/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
அஸ்திவார மண் மூச்சு விடும்... வியர்வையும் போக்கும்! டைல்ஸ் பதித்தால் சுவரில் ஈரப்பதம் ஏற்படும்
/
அஸ்திவார மண் மூச்சு விடும்... வியர்வையும் போக்கும்! டைல்ஸ் பதித்தால் சுவரில் ஈரப்பதம் ஏற்படும்
அஸ்திவார மண் மூச்சு விடும்... வியர்வையும் போக்கும்! டைல்ஸ் பதித்தால் சுவரில் ஈரப்பதம் ஏற்படும்
அஸ்திவார மண் மூச்சு விடும்... வியர்வையும் போக்கும்! டைல்ஸ் பதித்தால் சுவரில் ஈரப்பதம் ஏற்படும்
ADDED : பிப் 15, 2025 08:16 AM

கட்டட அறைகளில் சுவரின் அடிப்புறம் ஈரப்பதம் என்பது, புதிய கட்டடத்தில்கூட தற்போது ஏற்படுகிறது. 'டைல்ஸ்' பதிப்பு முடிந்தவுடன், தக்க கால அவகாசம் தராமல், உடனே டைல்ஸ் மேற்புறம் பாதுகாப்பு என்கிற நோக்கில் முழுவதுமாக மறைத்து வைக்கப்படுவதால், காற்றுகூட புக முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனால், டைல்ஸ் பதிப்பு கலவையில் உள்ள, ஈரப்பதம் உலர வாய்ப்பு குறைகிறது. அந்த ஈரப்பதம் வேறு வழியின்றி சுவரை நோக்கி பாய்கிறது. இந்த நிகழ்வு, வெளிப்புற நீர்க்கசிவு காரணமாக ஏற்படுவதாக, பொறியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
'கொசினா' முன்னாள் தலைவர் பாலமுருகன் கூறியதாவது:
பழைய காலத்தில் கருங்கல் கொண்டு அதிகமாக அஸ்திவாரம் அமைக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட ஆறு முதல் ஏழு அடி வரை அமையும்; ஓர் தடுப்பு சுவர் எனலாம். வெளிப்புற நீர்க்கசிவு ஏற்படும் சமயத்தில், இந்த கருங்கல் அஸ்திவாரம் சுவர், தடுப்பு அரணாக இருந்து பாதுகாக்கும்.
தற்போது இந்த முறையில், யாரும் கட்டடம் கட்டுவது இல்லை. 'பில்லர்' வைத்து 'பிளிந்த் பீம்' அமைத்து அஸ்திவார சுவர் வைத்து கட்டப்படுகிறது. இங்கு கட்டடத்தின் பிளின்த் பீம் அடிப்பகுதிக்கு கீழ், எந்தவித தடுப்பு இல்லை.
சுவர் நோக்கி வரும் ஈரம்
வெறும் மண்பாங்கு தான் இருக்கும். இதனால், வெளிப்புற நீர்க்கசிவு மெல்ல மெல்ல அடிப்புறம் சென்று அஸ்திவாரம் உட்புறம் நிரப்பப்பட்ட மண்ணில் சேர்ந்து, ஈரப்பதம் உருவாக்கும் செயலாகிறது. இது நாளடைவில் அழுத்தம் காரணமாக, 'மெட்டல் கான்கிரீட்'க்கு வரும்; பிறகு சுவரை நோக்கி வரும்.
எனவே, கட்டடத்தை சுற்றிலும், நீர்க்கசிவு தடுப்பு மிக மிக முக்கியம். கட்டடத்தின் உட்புறம் நீர்க்கசிவு தடுப்பு உடனடி தீர்வு அவசியம்.
பிளம்பிங் பணியில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கட்டடத்தை சுற்றி பக்கதிறவிடம்(செட்பேக்) இடைவெளி பாகத்தில், ஆங்காங்கே மண் பாங்கு வெளியே தெரியும்படி இருக்க வேண்டும்.
மண் மூச்சு விடணும்
மண் மூச்சு விட வேண்டும்; நீர் குடிக்க வேண்டும்; மண் வியர்வை போக்க வேண்டும். முழுவதுமாக மறைத்துவிட கூடாது.
அஸ்திவாரம் உட்புறம் நீரை தக்க வைத்துக்கொள்ளாத மண்ணை, பயன்படுத்த வேண்டும். ஈரத்தன்மை இருந்தால், சுவரில் பாதிப்பு ஏற்படும். நிரப்பப்பட்ட மண் உலராமல், உடனே 'மெட்டல் கான்கிரீட்' அமைக்கக் கூடாது.
இவ்வாறு, அவர் கூறினார்.