/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
ஒரு வீட்டில் டாய்லெட் இப்படித்தான் இருக்கணும்; 'பிளம்பிங்' பணி வரைபடம் பத்திரம்
/
ஒரு வீட்டில் டாய்லெட் இப்படித்தான் இருக்கணும்; 'பிளம்பிங்' பணி வரைபடம் பத்திரம்
ஒரு வீட்டில் டாய்லெட் இப்படித்தான் இருக்கணும்; 'பிளம்பிங்' பணி வரைபடம் பத்திரம்
ஒரு வீட்டில் டாய்லெட் இப்படித்தான் இருக்கணும்; 'பிளம்பிங்' பணி வரைபடம் பத்திரம்
ADDED : ஜன 03, 2025 11:40 PM

வீட்டுனுள் 'அட்டாச்டு டாய்லெட்' அமைப்பது உடல் நலத்திற்கு கேடு எனும் கூற்று, பரவலாக இருந்துவருகிறது. இருப்பினும், வசதிக்காகவும், வயதானவர்கள் பயன்படுத்த எளிதாகவும் உள்ளதால் பெரும்பாலானோர் வீட்டினுள் டாய்லெட் அமைக்கிறார்கள்.
அவ்வாறு அமைக்கும் டாய்லெட்டில், சில அம்சங்களை முக்கியமாக கவனிக்க வேண்டியது முக்கியம். முதலில், டாய்லெட்டின் உள் அளவுகளை முறையாக அமைக்க வேண்டும். மிகவும் சிறிய அளவாக இல்லாமலும், பெரிய அளவில் இல்லாமலும் இருத்தல் அவசியம். குறைந்த பட்சமாக, 30 சதுரடி இருக்க வேண்டும்.
டாய்லெட்டின் கூரை உயரம், 10 அடியாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் உபயோகிக்கும் போது தேவையான அளவிற்கு ஆக்சிஜன் கிடைக்கும். அதேபோல் டாய்லெட்டில் காற்றோட்ட வசதி வேண்டி வென்டிலேட்டர், 3x2 அடி என்ற அளவில் இருக்க வேண்டும்.
அதில் ஒரு 'எக்சாஸ்ட் பேன்' அமைப்பு இருந்தால் மேலும் நல்லது. கதவுகளை பொறுத்தவரையில் பி.வி.சி., யு.பி.வி.சி., பைபர் கதவுகளை பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால் அவசர காலங்களில் எளிதாக உடைத்துக் கொண்டு உட்புகலாம்.
இதுகுறித்து, 'காட்சியா' செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் கூறியதாவது:
இதில், புளோர் டைல், வால் டைல் தேர்ந்தெடுப்பதிலும் கவனம் தேவை. 'ஏன்டிஸ்கிரிட்' டைல்ஸ் தேர்ந்தெடுத்து, வழுக்காதவாறு புளோர் அமைக்க வேண்டும். குளிப்பதற்கு ஈரமான பகுதி, டாய்லெட்டுக்கு உலர்ந்த பகுதி என, இரண்டு பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம்.
இதனால், டாய்லெட்டில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கலாம்.
டாய்லெட்டில் பிளம்பிங் லைன் அமைக்கும்போது, மிக கவனமாக செய்ய வேண்டும். தரையில் பிளம்பிங் செய்வதற்கு முன், தரையை வாட்டர் புரூபிங் செய்ய வேண்டும். உள் சுவற்றில் யு.பி.வி.சி., பைப்களே பயன்படுத்த வேண்டும். பைப்களை சரியான உயரத்தில் அமைப்பது மிக அவசியம்.
பைப்களை அமைக்கும் பொழுது, சரியான வாட்டம் கொடுத்து தண்ணீர் முழுவதுமாக வடிந்து ஓடும்படி செய்ய வேண்டும். பிளம்பிங் வேலை முடிந்தபின், டைல்ஸ் பதிப்பதற்கு முன்னதாக தண்ணீர் விட்டு பிரஷர் டெஸ்ட் செய்ய வேண்டும். இதனால் பைப்பில் ஏற்படும் கசிவுகளை, கண்டறிந்து சரி செய்து கொள்ளலாம்.
பிளம்பிங் வேலை முழுவதுமாக முடிந்த பின், அதை புகைப்படம் எடுக்க வேண்டும். ஒரு வரைபடமாக தயார் செய்து வைத்துக்கொண்டால், பின்னாளில் பழுது ஏற்படும் சமயத்தில் சரி செய்ய உதவியாக இருக்கும்; தேவையற்ற செலவை குறைக்கும்.
'இந்தியன் குளோசெட்' அமைப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்ற போதிலும், பெரும்பாலானோர் முழங்கால் வலியால் அவதிப்படுவதால், மேற்கத்திய வகை குளோசெட்டையே தேர்ந்தெடுக்கிறார்கள்.
எலக்ட்ரிக்கல் சுவிட்ச் மற்றும் பிளக்குகளை டாய்லெட்டுக்கு வெளியில் வைப்பது நல்லது. இதனால் மின் விபத்துக்களை தவிர்க்கலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.