/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
பட்டா இல்லாத நிலம் வாங்கப் போறீங்களா...! தவிர்ப்பது நல்லது என்கிறார் வழக்கறிஞர்
/
பட்டா இல்லாத நிலம் வாங்கப் போறீங்களா...! தவிர்ப்பது நல்லது என்கிறார் வழக்கறிஞர்
பட்டா இல்லாத நிலம் வாங்கப் போறீங்களா...! தவிர்ப்பது நல்லது என்கிறார் வழக்கறிஞர்
பட்டா இல்லாத நிலம் வாங்கப் போறீங்களா...! தவிர்ப்பது நல்லது என்கிறார் வழக்கறிஞர்
ADDED : ஆக 31, 2024 12:37 AM

''கிரைய ஆவணம் இருந்தாலும், பட்டா இல்லாத நிலங்களையோ, மனைகளையோ வாங்குவதை தவிர்க்க வேண்டும்,'' என, எச்சரிக்கிறார், கோவை வக்கீல் வடவள்ளி நாகராஜன்.
அவர் கூறியதாவது:
கட்டிய வீடு வாங்குவோர், அக்கட்டடம் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிடம் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா? கட்டடம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு வரி விதிக்கப்பட்டு உள்ளதா, கட்டுமானம் முடியும் தருவாயில் இருந்தால், உரிமம் காலாவதி ஆகி விட்டதா, அவ்வாறு காலாவதி ஆகியிருந்தால், உரிமம் நீட்டிப்பு பெறப்பட்டு உள்ளதா என சரிபார்த்த பிறகே வாங்க வேண்டும்.
அந்த கட்டடத்தின் சொத்துவரி, குடிநீர் கட்டணம், மின் கட்டணம், நிலப்பட்டா அனைத்தும் விற்பவரின் பெயரில் உள்ளதா என்று சரிபார்த்தே கிரையம் பெற வேண்டும்.
கிரையம் பெற்ற பிறகு பெயர் மாற்றிக் கொள்ளலாம் என்று கிரையம் வாங்கினால், பின்னாளில் பெயர் மாற்றம் செய்ய, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு செல்லும் சமயத்தில், சொத்தின் முந்தைய உரிமையாளரால் செலுத்தப்படாமல் நிலுவை வைத்திருந்த கட்டணங்களை கிரையம் பெறுபவர் செலுத்த வேண்டியிருக்கும். கிரையம் வாங்குவோருக்கு, அது பெரும் சுமையாக இருக்கும். இதில், கவனம் தேவை.
சொத்து பூமி தானம், பஞ்சமி நிலம், நீர்நிலை ஆக்கிரமிப்பு மற்றும் நிலமெடுப்பு சட்டம் ஆகியவற்றினால், அரசு நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட நிலமாக இருந்தால், பட்டா உரிமையாளர் (விற்பவர்) பெயரில் இருக்காது, அதை வாங்குபவர் பின்னாளில் பெயர் மாற்றமும் செய்ய இயலாது. எனவே, கிரைய ஆவணம் இருந்தாலும், பட்டா இல்லாத நிலங்களையோ, மனைகளையோ வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
தொடர்புக்கு: 98422 50145.