/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
நீலாம்பூர் - மதுக்கரை பைபாஸ் அருகே நிலம் என்ன விலை?
/
நீலாம்பூர் - மதுக்கரை பைபாஸ் அருகே நிலம் என்ன விலை?
நீலாம்பூர் - மதுக்கரை பைபாஸ் அருகே நிலம் என்ன விலை?
நீலாம்பூர் - மதுக்கரை பைபாஸ் அருகே நிலம் என்ன விலை?
ADDED : நவ 01, 2025 12:32 AM

பேரூர், காளம்பாளையம், சிறுவாணி மெயின் ரோடு, கோவை கொண்டாட்டம் மிக அருகே திருமலை நகரில், டி.டி.சி.பி., சைட் உள்ளது. சிறுவாணி மெயின் ரோட்டில் இருந்து தெற்கே, 250 அடி துாரத்தில் உள்ளது. இந்த இடத்தில் ஒரு சென்ட் என்ன விலைக்கு வாங்கலாம்?
-சத்யராமன், கோவை.
தாங்கள் குறிப்பிட்ட டி.டி.சி.பி., லே-அவுட்டில் எத்தனை வீடுகள் தற்சமயம் உருவாகி உள்ளன அல்லது உருவாகிக்கொண்டிருக்கின்றன என்பதை தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. எந்த சைட்டிலும் வீடு கட்டப்படவில்லை என்றால் சென்ட் ரூ.6 லட்சமும், பாதிக்கு பாதி கட்டடங்கள் முடிந்துவிட்டன என்றால், சென்ட் ரூ.10 லட்சமும், கட்டுவதற்கு ஒன்றோ, இரண்டோ சைட்டுகள் மட்டும் உள்ளன என்றால், ரூ.12 லட்சமும் தரலாம்.
எனது நண்பருக்கு சொந்தமான காலியிடம் கோவை தாலுகா, சீரப்பாளையம் கிராமம், சண்முகா நகரில் ஐந்து சென்ட் இடம் உள்ளது. நீலாம்பூர்-மதுக்கரை பைபாஸ் அருகே, மேற் புறம், 30 அடி ரோடு, இடதுபுறம், 18 அடி ரோடு உள்ளது. அதன் மதிப்பை தெரியப்படுத்தவும்.
சீரபாளையம் சண்முகா நகர் என்பது, டி.டி.சி.பி., இடமா அல்லது முந்தைய பஞ்சாயத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மனை பிரிவுதானா என்ற தகவல் இல்லை. 30 அடி ரோடு என்பது ஏதேனும் கிராமத்துக்கு செல்லும் ரோடா அல்லது லே-அவுட்டாக மாஸ்டர் பிளானில் வருகிறதா என்ற விவரமும் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. எது எப்படி இருப்பினும், தொழிற்சாலையாக கட்ட முடியும் என்றால் சென்ட் ரூ.8 லட்சமும், வீடாக கட்டமுடியும் என்றால் ரூ.12 லட்சமும் போகும் என உத்தேசிக்கிறோம்.
கோவை, கண்ணம் பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட மூலக்காடு, காமராஜர் நகரில் எங்கள் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியில் காலிமனை உள்ளது. அங்கு சென்ட் என்ன விலைக்கு வாங்கலாம். இது பல ஆண்டுகளுக்கு முன் எங்கள் சமுதாய மக்களுக்கு அரசால் வழங்கப்பட்ட இலவச பட்டா மனையாகும்.
-சரவணக்குமார், சிங்காநல்லுார்.
தாங்கள் சொல்லும் இலவச பட்டா மனை என்பது தங்கள் சமுதாயத்துக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டது. தலைமுறை தலை முறையாக அது குடும்பத்தினருக்குள் மாற்றுதலுக்கு செல்லத்தக்கது. அதேசமயம், அதை வெளி ஆட்களுக்கு விற்பது என்றால் சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் அனுமதி பெறாமல் விற்க இயலாது.
நடைமுறையில் அவ்வாறு இல்லை எனினும் கடன் கொடுக்க முனையும் வங்கிகள் அதை அழுத்தி கேட்பார்கள். காரணம், இது ஒரு ஆவணம் இல்லாத, அதாவது பத்திரம் இல்லாத பட்டாவை மட்டுமே சார்ந்த ஒரு இடம். இதை விற்பதற்கு சில முயற்சிகள் எடுக்க வேண்டிய நிலையில் உள்ள நிலமாகும். உங்கள் சமுதாயத்தார் பிற சமுதாயத்திற்கு விற்பதற்கு ஆட்சேபனைகள் பெரியதாக தெரிவிக்கவில்லை என்ற நிலையில், சென்ட்டுக்கு ரூ.5 லட்சம் முதல் எட்டு லட்சம் வரை மதிப்பாக எடுத்துக்கொள்ளலாம்.
பாலக்காடு மெயின் ரோடு, பி.கே., புதுார், கிழக்கு பகுதி, 40 அடி அகல விநாயகர் கோவில் வீதி உள்ளது. அங்கு மெயின் ரோட்டில் இருந்து, 100 மீட்டர் துாரத்தில் வடக்கு திசை நோக்கிய இடம் நான்கு சென்ட், நான்கு சென்ட் என இரண்டு பகுதிகளாக உள்ளன. ஒரு பகுதியில், 800 சதுரடியில் ஆர்.சி.சி., வீடு, மற்றொரு பாகத்தில், 1,000 சதுரடியில் சிமென்ட் சீட் வீடு உள்ளது. வீட்டு வாசல் முன்பு, 10x7 என்ற அளவில் சிறிய கடை உள்ளது. இரண்டு வீட்டுக்கு தனியே மின் இணைப்பு, சிறுவாணி தண்ணீர் வசதி, 300 மீட்டர் துாரத்தில் தனியார் கல்லுாரிகள் உள்ளன. என்ன விலைக்கு வாங்கலாம்?
-வீரன், குனியமுத்துார்.
இந்த இடம், அனைத்து அம்சங்களுடன் உள்ளது. மிகவும் குறிப்பாக தனியார் கல்லுாரிகள் மிக அருகே இருப்பது மிகச்சிறந்த அம்சம். இப்போது இருக் கும் கட்டடங்களை இடித்துவிட்டு, ஜி+2 என்ற முறையில், 16க்கு, 11 என்ற வகையில், 20 அல்லது, 22 அறைகள் கட்டி மகளிர் அல்லது ஆண்கள் விடுதிகள் கட்டி வருமானம் பெறலாம். இந்த இடத்தை என்ன குறைத்து மதிப்பிட்டாலும் செ ன்ட் ரூ.12 லட்சம் என்பது தவறே இல்லை.
தகவல்: ஆர்.எம். மயிலேறு, கன்சல்டிங் இன்ஜினியர்.:

