தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கனவு இல்லம்/ஆலோசனை/ வீடுகளுக்கு யுபிவிசி ஜன்னல் அமைப்பதில் கவனிக்க வேண்டியவை!

 வீடுகளுக்கு யுபிவிசி ஜன்னல் அமைப்பதில் கவனிக்க வேண்டியவை!

 வீடுகளுக்கு யுபிவிசி ஜன்னல் அமைப்பதில் கவனிக்க வேண்டியவை!


ADDED : ஆக 15, 2026 06:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2026 06:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுவாக சொந்த வீடு கட்ட வேண்டும் என்று திட்டமிடுவோர் பல்வேறு விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய வீடுகளுக்கு அடிப்படை பாகங்கள் மட்டுமல்லாது, கதவு, ஜன்னல் போன்ற பாகங்கள் விஷயத்திலும் மக்கள் கவனம் செலுத்த வேண்டும்.

புதிதாக கட்டும் வீட்டில் ஒவ்வோர் அறையிலும் எந்த இடத்தில் ஜன்னல் அமைக்க வேண்டும் என்பதை தெளிவாக ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும். குறிப்பாக ஓர் அறையின் வாயில் பகுதிக்கு நேர் எதிரில் ஜன்னல் அமைத்தால் காற்றோட்டம் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

ஆனால், வெளியில் இருந்து வீட்டின் தலைவாசல் வழியாக வரும் காற்று மிண்டும் வெளியில் செல்ல நேர் எதிரில் வாசல் அல்லது ஜன்னல் இருக்க வேண்டியது அவசியம். இதே வழிமுறையை வீட்டில் உள் அறைகளுக்கு கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

வீட்டில் அறைகளுக்கு எந்தெந்த இடத்தில் ஜன்னல் அமைக்க வேண்டும் என்பதை அங்குள்ள காற்றோட்டம், அறை களின் பயன்பாடு, வெளிப் புற சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும். இதற்கு அப்பால், என்ன பொருளை பயன்படுத்தி ஜன்னல் அமைக்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள்.

பொதுவாக வீடுகளுக்கு ஜன்னல் அமைப்பதில் மரத்தால் ஆன பிரேம்கள், அதில் கம்பிகள் பொருத்தப்பட்டு, மரம் அல்லது கண்ணாடி கதவுகள் அமைக்கப்படுவது வழக்கம். நீண்டகாலமாக இந்த வழிமுறை அடிப்படையில் தான் வீடுகளுக்கு ஜன்னல்கள் அமைக்கப்படுகின்றன.

ஆனால், மரத்தின் பயன்பாட்டை குறைக்கிறோம், எளிதாக பயன்படுத்த ஏற்ற பொருள் என்ற அடிப்படையில் யுபிவிசி பொருட்களால் தயாரிக்கப்பட்ட ஜன்னல்களை அமைக்கின்றனர். தற்போதைய சூழலில், ஒரு சதுர அடிக்கு, 300 ரூபாய் முதல், 700 ரூபாய் வரை பல்வேறு வகைகளில் யுபிவிசி ஜன்னல்கள் கிடைக்கின்றன.

மேலோட்டமாக பார்த்தால், யுபிவிசி ஜன்னல்களில் கதவுகள் திறந்து மூடுவது சற்று சிக்கலானது போன்று தெரியலாம். ஆனால், உண்மையில் யுபிவிசி ஜன்னல்களை முறையாக பயன்படுத்தினால், அதிக பாதுகாப்பு பெறலாம் என்று கூறப்படுகிறது.

அடுக்குமாடி குடியிருப்புகளில், கட்டடத்தில் சுமை அதிகரிக்க கூடாது என்ற அடிப்படையில் பார்த்தால் மரத்தைவிட யுபிவிசி ஜன்னல்கள் மிகுந்த பயனுள்ளவையாக அமைகின்றன. உங்கள் வீட்டுக்கு யுபிவிசி ஜன்னல்கள் வாங்கும் போது செலவு குறைப்பு என்று மிக குறைந்த விலையில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தாதீர்.

சந்தையில் மிக குறைந்த விலை என்ற பெயரில் விற்கப்படும் சில வகை யுபிவிசி ஜன்னல்களை பயன்படுத்தும் போது அது அந்த வீட்டில் வசிப்போருக்கு உடல் நலன் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, குறைந்த விலை என்று பார்க்காமல், தரமான நிறுவன தயாரிப்பு என்ற அடிப்படையில் யுபிவிசி ஜன்னல்களை தேர்வு செய்வது நல்லது என்கின்றனர் கட்டுமான துறை பொறியாளர்கள்.

***

பாயிண்ட்

அடுக்குமாடி குடியிருப்புகளில், கட்டடத்தில் சுமை அதிகரிக்க கூடாது என்ற அடிப்படையில் பார்த்தால் மரத்தைவிட யுபிவிசி ஜன்னல்கள் மிகுந்த பயனுள்ளவையாக அமைகின்றன.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us