/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
எம்.சாண்ட் வாங்கும் போது கவனிக்க வேண்டிய கூடுதல் விஷயங்கள்!
/
எம்.சாண்ட் வாங்கும் போது கவனிக்க வேண்டிய கூடுதல் விஷயங்கள்!
எம்.சாண்ட் வாங்கும் போது கவனிக்க வேண்டிய கூடுதல் விஷயங்கள்!
எம்.சாண்ட் வாங்கும் போது கவனிக்க வேண்டிய கூடுதல் விஷயங்கள்!
ADDED : நவ 01, 2025 07:01 AM

இ ன்றைய சூழலிலும், கட்டுமான பணிகளுக்கு ஆற்று மணல் தான் வேண்டும், அதுதான் சிறந்தது என்ற எண்ணத்தில் பலர் இருக்கின்றனர். ஆனால், தமிழகத்தில் போதுமான எண்ணிக்கையில் மணல் குவாரிகள் இயங்காத நிலையில் எம் சாண்ட் போன்ற மாற்று பொருட்களை பயன்படுத்த வேண்டிய சூழல் நிலவுகிறது.
குவாரிகள் இயங்காத நிலையில் ஆற்று மணல் கிடைக்காத போது அதற்கு மாற்றாக எம் சாண்ட் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், ஆற்று மணல் பயன்படுத்தப்பட்ட இடத்தில் அதற்கு மாற்றாக எம் சாண்ட் பயன்படுத்தும் போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
குவாரிகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கருங்கற்களை, உரிய முறையில் ஆலைகளில் உடைத்து துகள்களாக்கி, பல்வேறு கட்டங்களாக கழுவி எம்.சாண்ட் தயாரிக் கப்படுகிறது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, 450 நிறுவனங்கள் எம்.சாண்ட் தயாரிப்பதற்கு முறையான உரிமம் பெற்று செயல்படுகின்றன.
இதில் கள நிலவரத்தை பார்த்தால் அரசிடம் பதிவு செய்து உரிமம் பெற்று, உரிய தரக்கட்டுப்பாட்டு வழிமுறைகளுடன் எம்.சாண்ட் ஆலைகள் செயல்படுகின்றன. அதே நேரம், கல்லுடைக்கும் ஆலைகளை சார்ந்து உரிமம் இல்லாத எம்.சாண்ட் ஆலைகளும் செயல்படுகின்றன.
இந்நிலையில், வீடு கட்டும் பணிகளை மேற் கொள்ளும் போது எம்.சாண்ட் வாங்கும் நிலையில், உள்ளூரில் உள்ள டீலரிடம் உங்கள் தேவையை மட்டும் சொன்னால் போதும் அவர் உரிய அளவில் எம்.சாண்ட் அனுப்பிவிடுவார் என்று மக்கள் நினைக்கின்றனர். இதில் மேலும் சில விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம்.
உள்ளூர் டீலர் நிலையில் வேலை முடிந்தால் போதும் என்று மக்கள் அலட்சிய மாக இருப்பது தான் பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாக அமைந்து உள்ளது. உங்கள் வீட்டுக்கான கட்டுமான பணிக்கு எம்.சாண்ட் வாங்கும் போது உள்ளூர் டீலர் வாயிலாக வாங்கினாலும், அதன் தயாரிப்பு நிறுவனம் குறித்த விபரங்களை கேட்டு வாங்க வேண்டும்.
குறிப்பாக, அஸ்திவாரம் முதல் மேல் தளம் வரையிலான கட்டுமான பணி களுக்கு ஒரே நிறுவன தயாரிப்பு எம் சாண்டை வாங்கி பயன்படுத்துவது நல்லது. ஒவ்வொரு முறையும் வெவ்வேறு நிறுவன தயாரிப்புகளை வாங்கும் நிலையில் தான் கலப்படம், தரமில்லாத எம்.சாண்ட் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
வீட்டுக்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் போது எம்.சாண்ட் வாங்கு வதில் மிக கவனமாக செயல்பட வேண்டும்.
ஒப்பந்ததாரர் பார்த்து கொள்வார், டீலர் நம்பிக்கையானவர் என்று அலட்சியமாக இருந்தால், சுவர்களில் விரிசல் ஏற்படும் போது வருத்தப்பட வேண்டியிருக்கும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

