/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
வீட்டுக்கு தேவையான 'ஒயரிங் பணி'; குழாய் பதிப்பதில் தேவை இடைவெளி
/
வீட்டுக்கு தேவையான 'ஒயரிங் பணி'; குழாய் பதிப்பதில் தேவை இடைவெளி
வீட்டுக்கு தேவையான 'ஒயரிங் பணி'; குழாய் பதிப்பதில் தேவை இடைவெளி
வீட்டுக்கு தேவையான 'ஒயரிங் பணி'; குழாய் பதிப்பதில் தேவை இடைவெளி
ADDED : அக் 03, 2025 09:37 PM

க ட்டடத்தில் மேற்கொள்ளப்படும் மின் இணைப்புகளை, பொதுவாக மரச்சட்டங்களின் மேல் கம்பிகளை பொருத்துதல், உலோகம் அல்லது பி.வி.சி., குழாயினும் கம்பிகளை பொருத்துதல் என்று வகைப்படுத்தலாம்.
இரு வகைகளிலும், இரண்டாவது வகை இணைப்பானது சுவர் அல்லது தளத்தின் மேற்புறத்திலோ அல்லது சுவர் அல்லது தளங்களில் பதிக்கப்பட்டோ செய்யப்படுகிறது.
அலுமினிய உலோக கம்பிகள் பெரும்பாலும், மேல்நிலை மின்சார வினியோகத்திற்கு காப்பிடப்பட்ட அலுமினிய கம்பிகள், நிலத்தடி நீர் மின் வினியோகத்திற்கும், காப்பிடப்பட்ட செம்பு உலோக கம்பிகள் கட்டடத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. கம்பியின் குறுக்கு வெட்டு பரப்பளவு, 6 சதுர மி.மீ., குறைவாக இருக்கக்கூடாது.
கம்பிகளின் முனைகளை ஒன்றாக ஈயத்தால் பற்றவைத்து, ஸ்விச்சுகளுடனோ அல்லது பிளக் முனைகளுடனோ, இணைக்கப்பட வேண்டும்.
புற மின் இணைப்புகளில் குழாயை பொருத்தும் பொழுது, கிளாம்புகளை ஒரு மீட்டர் இடைவெளிக்கு குறையாமல் பொருத்தி இணைக்க வேண்டும்.
குழாயின் அளவு அதில் கொண்டுசெல்லப்படும் கம்பிகளின் எண்ணிக்கை அளவை பொறுத்து அதிகரிக்கப்பட வேண்டும்.
இதனால், கம்பிகள் குழாய் வழியாக இணைக்கப்படும் பொழுது, பதிக்கப்பட்ட அல்லது உட்புற இணைப்புகளில் சுவர்களில் குழாய்கள் பதிக்க குறைந்தது, 25 மி.மீ.,லிருந்து, 37.5 மி.மீ., வரை ஆழப்படுத்த வேண்டும்.
மின் கம்பிகள் சிமென்ட் பூச்சு வேலை, வண்ண பூச்சு வேலை முடிந்த பிறகு குழாயினுள் இழுத்து பொருத்தப்பட வேண்டும்.
கம்பிகள் செலுத்தப்படும் முன், குழாய்கள் சுத்தப்படுத்தப்பட வேண்டும். குழாயினுள் ஈரத்தை வெளியேற்ற, 'புளோயர்' வாயிலாக வெப்ப காற்றை உட்செலுத்தலாம்.
ஈரத்தால் ஏற்படும் விபத்துகளை, இதன் வாயிலாக தவிர்க்க முடியும் என்கின்றனர் எலக்ட்ரீசியன்கள்.