/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
விதிமுறையை அறிந்து வீடு கட்டுங்க! எதிர்காலத்தில் சிக்கல்களை தவிர்க்கலாம்
/
விதிமுறையை அறிந்து வீடு கட்டுங்க! எதிர்காலத்தில் சிக்கல்களை தவிர்க்கலாம்
விதிமுறையை அறிந்து வீடு கட்டுங்க! எதிர்காலத்தில் சிக்கல்களை தவிர்க்கலாம்
விதிமுறையை அறிந்து வீடு கட்டுங்க! எதிர்காலத்தில் சிக்கல்களை தவிர்க்கலாம்
UPDATED : ஆக 10, 2024 11:12 AM
ADDED : ஆக 09, 2024 08:55 PM

உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப, சிறிய இடமோ அல்லது பெரிய இடமோ வாங்கி விட்டீர்கள் என்றால், வீடு கட்டுவதற்கான உங்கள் நிதி நிலை மிகவும் முக்கியம். அதை முறையாக கையாள்வதற்கு நிறைய ஆலோசனை பெற வேண்டும்.
நான்கு பக்கமும் இடம் விடாமல், வீடு கட்டி விட வேண்டும் என்று எண்ணியிருந்தால், நீங்கள் நினைப்பது போல், கட்டி விட முடியாது. அதற்கும், சில விதிமுறைகள் உள்ளன.
பொதுவாக எவ்வளவு இடம் வைத்திருக்கிறீர்களோ, அந்த அளவில் வீடு கட்ட விதிமுறைகள் அனுமதிப்பதில்லை.
நான்கு பக்கங்களிலும், குறிப்பிட்ட இடம் விட்டு தான் வீடு கட்ட வேண்டும். எவ்வளவு இடம் விட வேண்டும் என்பது குறித்து, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்தால், ஒரு விதிமுறை, நகராட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்தால் ஒரு விதிமுறை, மற்ற உள்ளாட்சிக்கு என்று ஒரு வரைமுறை இருக்கும்.
வீடு கட்டும் போது, முதலில் இதை அறிந்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு இடத்தில் வீடு கட்டுகிறோம் என்பதை முடிவு செய்த பின், அதை பிளானாக மாற்றி சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சியில் அனுமதி பெற வேண்டும்.
வரைபடத்தில் எப்படி உள்ளதோ, அதுபோல் தான் வீடு கட்ட வேண்டும். வரைபடத்தில் இல்லாமல், இஷ்டம் போல் கட்டினால், அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது, நீங்கள் தான் பிரச்னையை சந்திக்க நேரிடும்.
வரைபடத்தில், மழை நீர் சேமிப்புக்கான வசதி இருக்கிறதா என்று, அதிகாரிகள் பார்க்க நேரிடும். மழைநீர் சேகரிப்பு அமைப்பு, வரைபடத்தில் இருந்தால் தான், வீடு கட்ட அனுமதி கிடைக்கும்.
அனுமதி பெற்று விட வேண்டும் என்ற எண்ணத்தில், மழை நீர் சேகரிப்பு அமைப்பை, ஒப்புக்கு என வைத்து விடக்கூடாது. அதுவும், முறையாக இருக்க வேண்டும்.
மாடியில் வீடு கட்ட வேண்டும் என்றால், எப்.எஸ்.ஐ. (ப்ளோர் ஸ்பேஸ் இண்டெக்ஸ்), விதிமுறைப்படி தான் கட்ட வேண்டும்.

