பயன்பாட்டில் உள்ள தரையில் பதிகற்களில் திடீரென விரிசல் வருவது ஏன்?
பயன்பாட்டில் உள்ள தரையில் பதிகற்களில் திடீரென விரிசல் வருவது ஏன்?
ADDED : ஆக 29, 2026 06:50 AM

வீடு கட்டும் போது அதன் அடிப்படை பாகங்களை காட்டிலும், வெளிப்படையாக தெரியும் பாகங்கள் சிறப்பாக அமைய வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். இதற்காக, தரை அமைப்பது, சுவர்களின் வண்ணம் அடிப்பது போன்ற பல்வேறு விஷயங்களில் மக்கள் தற்போது சிறப்பு கவனம் செலுத்துகின்றனர்.
இப்படி வெளிப்படையாக தெரியும் பாகங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்பதில் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறோமோ அதே அளவுக்கு அதன் உறுதியிலும் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, தரையில் அமைக்கப்படும் பதிகற்கள் தரமானதாக, நீண்ட காலம் உழைக்க கூடியதாக இருக்க வேண்டும்.
புதிய வீட்டுக்கான கட்டுமான பணியின் போது தரை அமைப்பது, பூச்சுவேலை மேற்கொள்வதில் ஏற்படும் சிறிய குறைபாடுகள் கூட பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுத்துவிடுகிறது. குறிப்பாக, பெரும்பாலான வீடுகளில், தரை அமைப்பதில் பதிகற்களை பயன்படுத்த மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதற்காக பதிகற்களை வாங்கும் விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும் என்பதில் மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஒப்பந்ததாரர் பட்ஜெட் விலை என்பதற்காக, தரம் குறைந்த பதிகற்களை போட்டுவிடுவாரோ என்ற சந்தேகம் பலருக்கம் இருக்கிறது.
பெரும்பாலான சமயங்களில் தரம் குறைந்த பதிகற்களை கட்டுமான நிறுவனங்களே தேர்வு செய்வதில்லை. தங்கள் பெயரை கெடுத்துக்கொள்ள கூடாது என்பதற்காக, மொத்த கொள்முதல் அடிப்படையில் குறைந்த விலை பதிகற்களை அவர்கள் தேர்வு செய்வர்.
கட்டுமான பணியில் எவ்வளவு கவனமாக இருந்தாலும், பயன்பாட்டு நிலையில் தான் பிரச்னைகள் தெரியவரும். பதிகற்கள் அமைக்கப்பட்ட பின் அதில் குறிப்பிட்ட அளவு சுமை தாங்கும் திறன் இயல்பாகவே இருக்கும் என்பதை வீடு கட்டுவோர் புரிந்துக்கொள்ள வேண்டும்.
புதிதாக வீடு கட்டி அதில் வசித்து வரும் நிலையில், சில ஆண்டுகள் கழித்து பதிகற்களில் விரிசல் ஏற்பட்டால் என்ன செய்வது. முதலில், தரையில் பதிகற்கள் அமைக்கும் போது அதே வடிவமைப்பில் கூடுதலாக சில பதிகற்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.
பதிகற்களில் விரிசல் ஏற்பட்டால் அதற்காக பதற்றம் அடையாமல், சேதமடைந்த பதிகற்கள் எத்தனை என்பதை கணக்கெடுத்து அதை சரி செயவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் விரிசல் ஏற்பட்ட பதிகற்களை மாற்றினால் போதும் பிரச்னை தீர்ந்துவிடும் என்று பலரும் நினைக்கின்றனர்.
உண்மையில் பதிகற்கள் மேலிருந்து வந்த கூடுதல் சுமையால் உடைந்ததா, அதன் அடியில், உள்ள மண் அடுக்கில் ஏற்பட்ட வேறுபாடுகள் காரணமாக உடைந்ததா என்று பார்க்க வேண்டும். பொதுவாக, கட்டடம் கட்டும் போது, தரைமட்ட பகுதியில் காலியிடத்தை நிரப்ப கட்டட கழிவுகளை பயன்படுத்தும் போது சில ஆண்டுகள் கழித்து உட்புறம் வெற்றிடம் ஏற்படும்.
இத்தகைய வெற்றிடங்களால், அதன் மேல் இருக்கும் பதிகற்கள் சுமை தாங்கும் திறனை இழக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, மண் அடுக்கில் என்ன பிரச்னை ஏற்பட்டுள்ளது என்று பார்த்து அதை முறையாக சரி செய்து, கான்கிரீட் தளம் அமைத்து பதிகற்களை அமைக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.
பதிகற்களில் விரிசல் ஏற்பட்டால் அதற்காக பதற்றம் அடையாமல், சேதமடைந்த பதிகற்கள் எத்தனை என்பதை கணக் கெடுத்து அதை சரி செயவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
