/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
பசுமையால் நம் வீட்டை 'லேமினேட்' செய்யலாம்! இல்லமும், உள்ளமும் புத்துணர்ச்சி பெறலாம்
/
பசுமையால் நம் வீட்டை 'லேமினேட்' செய்யலாம்! இல்லமும், உள்ளமும் புத்துணர்ச்சி பெறலாம்
பசுமையால் நம் வீட்டை 'லேமினேட்' செய்யலாம்! இல்லமும், உள்ளமும் புத்துணர்ச்சி பெறலாம்
பசுமையால் நம் வீட்டை 'லேமினேட்' செய்யலாம்! இல்லமும், உள்ளமும் புத்துணர்ச்சி பெறலாம்
ADDED : ஆக 31, 2024 12:41 AM

கேரள மாநிலத்தை கடவுளின் தேசம் என்று கூறுவார்கள். அதற்கு காரணம் அந்த மாநிலம் முழுவதும் பசுமை போர்வை போர்த்தியது போன்று இருக்கும். பறந்து விரிந்து காணப்படும் அந்த பசுமை, நம் கண்களுக்கு எவ்வளவு குளிர்ச்சியாக இருக்கும்.
மனிதிற்கு எந்த அளவுக்கு உற்சாகத்தை தரும் என்பதை அனைவரும் அறிவோம். பொதுவாக பச்சை நிறம் என்பது ஒரு நேர்மறையான வண்ணமாகும்.
நமக்கு 'பாசிட்டிவ் எனர்ஜி' தரக்கூடியது. அந்த காலகட்டத்தில் மனிதர்கள் தாங்கள் குடியிருக்கும் இடத்தை சுற்றி பல வகையான மரங்களை வளர்ந்து வாழ்ந்தார்கள்.
இதுகுறித்து, கோயம்புத்துார் சிவில் இன்ஜினியர்கள் சங்கம்(கொசினா) முன்னாள் தலைவர் சரவணன் கூறியதாவது:
காலம் செல்ல செல்ல குடியிருப்பு பகுதி குறைந்து ஏக்கர் கணக்கில் குடியிருந்த பகுதி, சதுர அடியாக குறைந்துவிட்டது. இருந்தாலும் மனிதரிடம் பசுமை சூழலில் வாழ வேண்டும் என்ற எண்ணம் அடிமனதில் இருந்துகொண்டே இருக்கும்.
நீங்கள் வீட்டை எவ்வளவு பெரிதாக வேண்டுமானாலும் கட்டலாம். ஆனால், அந்த வீட்டை சுற்றி குறைந்தபட்ச மரங்களையும், அழகிய செடிகளையும் வளர்த்தால் மட்டுமே முழுமையான வீடாக அமையும். பார்ப்பதற்கும் அழகிய தோற்றத்தை தரும்.
வீட்டின் முன்புறம் இடவசதி உள்ளவர்கள் எவ்வளவு இடம் உள்ளதோ, அதை அளந்து முறையாக நிபுணர்களின் அறிவுரையை கேட்டு, ஒரு பகுதி புற்கள் வளர்க்கும் தரைகளும், அதனிடையே அழகிய வண்ணங்கள் கொண்ட செடிகளையும் அமைக்கலாம்.
இதற்கென்று நிபுணத்துவம் பெற்ற பொறியாளர்களை திட்டமிடலுடன் நாடும் போது, குறைந்த இடத்தில்கூட அழகிய சுற்றுச்சூழலை உருவாக்கலாம். தற்போதைய காலகட்டத்தில் மனையின் விலைகள் அபரிமிதமாக இருப்பதால், ஆயிரம் சதுரடியில் வீடு கட்டுவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது.
இப்படியான சூழ்நிலையில் புல்வெளி அமைத்து வீட்டை உருவாக்குவது நடுத்தர மக்களுக்கு இயலாத காரியம்.
வீட்டின் முன்புறம் செம்பருத்தி, அரளி, பவள மல்லி, மருதாணி போன்ற வேர் பாதிக்காத மலர் செடிகளை வளர்க்கலாம்.
இவை அன்றாடம் பூஜை செய்வதற்கு உபயோகப்படுவதோடு, பார்ப்பதற்கு வண்ணமயமாகவும் இருக்கும். அதேபோல், முல்லை பூ, ஜாதி மல்லி போன்றவற்றையும் வளர்த்தால் மனதிற்கு இதமான நறுமணம் வீசும்.
பல வண்ணங்களில் இலைகள் கொண்ட 'குரோட்டன்ஸ்' செடிகளை தொட்டிகளில் வளர்க்கலாம். வீட்டின் உட்புறம் செடிகளை வளர்க்கும்போது சுவற்றின் வண்ணங்களை அதற்கு ஏற்ப வடிவமைக்க வேண்டும். நம்மில் பலர் காலங்காலமாக மாடித்தோட்டம் அமைத்துவருகின்றனர்.
இதனால் நமக்கு தேவையான காய்கறிகளை வளர்த்துக்கொள்ளலாம். இரண்டாவது நமது தரை தளத்தின் உட்புற வெப்பநிலை அளவை குறைக்கும். படிப்படியாக உள்ளும், புறமும், மேல்மாடி என, செடிகளை வளர்த்து பசுமையால் நமது வீட்டை 'லேமினேட்' செய்யலாம். அப்படி செய்தால் நமது இல்லமும், உள்ளமும் என்றும் புத்துணர்ச்சி பெறும்.
இவ்வாறு, அவர் கூறினார்.