sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கனவு இல்லம்

/

ஆலோசனை

/

தண்ணீர் தொட்டியின் ஆழத்தை குறைக்க பொறியாளர் சொல்கிறார் வழி!

/

தண்ணீர் தொட்டியின் ஆழத்தை குறைக்க பொறியாளர் சொல்கிறார் வழி!

தண்ணீர் தொட்டியின் ஆழத்தை குறைக்க பொறியாளர் சொல்கிறார் வழி!

தண்ணீர் தொட்டியின் ஆழத்தை குறைக்க பொறியாளர் சொல்கிறார் வழி!


ADDED : அக் 25, 2024 10:06 PM

Google News

ADDED : அக் 25, 2024 10:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எங்களுக்கு கோவை வீரபாண்டி பிரிவில், 7.5 சென்ட் இடத்தில் தரைதளம், முதல் தளம் மற்றும் மொட்டை மாடி என கட்டடம் கட்டி முதல் தளத்தில் வசித்து வருகிறோம். கொசு மற்றும் பூனை தொந்தரவால், பெரிய கண்ணாடி ஜன்னல்கள் இருந்தாலும் திறக்கமுடியாமல் மிகவும் புழுக்கமாக உள்ளது. காலை, மாலையில் மொட்டை மாடியில், தண்ணீர் தெளிக்குமாறு நண்பர்கள் கூறுகின்றனர். இதனால், முதல் தளத்தின் ஆர்.சி., பாதிக்கப்படுமா?

-சி.கே. குணசேகரன், வீரபாண்டி.

முடிந்தவரை இயற்கையான காற்றோட்டம் வீட்டுக்குள் வருவது மிக நல்லது. அதுதான் நமக்கு நல்ல ஆரோக்கியமான வாழ்வை தரும். எனவே, கொசுக்கள் தொல்லையில் இருந்து விடுபட உங்கள் வீட்டு ஜன்னல்களில் 'நெட்'களை பயன்படுத்தி நகரும் ஜன்னல் பொருத்திக் கொள்ளலாம். நமது அறைக்கு தேவையான காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் நன்றாக கிடைக்கும். மொட்டை மாடியில் தண்ணீர் தெளிப்பது வெப்பத்தை குறைக்கும்.

தண்ணீர் தெளிக்கும் போது கான்கிரீட்டின் அடித்தளம் பாதிக்கப்படாமல் இருக்க, மொட்டை மாடியில் 'வாட்டர் புரூப்பிங் கோட்' செய்யலாம். வெப்ப மற்றும் ஈரப்பதத்தை கட்டுப்படுத்த வெப்பம் தாங்கும் 'பிளாஸ்டர்' அல்லது தரைக்கான 'டைல்ஸ்' அமைக்கலாம்.

மொட்டை மாடியில் வெப்பம் தாங்கும் டைல்ஸ் அமைப்பது ஒரு நல்ல தேர்வு. இது, உள் வெப்பத்தை குறைக்கும், மேல் பகுதி மட்டும் மூடி இருக்கும் 'ஷெட்' நல்ல பயன் தரும். வேறு தேவைகளுக்கும் பயன்படும். வீட்டின் உள் வெப்பத்தை குறைக்க மாடியில் அல்லது வீட்டின் முன்புறத்தில் பசுமை செடிகள் அல்லது பசுமை மரங்கள் வைத்து வெப்பத்தை குறைக்கலாம்.

அபார்ட்மென்ட்களில் வீடு வாங்கும் பொழுது, 'கார்ப்பெட் ஏரியா', 'பில்ட் அப் ஏரியா', 'சூப்பர் பில்ட் அப் ஏரியா' என்று கூறுகிறார்கள் அதனைப் பற்றி விவரிக்கவும்.

-எம். ராமு, சுந்தராபுரம்.

'கார்ப்பெட் ஏரியா' என்பது வீட்டின் சுவர் பகுதியை விடுத்து கம்பளம் விரிக்கும் அளவிலான தரைப்பகுதியாகும். கார்ப்பெட் ஏரியாவில் லாபி, லிப்ட், மாடிப்படிகள், வாசல் படிகள் இவையெல்லாம் சேராது. எனவே, நீங்கள் வாங்க நினைக்கும் வீட்டை பார்வையிடும்போது முதலில் கார்பெட் ஏரியாவை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில், அந்த அளவீட்டு பகுதிதான் நீங்கள் உபயோகிக்கும் பகுதி. கார்ப்பெட் ஏரியா என்பது மொத்த கட்டுமானப் பகுதியில் தோராயமாக, 70 சதவீத அளவு இருக்கும்.

'பில்ட் அப் ஏரியா' என்பது கார்ப்பெட் ஏரியாவையும், சுவர் பகுதிகளையும் சேர்த்தால் வரும் அளவு. சுவர்பகுதி கட்டுமான பகுதியில், 20 சதவீத அளவு இருக்கும். 'பில்ட் அப் ஏரியா'வில் பால்கனி போன்றவை சேர்கிறது.

இதனால், மேலும் 10 சதவீத அளவு இதில் சேர்கிறது. 'சூப்பர் பில்ட் அப்' ஏரியாவானது, 'பில்ட் அப்' பகுதியுடன், பொதுப் பகுதியான லிப்ட் போன்றவையும் சேர்த்து வருவது. சில கட்டுனர்கள் வீட்டின் 'பில்ட் அப் ஏரியா', வீட்டின் தோட்டம், நீச்சல் குளம் இருந்தால் அதையும் சேர்த்து கணக்கிடுவார்கள். ஏனெனில், அதுவும் விற்பனை விலையில் சேர்த்துத்தானே வருகிறது.

நான் புதிதாக வீடு கட்டியுள்ளேன். அதில் தண்ணீர் தொட்டி மிக ஆழமாக, 12 அடி வைத்து விட்டார்கள். அதை, 8 அடியாக குறைக்க என்ன செய்யவேண்டும்?

-சி.என். நாகராஜன், பி.என். புதுார்.

முதலில் தொட்டியின் மேலே உள்ள, 'கவர் ஸ்லேப்'பை அப்புறப்படுத்த வேண்டும். தொட்டியின் ஆழத்தை குறைக்க, தொட்டியில் முதலில் மூன்று அடிக்கு தரமான மணலை பயன்படுத்தி நிரப்பிக்கொள்ள வேண்டும்.

அதாவது, முதலில் அரை அடிக்கு மண்ணை நிரப்பிக்கொண்டு, அதனை நன்கு 'காம்பேக்ட்' செய்ய வேண்டும். இதேபோல் மூன்று அடி உயரம் வரை நிரப்பிக்கொள்ள வேண்டும். இதற்குமேல் பி.சி.சி., கான்கிரீட் அரை அடி கணத்துக்கு இடவேண்டும். இதன்மேல் கம்பிகளை வைத்து கான்கிரீட் அரை அடிக்கு நிரப்ப வேண்டும்.

தொட்டியின் நான்கு பக்க சுவற்றில் உள்ள கலவை பூச்சை கொத்தி விட்டு, அதனை ஒட்டி செங்கல் சுவரை எழுப்பிக்கொள்ள வேண்டும்.

பின், அதில் 'வாட்டர் புரூபிங்' ரசாயனம் கலந்த பூச்சை பூசிக்கொள்ள வேண்டும். அதன் பின்பு சிமென்ட் கலவை பூச்சை பூசிக்கொள்ளலாம். அப்பொழுதுதான் தண்ணீர் தொட்டியின் உறுதித்தன்மையை நன்கு உறுதி செய்ய முடியும்.

-பொறியாளர் ரங்கநாதன், பொருளாளர்,

பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா, கோவை மையம்.






      Dinamalar
      Follow us