தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கனவு இல்லம்/ஆலோசனை/ ஒயரிங் வழித்தடத்தில் பூச்சு வேலை செய்யும் போது கவனிக்க…

 ஒயரிங் வழித்தடத்தில் பூச்சு வேலை செய்யும் போது கவனிக்க…

 ஒயரிங் வழித்தடத்தில் பூச்சு வேலை செய்யும் போது கவனிக்க…


ADDED : ஆக 15, 2026 06:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2026 06:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதிதா க வீடு கட்டும் போது அதன் அஸ்திவாரம், துாண்கள், பீம்கள் உறுதியாக இருந்தால் போதும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். கட்டடத்தின் ஒட்டுமொத்த சுமையில் பெரும்பகுதியை தாங்கும் இந்த பாகங்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை.

ஆனால், இந்த பாகங்கள் சரியாக இருந்தால் அனைத்தும் சரியாகிவிடும் என்று மேலோட்டமாக மக்கள் நினைப்பது தவறு. குறிப்பாக, துாண்கள், பீம்கள் எந்த அளவுக்கு உறுதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதே அளவுக்கு சுவர்களும் உறுதியாக இருக்க வேண்டும்.

துாண்கள், பீம்கள் ஒரு கட்டடத்துக்கு எலும்புகள் போன்றது என்றால், சுவர்கள் உடலின் சதை பகுதிகள் போன்றது என்ற எண்ணம் இருக்க வேண்டும். எலும்புகள் உறுதியாக இருந்து, சதை பகுதிகளில் காயம் இருந்தாலும் உடல் நலன் பாதிக்கப்படும்.

எனவே, புதிய வீட்டின் சுவர்கள் பாதுகாப்பான முறையில் தரமாக அமைக்கப்பட வேண்டும். பொதுவாக, வீடு கட்டும் போது, மின்சார ஒயரிங், பிளம்பிங் குழாய்களை கன்சீல்டு முறையில் பதிப்பது தற்போது வழக்கமான ஒரு நடைமுறையாக மாறிவிட்டது.

இதற்கான பணிகளுக்காக, சுவரில் இயந்திரங்களை கொண்டு வெட்டு வேலைகள் செய்கின்றனர். ஒயரிங், பிளம்பிங் குழாய்களை அமைத்தபின் அதன் மேல் கலவையை அடித்து பூச்சு வேலை மேற்கொண்டால் போதும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர்.

உண்மையில் இது விஷயத்தில் அலட்சியமாக இருப்பதே சுவரில் விரிசல்கள் வர காரணமாக அமைந்துவிடுகிறது. இது போன்ற இடங்களில், மெல்லிய கம்பி வலைகளை வைத்து பூச்சு வேலை மேற்கொள்ளலாம் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

கம்பி வலைகளுக்கு பதிலாக, தற்போது, பிவிசி அல்லது பைபர் வலைகள் வந்துள்ளன. கம்பி வலைகளை காட்டிலும் இந்த வலைகளை பணியாளர்கள், பயன் படுத்துவது எளிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இரண்டு அல்லது மூன்று அங்குலம் அகலத்தில் இந்த வலைகளை வைத்து அதன் மேல் சிமென்ட் கலவையை அடித்து பூச்சு வேலையை மேற்கொள்ளலாம். இவ்வாறு செய்வதால், குழாய் பதிக்க வெட்டிய பகுதியில் சுமை பரவல் வேறுபாடு தவிர்க்கப்படும்.

இதன் காரணமாக, சுவர்களில் விரிசல்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம் என்கின்றனர் கட்டுமான துறை பொறியாளர்கள்.

கம்பி வலைகளுக்கு பதிலாக, தற்போது, பிவிசி அல்லது பைபர் வலைகள் வந்துள்ளன. கம்பி வலைகளை காட்டிலும் இந்த வலைகளை பணியாளர்கள், பயன்படுத்துவது எளிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us