/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
பாரம் துாக்கிகளின் மீது நம்பகத்தன்மை; சோதிக்க தவறினால் ஏற்படும் வேதனை
/
பாரம் துாக்கிகளின் மீது நம்பகத்தன்மை; சோதிக்க தவறினால் ஏற்படும் வேதனை
பாரம் துாக்கிகளின் மீது நம்பகத்தன்மை; சோதிக்க தவறினால் ஏற்படும் வேதனை
பாரம் துாக்கிகளின் மீது நம்பகத்தன்மை; சோதிக்க தவறினால் ஏற்படும் வேதனை
ADDED : ஜூலை 12, 2025 01:03 AM

பல மாடிக்கட்டடங்களின் மேலே பொருட்கள் கொண்டுசெல்ல பாரம் துாக்கிகளை பயன்படுத்துகிறோம். அவற்றுள் பெரும்பாலும் உள்ளூர் தயாரிப்புகள்தான் அதிகம் பயன்பாட்டில் உள்ளன. இதன் நம்பகத்தன்மை யாரும் சோதித்து பார்ப்பதில்லை. இதில் எச்சரிக்கை ஒலிப்பான் இருப்பதில்லை.
இதன் பக்கங்களில் பாதுகாப்பு தடுப்பு வளையங்கள் இருப்பதில்லை. இதில் பொருட்களை ஏற்றி, இறக்கும் இடங்களில், தளங்களில் பாதுகாப்பு வளையம் இருப்பதில்லை.
இதனால், கட்டுமான பொருட்களை ஏற்றி இறக்கும்போது, விபத்து நடக்க வாய்ப்புள்ளது. பாரம் துாக்கியை இயக்க, அனுபவம் வாய்ந்த தொழிலாளரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
பாரம் துாக்கியின் பளுதுாக்கும் வலுவை, சோதித்து அதன் சான்றிதழ் எப்போதும், அதற்குரிய இடத்தில் வைக்கப்பட வேண்டும். பாரம் துாக்கியின் இறங்குமிடத்தில் உள்ள கதவு, பாரம் துாக்கியின் தளம் இறங்கும் இடத்திற்கு வந்தபின்தான் திறக்க வேண்டும்.
இதனால் அலட்சியத்தால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க முடியும். 'காலம் போஸ்ட்' கம்பி கட்டி துாக்கிசென்று, அதன் அமைவிடத்தில் நிறுவும்போது, அருகில் மின்கம்பிகள் மீது உரசாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கம்பியை உயர துாக்கும்போது, ரோடு பக்கம் உள்ள மின் கம்பிகளில் மோதி விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. பாதுகாப்பு முறைகளை கட்டாயமாக செயல்படுத்தவும், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்களை உபயோகிக்கவும், பயிற்சி அளிப்பது அவசியம்.
இதுபோன்ற பல்வேறு பாதுகாப்புஅம்சங்களை,தெரிந்து பயன்படுத்துவதன் வாயிலாக கட்டுமான தளத்தில் ஏற்படும் விபத்துகளை பெருமளவு தவிர்க்க முடியும்.
இதனால் தொழிலாளர் நலம், உரிமையாளர் நலன், ஒப்பந்ததாரர் நலம் பாதுகாக்கப்படுவதுடன், விபத்தில்லா நல்ல கட்டுமானத்தையும் உருவாக்கமுடியும் என்கிறார், 'கொசினா' உறுப்பினர் மாரிமுத்துராஜ்.