையும் என்கிறார், பதிவுபெற்ற பொறியாளர்கள் சங்க(கோவை) முன்னாள் தலைவர் கனகசுந்தரம்.

