/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
அடுக்குமாடி குடியிருப்புகளில் நிம்மதியான வாழ்வுக்கு வழிவகுக்கும் துணை விதிகள்
/
அடுக்குமாடி குடியிருப்புகளில் நிம்மதியான வாழ்வுக்கு வழிவகுக்கும் துணை விதிகள்
அடுக்குமாடி குடியிருப்புகளில் நிம்மதியான வாழ்வுக்கு வழிவகுக்கும் துணை விதிகள்
அடுக்குமாடி குடியிருப்புகளில் நிம்மதியான வாழ்வுக்கு வழிவகுக்கும் துணை விதிகள்
ADDED : ஜூலை 04, 2025 10:23 PM

அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள பொது இடங்களையும், வசதிகளையும் சங்கம் அமைத்து பராமரிப்பது கட்டாயம். இந்நிலையில், சங்கத்தின் 'பை லா' (துணை விதிகள்) எப்படிஇருக்க வேண்டும் என, மாதிரி 'பை லா'வையும் அரசு உருவாக்கியுள்ளது.
இதை அடிப்படையாக வைத்து, அந்தந்த குடியிருப்புகளுக்கு பொருந்தும் வகையில் மாதிரி 'பை லா' அமைத்துக்கொள்ளலாம்.
இதை மாவட்ட பதிவாளரிடம் சமர்ப்பித்து பதிவு செய்துகொள்ளலாம். பதிவாளரும் பரிசீலித்து ஏற்புடையதா என, முடிவு செய்து சான்று வழங்குவார்.
அதன்பிறகு ஒரு பொதுக்குழுவை கூட்டி தலைவர், உப தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோரை தேர்வு செய்ய வேண்டும்.
அவர்களுடைய பெயர்களை படிவத்தில் எழுதி பதிவாளருக்கு தெரியப்படுத்தி, உடனே சங்கம் செயல்பட ஆரம்பிக்கலாம் என்கிறார், பதிவுபெற்ற பொறியாளர்கள் சங்க(கோவை) முன்னாள் தலைவர் கனகசுந்தரம்.
அவர் மேலும் கூறியதாவது:
சங்கத்தின் செயல்பாடு முழுக்க, தமிழ்நாடு அபார்ட்மென்ட் உரிமையியல் சட்டத்திற்கு உட்பட்டே இருக்க வேண்டும். பராமரிப்பு மற்றும் அதன் செலவை பங்கிட்டுக்கொள்வது, வசூலிப்பது ஆகியவை இதன் குறிக்கோளாகும்.
தற்போது இருக்கும் கட்டடத்தை இடித்து விட்டு, புதிதாக கட்டுவது சம்பந்தமான முடிவையும் சங்கம் எடுக்கலாம். அனைத்து குடியிருப்பு உரிமையாளர்களும், சங்கத்தின் உறுப்பினர்கள் ஆவர். அனைவரும் 'பை லா'வை மதித்து, நடந்து கொள்வது முக்கியமானது.
தேவைப்படும்போது, 'பை லா'வை பொதுக்குழு கூட்டி திருத்திக்கொள்ளலாம். மொத்த பொது செலவை ஒவ்வொரு குடியிருப்பின் நிலத்தின் பிரிக்கப்படாத பங்கு சதவீத அடிப்படையில் பிரித்து, கேட்பு அறிக்கை அளிக்க வேண்டும்.
அதற்குண்டான பணத்தை, குறிப்பிட்ட காலத்திற்குள் சங்கத்திற்கு செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் தண்டம் வசூலிக்கலாம்.
நிலுவையில் உள்ள தொகை குடியிருப்பின்மீது வாங்கப்பட்ட கடனாக பாவிக்கப்பட்டு வசூலிக்கத்தக்கது; சேவைகள் நிறுத்தப்படலாம்.
குடியிருப்பு உரிமையாளரும், அவர்களுடைய வாடகைதாரரும் 'பை லா'வுக்கு கட்டுப்பட்டு வாழும் பட்சத்தில் பிரச்னைகள் இல்லாத நிம்மதியான வாழ்வு பிறக்கும்.
சங்க நிர்வாகிகளும் உரிமையாளர்களின் உரிமைக்கு பாதகமில்லாதவாறு செயல்படுவது அவசியம்.
இவ்வாறு, அவர் கூறினார்.